போலீஸ்அரசுபாசிசகொடுங்கோல் குற்றவியல் சட்டங்கள்  திரும்பப் பெறப்பட வேண்டும்

ஜி.ரமேஷ்

 புதிய மொந்தைநஞ்சு கலந்தபழைய கள்

ஜூன் 25, இந்திய அரசமைப்புச் சட்ட படுகொலை நாள் என்று அறிவித்துள்ளார் மோடிஇந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஜூன் 25 அன்று நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நாள் அதுஅந்த நெருக்கடி நிலை காலத்தில்கூட முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் மாற்றியமைக்கப்படவோ, முற்றிலுமாக மாற்றப்படவோ இல்லைஆனால்கடந்த பத்து ஆண்டுகளாகஆட்சி நடத்திய மோடி அரசுஆங்கிலேயர் ஆட்சி காலத்திய குற்றவியல் சட்டங்களை மாற்றுவதாகச் சொல்லிக் கொண்டுஅவற்றில் இருந்த 90% பிரிவுகளை அப்படியே வைத்துக் கொண்டு பிரிவுகளின் எண்களை மாற்றியும் தடாபொடாஉபா போன்ற ஆள் தூக்கிகருப்புச் சட்டங்களில் இருந்த கொடூரமான பிரிவுகளைச் சேர்த்தும் சட்டங்களுக்கு சமஸ்கிருத உச்சரிப்பில் இந்திப் பெயர்களை வைத்து அவற்றை  2024 ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.  இந்திய தண்டனைச் சட்டம் 1860 (Indian Penal Code 1860) பாரதிய நியாய சன்ஹிதா 2023 (Bharathiya Niyaya Sanhita 2023) என்றும்  குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 (Criminal Proceedure Code 1973) பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 (Bharathiya Nagarik Suraksha Sanhita 2023) என்றும் இந்திய சாட்சியச் சட்டம் 1872 (Indian Evidence Act 1872) பாரதிய சாக்ஷிய அதிநியம் 2023 (Bharathiya Sakshya Adhiniyam 2023) என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுபுதிய மொந்தையில் நஞ்சு கலந்த பழைய கள். 2023ஆம் ஆண்டு டிசம்பர் 20, 21 தேதிகளில் இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் நடத்தப்படாமல்எதிர்க் கட்சி உறுப்பினர்களை வெளியே அனுப்பிவிட்டு மோசடியாகநிறைவேற்றப்பட்டன. புதிய சட்டங்கள் பற்றிய ஆய்வோவிவாதமோ, கருத்துக் கேட்போ நடத்தப்படவில்லைவழக்கறிஞர்களிடமும் கருத்துகள் கேட்கப்படவில்லை.

தண்டனைநீதி

இந்திய தண்டனைச் சட்டத்தைபாரதிய நியாய சன்ஹிதா அதாவது நீதிச் சட்டம் என்று பொருளாம்அதில் நீதியை விட எளிய மக்களுக்கு எதிரான அநீதிதான் அதிகம் உள்ளதுபுதிய சட்டப்பிரிவு 113 ன் படி தேசப் பாதுகாப்பு, இறையாளுமைதேச ஒற்றுமை என்ற பெயரில் போலீஸ் நினைத்தால் யாரையும்பயங்கரவாதி” என முத்திரை குத்திட வழி செய்துள்ளது. பிஎன்எஸ் பிரிவு 187 ஒருவரை போலீஸ் காவலில் பகுதி பகுதியாக 90 நாட்கள் வரை வைத்திருக்க வகை செய்துள்ளதுகுற்றவாளிகளுக்குத் தண்டனையாகசமுதாய சேவை’ சேர்க்கப்பட்டுள்ளதுஎது சமுதாய சேவைவிளக்கம் இல்லைமூன்றாம் பாலினத்தை பிஎன்எஸ் பிரிவு 8ல் சேர்த்துள்ளதாகப் பேசுகிறார்கள். ஆனால்அவர்களின் உரிமைகள் பற்றி ஒரு வார்த்தை இல்லை. பிரிவு 111ல் அமைப்பாக்கப்பட்ட குற்றம் (Organised Crime) என்று சொல்லப்பட்டுள்ளதுஇதன் மூலம் யாரை வேண்டுமானாலும் போலீஸ் குற்ற வளையத்திற்குள் சேர்த்துவிடலாம். அரசின் கொள்கைகளைகார்ப்பரேட் கொள்ளைகளை எதிர்த்து, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கமொழிமாநில உரிமைக்காக என எதற்கும் யாரும் போராட முடியாதுவாய் திறந்து பேசக் கூட முடியாது, அப்படி பேசினால் அது தீவிரவாதச் செயல் ஆகும்பிணையில் வரமுடியாத சிறைதான்வழக்கறிஞரிடம் பேசியிருந்தாலும் அவரையும் குற்ற வளையத்திற்குள் கொண்டு வருவதற்கு சட்டம் வழிவகுக்கிறதுஇந்திய தண்டனைச் சட்டத்தில் தேசத் துரோகக் குற்றம் என பிரிவு 124(A) என இருந்ததை நீக்கி விட்டதாகப் பெருமையாகச் சொல்லும் மோடி-ஷா கூட்டத்தினர்பிரிவு 124(A)  நீக்கிவிட்டதாகச் சொல்லிவிட்டு அதற்குப் பதிலாக இன்னும் கொடூரமான பிரிவு 152 (துரோகம்)ஐக் கொண்டு வந்துள்ளது.காவல்துறையினரிடம் எதிர்த்து கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால் குற்றம்போலீஸ் சொல்லும் எந்தவொரு செயலையும் செய்ய மறுத்தாலே சிறை நிச்சயம்வழக்கறிஞர்கள் கூட காவல் நிலையத்தில் போய் இனி பேச முடியாதுபிரிவு 226ன் படி உண்ணாவிரதம் இருந்தாலே தண்டனை வழங்கி சிறையில் அடைக்கலாம்அற வழியில் கூட யாரும் போராட முடியாது.

நடைமுறைபாதுகாப்பு

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை, குடி மக்கள் பாதுகாப்புச் சட்டம் என்று பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்வழக்குகளுக்கான நடைமுறைகள் தொடர்பான சட்டத்தை சில பிரிவுகளை மட்டும் மாற்றிவிட்டுஅர்த்தமே இல்லாமல் மக்கள் பாதுகாப்புச் சட்டம் என்று வைத்துள்ளார்கள்பழைய கு..ச சட்டப்படி குற்றம் சுமத்தப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் காணாமல் போய்விட்டால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்வரை சாட்சிகளை விசாரணை செய்ய முடியாது, வழக்கு நடக்காதுஆனால்தற்போது புதிய சட்டப் பிரிவு 335ன் படி குற்றம் சுமத்தப்பட்டவர் ஆஜராகவில்லை என்றாலும் சாட்சிகளை விசாரித்து தீர்ப்பே கொடுத்து விடலாம்.   இது   காவல்துறை   தனக்கு வேண்டியவர்களை நீதிமன்றத்திற்கே வரவிடாமல் வைத்துக் கொண்டு சாட்சிகளை விசாரித்து  சாதகத் தீர்ப்பு பெற்று விடலாம்வேண்டாதவர்களுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுத்துவிடலாம்பிரிவு 15ன் கீழ் அரசு நினைத்தால் காவல்துறை கண்காணிப்பாளரை (SP) சிறப்பு நிர்வாக நடுவராக நியமிக்கலாம்அரசமைப்புச் சட்டம் உறுப்பு 50 நிர்வாகத் துறையையும் நீதித்துறையையும் பிரிக்க வேண்டும் என்கிறதுஆனால்இச் சட்டத்தின் மூலம் நீதித்துறைக்கான அதிகாரத்தைப் பறித்து காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர் இல்லாமல் விசாரணை என்பது நீதிமன்றத்தின் மாண்பை, அதிகாரத்தைக் குறைக்கும் செயலாகும்குற்றவாளிகளுக்கு கைவிலங்கு போடக் கூடாதுஅது மனித உரிமை மீறல் என்கிறது உச்சநீதிமன்றம். புதிய சட்டப் பிரிவு 43(3) போலீஸ் யாருக்கும் கைவிலங்கு போட்டு அழைத்துச் செல்ல அதிகாரம் வழங்கியுள்ளதுஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டாலே அவரைக் குற்றவாளி என போலீஸ் அறிவித்து அவரது புகைப்படத்தை விளம்பரப்படுத்தமுடியும்புகார் வாங்கி 24 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் என்று இருக்கும் போதே எப்ஐஆர் போட மறுக்கும் போலீஸிற்கு 14 நாட்கள் வைத்திருந்து விசாரணை நடத்திய பின்னர் முதல் தகவல் அறிக்கை போட்டால் போதும் என்கிறது புதிய சட்டம். தவிர்க்க முடியாத சூழலில் தடியடிதுப்பாக்கிச் சூடு நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு வேண்டும் என்றிருந்ததைபுதிய சட்டம் பிரிவு 349ன் படி வட்டாட்சியரே உத்தரவு கொடுக்கலாம் என்று மாற்றியுள்ளது.

பிரிவு 170, 173 ஜீரோ எப்ஐஆர் என்ற பெயரில் நாட்டில் எந்தவொரு காவல்நிலையத்திலும் புகார் அளிக்கலாம் என்று மாற்றியுள்ளதன் மூலம் சங்கிகள் தங்கள் எதிரிகள் மீது இஷ்டத்திற்கு புகார் அளிக்க வழிவகை செய்துள்ளதுகைது செய்யப்பட்டவர்களை ரிமாண்ட்டில் வைக்க, பிணையில் விட போலீஸே முடிவு செய்யலாம்.இனிநீதிமன்றம் தேவையில்லை.   பிரிவு 349படி கைது செய்யப்படாத நிலையிலும் எவரிடமிருந்தும் கையெழுத்து, கைரேகைகுரல் மாதிரி ஆகியவற்றைப் பெற முடியும். 90 நாட்களுக்குப் பின்னரும்கூட போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரம் வழங்குகிறது பிரிவு 193. இதன்மூலம் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றால், சட்டப்படியாக பிணையில் வரும் வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது. நீதிமன்றத்தின் அதிகாரமும் பறிக்கப்பட்டு விட்டதுஇனி வீடியோ கான்பரன்ஸ் மூலம் குறுக்கு விசாரணை நடத்தலாம்இதனால் சாட்சிக்கு போலீஸ் மறைமுகமாக சொல்லிக் கொடுக்கலாம்.

சாட்சியம்

புதிய சாட்சிய சட்டப் பிரிவு 115, குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றத்தை அரசுதரப்புதான்காவல்துறைதான் நிரூபிக்க வேண்டும் என்று இருந்ததை இப்போது மாற்றி விட்டதுபோலீஸ் எவர் மீதும் குற்றம் சுமத்தலாம்குற்றம் சுமத்தப்பட்டவர்தான் தான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்கிறதுபிரிவு 22 காவல்நிலைய உதவி ஆய்வாளர்காவலருக்கு குற்றவாளியிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு அதிகாரம் அளித்துள்ளதுஇதன் மூலம் நீதித்துறை நடுவரின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது மட்டுமின்றிபோலீஸிற்கு கட்டுப்பாடில்லா அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக்டிஜிட்டல் முறையில் சாட்சியம் அளிக்கலாம்இந்த சாட்சி ஆவணங்களுக்கு கணினி இயக்கத் தெரிந்தவர்கள் கூட சான்று அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுஇவ்வாறு தொழில் நுட்ப வல்லுநர்கள் அல்லாதவர்கள் வழங்கும் சான்றாவணங்களை முதல் நிலை சாட்சியங்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறதுமோசடி ஆவணங்களுக்கு இனி பஞ்சமிருக்காது.

மாநில உரிமைகள்மொழிஉரிமைகள் பறிப்பு

பல மொழிகள் பேசக்கூடிய நம் நாட்டில் ஆங்கிலத்தில்தான் சட்டங்கள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 348 சொல்கிறதுஇதுபற்றி கேட்கும் போது சொலிசிட்டர் ஜெனரல், சட்டங்களில் பெயர்களை மாற்றியிருந்தாலும் அவை ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டுள்ளது என்கிறார். ‘சன்ஹிதா’ என்று ஆங்கிலத்திலோ, தமிழிலோ எழுதிவிட்டால் அது இந்தி ஆகாது என்கிறார்கும்பல் கொலை பற்றி பிரிவு 103(2) வரையறுக்கிறது. இதில் மதம் என்கிற வார்த்தை தவிர்க்கப்பட்டுள்ளதுஅதன் மூலம் இந்துத்துவக் கும்பல்களின் வன்முறைக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப் பிரிவு 69ன் மூலம் லவ் ஜிகாத்தை சங்கிகள் நடைமுறைப்படுத்த முடியும்.

ஒட்டு மொத்தத்தில் இந்த புதிய முப்பெரும் சட்டங்கள் போலீஸ் ஆட்சிக்கானதுஇந்தச் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில்தமிழ்நாடு அரசு நீதிபதி சத்யநாராயணா தலைமையில் ஆணையம் ஒன்றை நியமித்துபுதிய சட்டங்களில் திருத்தம் செய்வது பற்றி கருத்து வழங்கக் கேட்டுள்ளது. புதிய சட்டங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டுமேயொழிய அதில் மாற்றங்கள் செய்வது என்பது நிலைமயை இன்னும் மோசமாக்கும்ஒருவரைக் காலி செய்ய வேண்டும் என்றால் அவர் தலையில் கல்லைப் போடுஒரு பிரச்சனையைக் காலி செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரு கமிஷன் போடு என்று கலைஞர் சொல்வார். ஏற்கனவே இருந்த சட்டங்களிலேயே மக்களுக்குச் சாதகமான மாற்றங்கள் பல செய்ய வேண்டிய நிலையில்அதை மாற்றுவதாகச் சொல்லிக் கொண்டு பாசிச பாஜக மிகவும் கொடூரமான ஆள்தூக்கி அடக்குமுறைச் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இது ஏதோ வழக்கறிஞர்கள் தொடர்பானது அல்லமக்களுக்கு எதிரானது ஆகும்ஜனநாயகத்தைகுடியுரிமையைப் பறிக்கும் சட்டங்கள் ஆகும்காலனிய காலத்தை விடக் கொடூரமான இச்சட்டங்கள் முற்றிலுமாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் (AILAJ) எடுத்த முயற்சிகள்

இந்தக் கருப்புச் சட்டங்கள் மசோதாவாக வரும்போதே அவற்றினை எதிர்த்து அரசுக்கும் பார் கவுன்சிலுக்கும் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டதுநாடு முழுவதும் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் பார் கவுன்சில் தலைவரிடம் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் அதியமான் தலைமையில் மனு அளிக்கப்பட்டதுஇந்தச் சட்டம் 1.7.2024 முதல் அமல்படுத்தக் கூடாது என மற்ற சங்கங்களுடன் இணைந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டனதமிழ்நாட்டில் இச் சட்டங்களுக்கு எதிராக  வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழு(JAAC) நடத்திய பொதுக்குழுவில் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக தோழர்கள் கலந்து கொண்டனர். சிபிஐஎம்எல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து இச் சட்டங்களை ரத்து செய்ய கடிதம் அளித்துள்ளனர். (JAAC) அமைப்பு நடத்திய திருச்சி வழக்கறிஞர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். கர்நாடகா மாநில சட்ட அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. 25.7.2024 ல் திண்டுக்கல்லில் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. 29.7.2024ல் டெல்லியில் நடக்கும் பேரணிக்கும் AILAJ முழு ஆதரவினை தெரிவித்துள்ளது.