மக்கள் சந்திப்பில் ஓர் அனுபவம்

மக்கள் சந்திப்பு பரப்புரையின் ஒரு பகுதியாக அனைத்திந்திய விவசாயகிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் (AIRLA) சார்பாக திருநெல்வேலி மாவட்டத்தில்ஊராட்சி ஒன்றியங்களில் (பாப்பாக்குடிமானூர்பகுதிகளுக்கு உட்பட்ட கிராமபுறங்களில் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி திட்டத் தொழிலாளர்களை அவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் வேலைசெய்யும் இடங்களிலும் நேரடியாகச் சென்று சந்தித்து நூறுநாள் வேலைதிட்டக் கோரிக்கைகளை துண்டுப் பிரசுரம் விநியோகித்து 15 நாள்கள் பரப்புரை  நடைப்பெற்றது.

 நூறுநாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள்அரசு நிர்வாகத்தின்  உழைப்புச் சுரண்டல்ஊதியவெட்டுஅடிப்படை வசதியின்மை போன்ற அவலநிலையில் பணிபுரிந்து வருகிறார்கள்அந்த தொழிலாளர்களை நேரடியாகச் சந்தித்தபோது வேலை செய்யும் இடத்தில் அவர்கள் அனுபவிக்கின்ற இன்னல்களைமனக் குமுறல்களைக் கொட்டினார்கள்நூறுநாள் வேலைதிட்டத்தில் அரசு அறிவித்த சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.319. ஆனால் அரசாணைப்படியான சம்பளம் ரூ.319 எந்தவொரு கிராமத்திலும் வழங்கப்படவில்லைரூ240, 250, அதிகபட்சமாக ரூ.280தான் வழங்கப்படுகிறதுமேலும் தொழிலாளர்கள் குடியிருக்கும் இடத்திற்கும் பணிபுரியும் இடத்திற்கும்  இடையே 5முதல் 10 கிமீ வரை இருப்பதால் போக்குவரத்து செலவுக்கே ரூ40 ரூபாய் போய்விடுகிறதுவேலை செய்யும் இடத்தில் ஒவ்வொரு தொழிலாளியும் கட்டாயம்  5முதல் 10அடி நீளம்வரை தோண்டினால் மட்டுமே கூலி வழங்கப்படும்ஆனால்அவர்கள் வேலை செய்யும் சில இடங்களில் குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்கப்படுவதில்லைஅதுமட்டுமல்ல உணவு மற்றும் தேநீர் அருந்தும் இடைவேளை நேரங்களில் அமர்வதற்கு நிழலான இடவசதிகூட கிடையாதுஅவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற முட்செடிகளின் மீது கிழிந்த பாலிதீன் சாக்குகளைப் போட்டு அந்த நிழலில்தான் உணவு உட்கொள்கிறார்கள்கொத்தடிமை போல் தொழிலாளர்கள் நடத்தப்படுகிறார்கள்அவர்களின் அவல நிலை பற்றி தொழிலாளர்கள் தோழர்களிடம் கூறி கொண்டிருக்கும் போதேஎப்படி ஆங்கிலேய எஜமானர்கள் விசுவாசியான சில கங்காணிகள் வைத்திருந்தார்களோ அதேபோல் இப்போதுள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவரும் அரசாங்க அதிகாரிகளும் தங்களுக்கு விசுவாசமாக சில கங்காணிகளை வைத்துள்ளார்கள்அவர்கள் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசக் கூடாது என்றார்கள்பின்னர் பரப்புரை செய்யும் விவரம் பற்றி பஞ்சாயத்து தலைவர்அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினார்கள்.  பாப்பாக்குடி ஒன்றியம் கல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில்  பிரச்சாரம் நடைப்பெற்று வந்தபோது பஞ்சாயத்து தலைவர்  அயர்லா கல்லூர் பகுதி பொறுப்பாளர் தோழர் முப்புடாதியைத் தொடர்பு கொண்டுதேவையில்லாமல் பிரச்சாரம் செய்கிறீர்கள்கிடைக்கிற வேலையை கெடுத்து விடாதீர்கள்குடிக்க தண்ணி கூட கொண்டு வந்து உங்களால வேலை செய்ய முடியாதாநீங்கள் கல்லூர் பகுதியில் ஆர்ப்பாட்டம்  நடத்தக்கூடாது” என்று மிரட்டினார்பஞ்சாயத்து தலைவரின் மிரட்டலைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பிரச்சாரம் நடந்ததுஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர்களை திரட்டும் வேலையும் தொடர்ந்து நடந்ததுஅதனால் சங்கப் பொறுப்பாளரிடம் பேசி எந்தப் பயனும் இல்லை என்று தெரிந்து கொண்ட பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து  கிளார்க் மூலம் 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரடியாகப் போய்நீங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு சென்றால் உங்களுக்கான வேலை அட்டையை பிடுங்கி வேலை இல்லாமல் செய்து விடுவோம்” என வீடுவீடாக சென்று மிரட்டினார்கள்பஞ்சாயத்து தலைவர் எப்படியாவது ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி விடவேண்டும்என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டார்திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஆர்ப்பாட்டத்தன்று வேண்டுமென்றே தொழிலாளர்கள்ஆர்ப்பாட்டத்திற்குச் செல்வதைத் தடுக்கும் விதத்தில்  மாலைமணிக்கும் மேல் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டார்கள்பஞ்சாயத்துத் தலைவர் மிரட்டல் நடவடிக்கையையும் மீறி 17.10.2024 அன்று கல்லூர் கிராமத்தில் இரவுமணிக்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மன உறுதியோடும் உற்சாகத்தோடும் தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள். சுத்தமல்லிப் பகுதியிலும் இதே போல் பிரச்சனையை தோழர்கள் சந்தித்தார்கள்வேலைப் பகுதியில் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் நேரத்தில்  சந்திப்பதற்குக் கூட தலைவரின் அனுமதி பெற்று வர வேண்டும் என்று அங்குள்ள ஒருவர் கூறிதலைவருக்கும் தகவல் கொடுத்துள்ளார் ஆனால்தோழர்கள் அவருடன் பேசியபோது முதலில் எதிர்ப்பு காட்டியவர் பின்னர் எம்எல் கட்சித் தோழர்கள் என்றவுடன்  அமைதியாகிவிட்டார்.

இந்த பரப்புரை இயக்கமானது பாப்பாக்குடி ஒன்றிய பொறுப்பாளர்  வேலுமானூர்ஒன்றிய பொறுப்பாளர்  செல்வம் தலைமையில் நடைப்பெற்றதுஅந்த இயக்கத்தில் அயர்லா ஒன்றியக் கமிட்டி உறுப்பினர்கள் முப்பிடாதிமூக்காண்டிஆறுமுகம்வெயிலுமுத்து மற்றும் இகக(மாலெமாநிலநிலைக்குழு உறுப்பினர் சங்கரபாண்டியன்மாநிலக் குழு உறுப்பினர் கணேசன்மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்

சுந்தர்