இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860, குற்றவியில் நடைமுறைச் சட்டம் (Cr.PC)1898, இந்திய சாட்சிய சட்டம் (IEA) 1872 ஆகிய முப்பெரும் சட்டங்களும் ஆங்கிலேயர்கள் காலத்தில் இயற்றப்பட்டவை, அதனால் அவைகள் மாற்றப்பட வேண்டும் என்று காரணம் சொல்லி புதிதாக மூன்று சட்ட மதோதாக்களை கடந்த 11.8.2023 அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். ஆங்கிலேயர் காலத்து பழைய சட்டங்களை புதிதாக காலத்திற்கு ஏற்ற சட்டமாக கொண்டு வரவே இந்த புதிய மசோதாக்கள் என்று அமித்ஷாவும் ஆர்எஸ்எஸ் சங்கிகளும் கூறுகிறார்கள்.