சர்வதேச உழைக்கும் பெண்கள் நாள்

"காஸா இல்லாமல் பெண்ணிய போராட்டம் இல்லை! காஸா இல்லாமல் எதிர்காலம் இல்லை" என்ற முழக்கத்துடன் காஸா மீதான தாக்குதலுக்கு எதிராக உறுதி ஏற்று சர்வதேச உழைக்கும் பெண்கள் நாள் 2024 தொடங்கியது. காஸாவில் கொல்லப்பட்ட 30 ஆயிரம் பேர்களுள் பெண்களும் குழந்தைகளுமே அதிகம். அந்தப் பகுதியிலுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான பொருட்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கவே செய்யும். முகாம்களில் உணவுப் பொருள் வழங்க பெரிய ட்ரக்குகள் வருகின்றன. பட்டினியால் தவிக்கும் மக்கள் அவற்றை நோக்கி ஓடுகிறார்கள்.

பெண்கள் மீது பிஜேபி தொடுக்கும் போர்

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிக்கும் 20 வயது மாணவியை மூன்று பேர் சேர்ந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கூட்டுப் பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்கிற செய்தி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், 2023ம் ஆண்டின் கடைசி நாளில்தான் வெளியே தெரிந்தது. இறுதியாக அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் பிஜேபி ஐடி செல்லைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பிஜேபி வாரணாசி ஐடி செல்லின் அமைப்பாளர். மற்றொருவர் துணை அமைப்பாளர்.

பில்கிஸ் பானோ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கு சாதகமானது: பில்கிஸ் பானோவின் அயராத போராட்டத்திற்குத் தலை வணங்குகிறோம் பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதை பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்!

பில்கிஸ் பானோ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நீதிக்கு சாதகமானதும் பில்கிஸ் பானோவின் அயராத போராட்டத்தின் விளைவும் ஆகும். இந்த முடிவுக்குப் பிறகு, பாலியல் வல்லுறவாளர்களைப் பாதுகாப்பதை பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவின் நீக்கம், எதிர்ப்புக் குரல்களை மவுனமாக்கும் மோடி அரசாட்சியின் வெட்கக்கேடான செயலாகும்

வெள்ளிக்கிழமையன்று மக்களவையிலிருந்து திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை நீக்கியிருப்பதன் மூலம் அதானியுடைய மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடியை அல்லது கார்ப்பரேட் போட்டிகளாலும் நேர்மையற்ற அரசியல் வழிமுறைகளாலும் உந்தப்படும் மோடி அதானி கூட்டை கேள்விக்குட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் சட்டப்பூர்வமற்றதாக்க மோடிஷா அரசாட்சி எந்தவொரு எல்லைக்கும் செல்லும் என தெளிவாக்குகிறது.