கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒற்றுமை காலத்தின் தேவையாக உள்ளது

தோழர்களே! கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும் நிலவுடமைக்கெதிராக, நிலப்பிரபுத்துவத்திற்கெதிராக, ஆணாதிக்கத்துக்கெதிராக மிகப்பெரிய போராட்டங் களை நடத்தியுள்ளன. இந்தப் போராட்டங்களில் தங்கள் இன்னுயிரை இழந்த தியாகிகளுக்கு என்னுடைய செவ்வணக்கத்தைத் தெரிவித்துக் கொள் கிறேன். உலக வரலாற்றில் முக்கியமான தருணத்தில் உங்கள் மாநாடு நடைபெறுவதால் அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மனித குலத்தின் கருவான கொள்கைகள் சவாலுக்கு உட்படுத்தப்படுவதை நாம் எதிர்கொண்டு வருகிறோம். முடிவே இல்லாத முதலாளித்துவ பேராசை, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் பாசிசம் ஆகியவற்றை நாம் எதிர்கொள்கிறோம். சமூகநீதி சீர்குலைக்கப்படுகிறது.

இந்துத்துவ பாஜக ஆட்சிக்கு எதிரான உண்மையான மாற்று இடதுசாரிகள்தான்

பஞ்சாபில் நடைபெற்ற 10ஆவது காங்கிரஸிலிருந்து இப்போது நடைபெறும் 11ஆவது காங்கிரஸ் வரை நாங்கள் உங்களோடு இருக்கிறோம். ஒன்றிய மோடி ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்தின் மீதான, குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் அதிகரித்திருக்கிறது. தொழிலாளர் வர்க்க விரோத, கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை இந்த அரசாங்கம் மிகவும் வெளிப்படையாக அமலாக்கம் செய்து வருகிறது.4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் கடும் போராட்டத்தின் விளைவாக ரத்து செய்யப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களுக்கான உதாரணங்களாகும். வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, வறுமையால் மக்கள் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இகக(மாலெ)யின் 11வது காங்கிரசின் பொது அமர்வில் பொதுச் செயலாளர் தோழர் திபங்கரின் துவக்க உரை

மாநாட்டுத் தலைமை தோழரே, பிரதிநிதித் தோழர்களே, பார்வையாளர்களே, இந்தியாவில் உள்ள பல்வேறு இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களே, வெளிநாட்டில் இருந்து வந்துள்ள சகோதரத்துவ அமைப்புகளின் தலைவர்களே, ஊடக நண்பர்களே, இங்கே கூடியிருக்கும் பாட்னாவின் குடிமக்களே, இகக(மாலெ)யின் 11வது மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாநாட்டில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து, ஆயிரத்து எழுநூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் கலந்து கொண்டுள்ளதால், இது நமது கட்சி வரலாற்றில் மிகப்பெரிய காங்கிரஸ் ஆகும்.

‘ஜனநாயகத்தைக் காப்போம், இந்தியாவைக் காப்போம்' பேரணி 15.02.2023 காந்தி மைதானம், பாட்னா

1. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி யின் அரசு சலுகைசார் முதலாளித்துவத்தை ஹிண்டன் பர்க் அறிக்கை அம்பலப் படுத்தியுள்ளது. பாஜகவை ஆட்சியில் தக்க வைக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பணத்தை வாரி இறைத்தன; பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டன; இதில் நாட்டின் ரயில்வே, எஃகு நிறுவனம், வங்கிகள், எல்ஐசி, மற்ற பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையும் அடங்கும்.

இகக(மாலெ) விடுதலை 11வது அகில இந்திய மாநாடு 2023 பிப்ரவரி 15-20, பாட்னா- பீகார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் 11வது காங்கிரஸ் (அகில இந்திய மாநாடு) 2023 பிப்ரவரி 15-20 தேதிகளில் நடைபெற்றது. பீகார் தலைநகர் பாட்னா செங்கொடிகளாலும் செம்பதாகைகளாலும் சிவப்பு மயமாக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 15 பாட்னாவின் காந்தி மைதானம் மக்கள் திரளால் தினறியது.

தலையங்கம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய அடுத்த அவதூறுப் பிரச்சார ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார். இப்போது அவர் கார்ல் மார்க்ஸை நேரடியாகக் குறி வைத்துவிட்டார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவைச் சிதைத்துவிட்டது என்கிறார். கூடவே டார்வினையும் வம்புக்கிழுக்கிறார். 'இழப்பதற்கு ஏதுமில்லை, அடிமை விலங்கைத் தவிர, அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது, உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்று கூறி மானுட குலம் தழைத்தோங்க வறுமையில் வாடிய மாமேதை கார்ல் மார்க்ஸ். அவரைப்பற்றி ஆயிரக்கணக்கான பணியாளர்களுடன் ராஜ் பவனில், மக்கள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் ஆர்.என்.ரவி பேசுகிறார்!.

பழனியில் ஆபத்தான வெடிமருந்து தொழிற்சாலை விவசாயிகள் எதிர்ப்பு இயக்கம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வடக்கு தாதநாயக்கன் பட்டி கிராமத்தில், பழனி வடக்கு மலைத் தொடர் அடிவாரத்தில், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த அமராவாதி வனப்பகுதிக்கு அருகில், 250 ஏக்கர் பரப்பளவில், வருடத்திற்கு 2,191 டன் வெடி பொருட்களுக்கான மூலப்பொருட்களைத் தயாரிக்கும் சுவா எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஆலையைத் துவக்க பல்வேறு அரசு முகாமைகள் அனுமதி அளித்துள்ளன. தனியார் கார்ப்பரேட் ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ள பகுதிக்கு மிக அருகில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐவர் மலை, சமணர் குகைகள், வரலாற்றுச் சின்னங்கள், அகழ்வாய்வு தளங்களும் உள்ளன.

குடியரசு நாளில் என்எல்சிக்கு எதிராக கருப்புக் கொடி?!

1956ல் தொடங்கப்பட்டது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். தமிழ்நாட்டின் பெருமையாகவும் வளர்ச்சியாகவும் பேசப் பட்டது. ஆண்டுக்கு ரூ 11,900 கோடி லாப மீட்டு கிறது என்எல்சி. ஆட்சியாளர்கள், "நவரத்னா" நிறுவனம் என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் விரிவு படுத்தியுள்ளனர். இப்போது, நெய்வேலி நிறுவனத்தை இந்திய நிறுவனமாக மாற்றியும் விட்டனர். பல தனியார் முதலைகளின் கண்ணை உறுத்துகிறது என்எல்சி இந்தியா!

அம்பலமான அதானியின் அசுர வளர்ச்சியும் மோடி வித்தையும்!

இந்திய நாட்டின் வளர்ச்சியை விரும்பாத வர்கள், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போட நினைப்பவர்கள் அதானி குழுமத்தின் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்றும் இது இந்தியாவின் மீதான திட்டமிட்ட தாக்குதல் என்றும் நாங்கள் இந்த நாட்டின் நலனிற்காகவே பாடுபடுகிறோம் என்றும் அதானி குழுமத்தால் பல பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் விளம்பரம் போடப்பட்டுள்ளது.