செபி தலைவர் பதவி விலக வேண்டும்; அதானி மோசடியை உச்ச நீதிமன்றம் மறு விசாரணை செய்ய வேண்டும்.

18 மாதங்களுக்கு முன்பு அதானி மோசடி குறித்த ஹிண்டன்பர்க் புலனாய்வின் முதல் அறிக்கை இந்த உலகைக் குலுக்கியதுஅதனுடைய இரண்டாவது அறிக்கையோ சில வழிகளில் அதையும் விட மேலும் கூடுதலான அதிர்ச்சி தருவதாக உள்ளது. அந்த முதல் அறிக்கை அதானி குழுமத்தால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் கார்ப்பரேட் மோசடியை அம்பலமாக்கியதுமேலும் உலகின் பெரும் செல்வந்தர்களின் வரிசையில் இருந்து கெளதம் அதானியைக் கீழே தள்ளியதுஇந்திய நாடாளுமன்றம் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து மோடி-அதானி பிணைப்பு குறித்து கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன. இதற்கு எதிர்வினையாக அதனை தொந்தரவுக்குள்ளாக்கிய ஒவ்வொரு கேள்வியையும் இந்த ஆட்சி மௌனமாக்க விரக்தியுடன் முயற்சித்ததுஅதற்காக மிகவும் வெளிப்படையாக பதில்களைக் கோரிய எம்பிக்களை தகுதி நீக்கம் செய்வது, வெளியேற்றுவதுகைது செய்வது  வரைக்கும் கூட சென்றதுஅம்பானியும் அதானியும் காங்கிரசுக்கு கருப்புப் பணத்தை வாரி வழங்குகிறார்கள் என அவருடைய விரக்தி மிகுந்த தேர்தல் உரையொன்றில் வாய்தவறி குற்றம் சுமத்தும் வரையிலும் அதானி குறித்து மோடி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

சட்டத் தளத்தில் அதானி குழுமத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்ப்பரேட் மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை, உச்சநீதிமன்றத்தால் ஒரு நிபுணர் குழுவிற்கும்சந்தையை கட்டுப்படுத்தும் நிறுவனமான செபிக்கும் (இந்திய பங்குகள், பரிவர்த்தனை வாரியம்கடந்த ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 25, 2023 அன்று உச்ச நீதிமன்றத்தில் செபி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்ததுஅதன்படி 24 விசாரணைகளில் இரண்டு இன்னும் முடிவுக்காக காத்திருக்கிறது. ஆகதற்போது இந்த இரண்டாவது ஹிண்டன்பர்க் அறிக்கை செபி தலைவர் மாதவி பூரி புச்அவருடைய கணவர் தாவல் புச் குறித்து காத்திரமான கேள்விகளை எழுப்புகிறதுஅதன் காரணமாக இந்த ஒட்டுமொத்த விசாரணையின் நம்பகத்தன்மையும் பெரும் சந்தேகத்திற்குரியதாகிறதுஅண்மைய இரண்டாம் ஹிண்டன்பர்க் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள சட்டவிரோத பரிமாற்றத்தை அம்பலப்படுத்துபவர் (whistleblower) கொடுத்த ஆவணங்களின்படிபண  மோசடி செய்வதற்காக அதானி குழுமத்தால் மேலாண்மை செய்யப்படும் பெர்முடா, மொரிசியசை தளமாகக்  கொண்டு இயங்கும் கடல்கடந்த நிறுவனங்களில் மாதவிதாவல் புச் இருவருக்கும் பங்குகள் உள்ளன.

ஆகஸ்ட் 10 இல் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகுமாதவி, தாவல் புச் இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அடிப்படை உண்மைகளை அவர்களது பதிலுரை உறுதி செய்கிறதுமேலும் அவர்களது விளக்கமானது அளித்த பதில்களை விட அதிக கேள்விகளையே எழுப்பியிருக்கிறதுஅது மாதவி புச்சால் அமைக்கப்பட்ட சிங்கப்பூர், இந்திய நிறுவனங்களான சிங்கப்பூர் அகோரா பார்ட்னர்ஸ்அகோரா அட்வைசரி லிமிடெட் (இந்தியாஆகியவற்றின் இருத்தலை உறுதியும் செய்கிறதுமேலும் செபியின் அண்மைய சில முறைப்படுத்தல்களால் பயன்பெற்ற, உலகளாவிய தனியார் பங்கு நிறுவனமான பிளாக்ஸ்டோன்-உடன் தாவல் புச்சின் தொடர்புகளையும் அது உறுதி செய்துள்ளதுஅடிப்படை உண்மைகள் அனைத்தும் ஆதாரங்களைக் கொண்டுள்ளபோதுஹிண்டன்பர்க் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவற்றை 'தீய எண்ணம் கொண்டதுகெடு நோக்குடையதுஎனக் கூறி புச் குடும்பமும் செபியும் அவற்றை உதறித் தள்ளுவது சரியானதல்ல.

இந்தக் குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும்.செபியின் தலைவர் பதவியில் இருந்து மாதவி பூரி புச் பதவி நீக்கம் செய்யப்படுவதுவே தெளிவான முதல் நடவடிக்கையாக இருக்க முடியும்உச்ச நீதிமன்றத்தில் செபி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்செபியால் விசாரணை நடத்தப்பட்ட 22 வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தால் மறுதிறப்பு செய்யப்பட வேண்டும். இந்த ஒட்டுமொத்த விசாரணைக்கும் இறுதி அதிகாரம் படைத்த அமைப்பு செபிதான் என உச்ச நீதிமன்றம் கூறியதுஇருப்பினும் உச்ச நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பிறகும் கூட இந்த விசாரணை முடிவு பெறாமலேயே இருக்கிறதுஅதானி குழுமம் குறித்த முதல் ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி பங்குகளின் பெரும் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததுஅதனால் பல சில்லறை முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த இரண்டாவது அறிக்கை அதானி குழுமத்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் எதையும் எழுப்பாத போதிலும் கூடபத்து ஒருங்கிணைந்த அதானி பங்குகளின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பில் ₹53,000 கோடி இழப்புக்கு அது வழிவகுத்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கை அதானி குழுமத்தை விட அதிகமாக செபியின் நம்பகத்தன்மையையும்இந்திய பங்கு சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் தெளிவாகவே பாதித்துள்ளதுமேலும் இந்த செபி-அதானி இடையேயான தொடர்பு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே வளர்ந்து வந்திருக்கலாம். செபியின் முந்தைய தலைவர் திரு.யுகே சின்ஹா தற்போது அதானிக்கு சொந்தமான என்டிடிவி-யின் நிர்வாகப் பொறுப்பற்ற தலைவர் பதவியில் இருக்கிறார் என்பதையும் நாம் மறந்து விடவில்லை. செபியின் முன்பு அனைத்து அத்தியாவசியமான தகவல்களையும் தாங்கள் வெளிப்படுத்திவிட்டதாக மாதவிதாவல் புச் இருவரும் நம்மிடம் கூறிய போதும், அதானிக்கு தொடர்புடைய கடல் கடந்த நிதிகளில் செபியின் தலைவர் முதலீடு செய்த வரலாறு கொண்டிருக்கிற போதுஅவரது கணவர் பன்னாட்டு பங்கு நிறுவனம் ஒன்றின் மூத்த ஆலோசகர் என்ற அளவில் 'இந்தியத் தொழில் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த வாடிக்கையாளர்களுடன்' தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார் என்ற அந்த உண்மையே செபியின் செயல்பாடுகள் மீது எவ்வித நம்பிக்கையையும் நிச்சயமாக ஏற்படுத்தவில்லை.

மோடியின் காலத்தில் யுபிஎஸ்சி(ஒன்றிய அரசு தேர்வாணையம்முதல் தேர்தல் ஆணையம்செபி வரையிலும் ஒவ்வொரு நிறுவனமும் சமரசத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது; கைப்பற்றப்பட்டுள்ளதுஅதேவேளையில் ஒவ்வொரு புலனாய்வு நிறுவனமும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஆயுதபாணியாக்கப்பட்டுள்ளதுமுடிவுகள் வெளிப்படையாக தெரியும் போதுஅது இந்திய ஜனநாயகத்தின் நொறுங்கக் கூடிய நிலையாகவோ, அதிகரிக்கும் பட்டினிவீழ்ச்சியுறும் ஊடக சுதந்திரம் அல்லது மோசடியான கார்ப்பரேட் நிர்வாகம் என நிகழ்வுகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்அத்தகைய நிகழ்வுகளின் இழிவான நிலை கண்டு இந்த உலகம் விமர்சிக்கத் தொடங்கும் போது, அதனை சதி வேலையெனக் கூப்பாடு போட்டு இந்த ஆட்சி நசுக்க முயற்சிக்கிறது! அதிகரித்து வரும் இந்தியாவின் பொருளாதார சீரழிவுக்கு நிச்சயமாக ஹிண்டன்பர்க் மீது பழி சுமத்த முடியாதுஏனென்றால்அரசாங்கத்தின் சொந்த பொருளாதார ஆய்வறிக்கையே அதை ஏற்றுக் கொண்டுள்ளதுமோடி காலத்தில் நட்புசார் முதலாளித்துவத்தின் அதிர்ச்சிகரமான வளர்ச்சியில் செபியும் கூட உடந்தையாக இருக்கிறதென்றால்இந்த மோசடியின் அடியாழம் வரை சென்று பார்த்து இதற்கு பொறுப்பானவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதே இந்தியப் பொருளாதாரம், இந்திய மக்களின் நலன் சார்ந்ததாக இருக்க முடியும்.

தமிழாக்கம் - செந்தில்