பிரஜ்வல் ரேவண்ணா

ஆணாதிக்கசாதிவெறியின் பிம்பம்

  • மணி

இந்த நூற்றாண்டின் மாபெரும் பாலியல் வன்முறை கொடூரன் பிரஜ்வல் ரேவண்ணா.  முதல் கட்ட தேர்தலுக்கு முன்  ஏப்ரல் 22 இல் அந்தக் காணொளிகள் வெளியானதுஏப்ரல் 26 வாக்குப்பதிவு   முடிந்ததும் ஏப்ரல் 27 இல் அவன் வெளிநாடு தப்பி ஓடினான்.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் உள்ளிட்ட பெண்கள் கூட்டமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை கர்நாடக அரசு நியமித்து உள்ளதுபுகார் அளித்த இரண்டு பெண்களுள்   ஒருவரை கடத்திய குற்றத்திற்காக பிரஜ்வல் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்அவர் கைது செய்யப்பட்டபோது தேவேகவுடாவின் வீட்டில் இருந்தார்தேவகவுடா வீட்டிற்கு வந்து அவரை கைது செய்யும் தைரியம் காவல்துறைக்கு இருக்காது என்று நினைத்தார்ஆனால் காவல்துறை தேவகவுடா வீட்டிற்கு உள்ளே சென்றும் கைது செய்வோம் என தகவல் கொடுத்ததால் ரேவண்ணா வெளியில் வந்து கைதாக வேண்டியதாகி விட்டது.

பிரஜ்வல் பாலியல் கொடூரங்கள் மழையாகப் பொழிந்தது ஏப்ரல் 22 என்றாலும் ஓராண்டாகவே தூறல் விழுந்து கொண்டிருந்தது.  பிரஜ்வல் ரேவண்ணாவை வேட்பாளராக அறிவிப்பதற்கு மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித்  தலைவர்களும் பாஜக தலைமையும் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி அவரை நாடாளுமன்ற வேட்பாளராக தேவகவுடா அறிவித்தார்.

பிரஜ்வல் நிகழ்த்திய பாலியல் கொடுமைகள் வெளி வந்தபின் அவரின் சொந்த ஊரான ஹோலே நரசிப்பூர் மக்கள் மத்தியில் ஒரு பக்கம் கொதிப்பும் இன்னொரு பக்கம் பீதியும் நிலவுகிறது.  ஹாசன் மாவட்டம்  ரேவண்ணா குடும்பத்தின் இரும்புப் பிடிக்குள் இருக்கிறது.  ஹோலே நரசிப்பூர் சட்டமன்ற உறுப்பினராக தேவகவுடா 27 ஆண்டுகளாகவும் ரேவண்ணா 24 ஆண்டுகளாகவும் இருந்தார்கள்ஹாசன் மாவட்டத்தில் ரேவண்ணா குடும்பம் வைத்ததுதான் சட்டம்.  அதை ஒரு தனி குடியரசு போல நடத்தி வந்தனர்.

ரேவண்ணாவை அவர் வீட்டிலோ அலுவலகத்திலோ பார்க்க வருபவர்கள் நின்று கொண்டு தான் பேச வேண்டும். எல்லோரையும் ஒருமையில் அழைப்பதுதான் பிரஜ்வலின் வழக்கம்பார்க்க வருபவர்கள் உட்கார நாற்காலிகள் கூட இல்லாத அலுவலகம் அதுஅந்தக் கால அரசவைகள் கூட இந்த அளவிற்கு மோசமாக இருந்திருக்கவில்லைஅந்தக் குடும்பம் ஜாதி வெறியின் பிம்பம்தலித் மக்களுக்கு அந்தக்  குடும்பம் இழைத்த கொடுமைகள் எண்ணற்றவை.

கர்நாடக மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 இல் நடந்ததுஏப்ரல் 27 இல் பிரஜ்வல் ஜெர்மனிக்கு ஓடி ஒளிந்தான்பிரஜ்வல் விவகாரம் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவை எந்த அளவுக்கு பாதிக்கும் என்ற விவாதங்கள் நடந்தனமதச்சார்பற்ற ஜனதா தளத்தின் செல்வாக்கு குறைந்த வட மாவட்டங்களில் ஒரு பெருத்த தாக்கம் இருக்காது என்பது பலருடைய கருத்து.

இந்தப் பிரச்சனை மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியை பாதிக்காதா என்ற கேள்வியும் எழுந்துள்ளதுபிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சனையின் தாக்கத்தைக் குறைத்து இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி கருதுகிறதுபாஜகவிற்கு பிரிஜ் பூஷன் அனுபவம் தைரியம் அளிக்கிறதுபலவீனமான மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் நின்றால் அந்தக் கட்சியின் சமூக அடித்தளமான ஒக்கலிகா சமுதாயத்தின் ஒரு பகுதியை தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம் என்பது பாஜகவின் அரசியல் கணக்கு

இந்தப் பிரச்சனை வெளிவரும் முன்பே பாஜகவின் பலம் இந்தத் தேர்தலில் குறைந்துள்ளது என பரவலாக நம்பப்படுகிரது. 2019 தேர்தலில் பாஜக 26 இடங்களும் காங்கிரஸ் ஒரு இடமும் மஜத ஒரு இடமும் (அந்த இடத்தின் எம்.பி தான் பிரஜ்வல் ரேவண்ணாபெற்றிருந்தனர்அது போன்ற வெற்றியை இப்போது பெற முடியும் என்று பாஜகவே நம்பவில்லைபாஜகவால் பாதிக்கு மேல் இடங்களைப் பெற முடியாது என சொல்லப்படுகிறது

இந்தத் தேர்தலைத் தாண்டிபுரையோடிப் போயிருக்கும் நிலவுடைமைக் கட்டமைப்பை அசைத்துத் தகர்க்கும் பணி ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகள் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால்.