ஆர்எஸ்எஸ் அதன் நூற்றாண்டுக்குள் நுழைகிறது:நவீன இந்தியாவின் மீதான தடையற்ற பாசிசத் தாக்குதலின் நெடுங்கதை

  ஆர்எஸ்எஸ் இப்போது அதனுடைய நூற்றாண்டுக்கு முந்தைய ஆண்டுக்குள் நுழைகிறதுஆர்எஸ்எஸ் அதன் நூற்றாண்டை எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பற்றி சில விரிவான கருத்துகளை 99 ஆவது நிறுவன நாள் அல்லது விஜயதசமி நாள் உரையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நமக்கு தருகிறார்இருப்பினும் அதன் கருவில்மிகவும் அடிப்படையான செயல்பாட்டு வழிமுறையில் ஆர்எஸ்எஸ் ஒரு சதிகார அமைப்பு என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதன் கருத்தியல் பிரகடனங்களும்பொதுவெளியில் அது வெளிப்படுத்தும் கூற்றுகளும் ஒரு மேலோட்டமான பார்வையை மட்டுமே நமக்குத் தருகிறது. ஆனால்முன்னெப்போதும்  இல்லாத அதிகார நிலையிலிருந்து ஆர்எஸ்எஸ் இப்போது செயல்படுகிறது; அதனால் இன்னும் ஏராளமானவற்றை வெளிப்படுத்துவதற்கான வசதி வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாகப் பார்த்தால்மோடி அரசாங்கத்துக்கும் பரந்த சங்கிப் படையின் செயல்பாட்டிற்கும் இடையே ஒரு ஒருங்கிணைக்கும் மையமாக அல்லது ஒரு பாலமாக ஆர்எஸ்எஸ் விளங்குகிறது என்பது தெரியும்.

ஆர்எஸ்எஸ்இன் மையக் கருப்பொருளாக இருப்பது இந்து ஒருங்கிணைப்பேயாகும்அந்த இலக்கை அடைவதற்கு அது ஒரே நேரத்தில் இந்துகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும்  இந்துகளின் பெருமைஅதிகாரம் என்றும்  இரட்டைச் சீட்டுகளைக் கொண்டு களமாடுகிறதுசர்வதேச வளர்ச்சிப் போக்குகள் குறித்து கூறும்போது பகவத்தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு  இஸ்லாம் ஆக்கிரமிப்புஇந்துக்களுக்கு ஆபத்து என்று தனக்கேற்றவாறு திரித்துக் கூறுகிறார்குழந்தைகளை, பெண்களைக் கொன்று ஓராண்டு காலமாக இஸ்ரேல் நடத்திவரும்  பாலஸ்தீன இனப் படுகொலை  அவருக்கு இஸ்ரேல்-ஹமாஸிற்கு இடையேயான முரண்பாடுவங்கதேசத்தில் நடந்த  மக்களின் எழுச்சியானதுஇஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளை அதிகாரத்திற்கு கொண்டு வர நடத்தப்பட்ட வன்முறை ஆட்சிக் கவிழ்ப்பு என்றார்அதேமூச்சில், வங்கதேச மக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவுவது ஆபத்து   அது இந்தியாவின் மக்கள் தொகையில்  சமமற்ற நிலையை ஏற்படுத்தும் என்கிறார்இப்படி தர்க்கரீதியான கேள்விகளை மட்டுமே எழுப்பும் பகவத்  அவற்றுக்கு பதில் அளிப்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படமாட்டார்.

மக்கள்தொகை தரவுகள் பற்றிய ஒரே நம்பத்தகுந்த ஆதாரம் என்பது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் கணக்கெடுப்பு மட்டுமே. மோடி அரசாங்கமோ வாட்ஸ்அப் பல்கலைக்கழக வதந்தி ஆலைகள் உருவாக்கும் பொய்யான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வைத்து குழப்பிக் கொண்டேயிருப்பதற்காக  2021 ஆம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பை கவனமாகத் தவிர்த்து வருகிறதுமோடியின் ஆட்சி காலத்தில் எல்லை தாண்டி ஊடுருவல் நடக்கிறது என்றால்நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்கான அதிகாரமும் கடமையும் மோடி அரசாங்கத்திடமே இருக்கும் போது, அதற்கான பொறுப்பை நிச்சயமாக அவரது அரசாங்கம்தானே ஏற்க வேண்டும்வங்க தேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் ஆட்சி செய்வதால் அங்குள்ள இந்துக்களுக்கு பெரும் ஆபத்து நேரிடும்  என பகவத் கூறுகிறார்அப்படியென்றால் வங்கதேச முஸ்லிம்கள் அல்லவங்கதேச இந்துக்களே இந்தியாவுக்குள் நுழைவார்கள் என்றுதானே இந்தியா எதிர்பார்க்க வேண்டும்இந்துக்கள் என்றால் அகதிகள்அதுவே வங்கதேச முஸ்லீம்கள்  என்றால்  'ஊடுருவல்காரர்கள்' என்று அவர்களுக்காகவே ஒதுக்கி வைத்துள்ளார்கள்இது சங்கிகளின் சொல்லகராதி பழக்கமானவர்களுக்குப் புரியும்இருப்பினும் இந்தியப் பொது மக்களை ஏமாற்றவும் அச்சுறுத்தவும் வங்கதேச ஊடுருவல்காரர்கள் என்ற பூச்சாண்டியை ஆர்எஸ்எஸ் தொடர்ந்து பயன்படுத்துகிறது.

அனேகமாக உலகளாவிய அனைத்து ஒப்பீட்டுக் குறியீடுகளிலும் இந்தியாஅபாய கட்டத்தில்  இல்லையென்றாலும்வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று காட்டும்போதுகூட மோடி ஆட்சியில்  இந்தியா அனைத்து முனைகளிலும் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது என நாம் நம்ப வேண்டுமென மோகன் பகவத் விரும்புகிறார். உலக பட்டினிக் குறியீடுபசி தொடர்பான உலகளாவிய வரைபடத்தில் இந்தியாவை மோசமான கவலைக்குரிய இடத்தில்தான் மீண்டுமொருமுறை வைத்திருக்கிறது.127 நாடுகள் உள்ள  இந்த பட்டியலில் வங்கதேசம்நேபாளம்இலங்கை ஆகிய நாடுகளுக்கு பின்னால் 105 ஆவது இடத்தில்தான் இந்தியா உள்ளது. பகவத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்குள் நடைபெறும் எதிர்ப்பு இயக்கங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு தொல்லைகளும் தடைகளுமே ஆகும்உண்மையில் அவர், 'நாட்டின் வடமேற்கு எல்லைப் பகுதிகளான பஞ்சாப்ஜம்மு-காஷ்மீர், லடாக்கடல் எல்லைப் பகுதிகளான கேரளா, தமிழ்நாடுபீகார் முதல் மணிப்பூர் வரையிலான ஒட்டுமொத்த (பூர்வாஞ்சல்கிழக்கு பகுதியும் என இந்தியாவின் பிரச்சனைக்குரியவை என்கிறார்ஒரு பகுதியை பிரச்சனைக்குரிய பகுதி என்று சொன்னால் அங்கு ஜனநாயகத்தை முழுவதுமாக முடக்கி வைப்பதற்கும்மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படப் போவதற்குமான முதல் படியாகும்நாட்டை தொல்லைக்குட்படுத்தவும் சீரழிக்கவும் சிதைக்கவும் முயற்சிகள் அனைத்து திசைகளில் இருந்தும் உந்துதலை பெறுகின்றன என பகவத் நமக்குச் சொல்கிறார்.

மாற்றுக் கருத்துகளுடன் ஒவ்வொரு சர்வாதிகாரிக்கும் பிரச்சனை இருப்பது போலவேஆர்எஸ்எஸ்-ன் ஒவ்வொரு அடையாளத்துடனும் சவால்களைச் சந்திக்கும் அதன்  கருத்துடனும் அதற்கு பிரச்சனை உள்ளது. அல்லது அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும் ஆர்எஸ்எஸ் அதனை பொருத்தமுடையதாக்கத் தவறிவிட்டதுகோல்வால்கரின் காலத்தைப் போலல்லாது பகவத்தால் ஒற்றை அரசுஅதிபர் முறை ஆகியவற்றுக்கு ஆதரவாக வெளிப்படையாக அழைப்பு விடுக்க முடியாமல் இருக்கலாம்ஆனால் தனித்த அடையாளங்களையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் போட்டி இயல்பையும் கட்டுப்படுத்துவதற்கான ஆணைகளை ஆர்எஸ்எஸ் பிறப்பிக்க முடியும்  என அவர் நம்புகிறார். 'செயற்கை அடையாளங்'களை உருவாக்குவதாகவும் இந்திய கலாச்சார மரபு, தேச நலன்கள் என அவர் அழைப்பவற்றுக்கு ஒவ்வாத அந்நிய கருத்துகளை இறக்குமதி செய்வதாகவும் 'விழிப்புணர்வுவாதம்' (wokeism), 'கலாச்சார மார்க்சியம்ஆகியவற்றின் மீது பழி சுமத்திய அவருடைய 2023 உரையை திரும்பவும் அவர் நிகழ்த்துகிறார்பகவத்தின் இலட்சிய இந்தியாவில் கௌரி லங்கேஷ்ஸ்டேன் சுவாமிஜி.என்.சாய்பாபா அல்லது உமர் காலித் போன்ற மாற்றுக் கருத்துடையவர்களுக்கு இடமில்லை; எவ்வித 'மாற்று அரசியலுக்கும்இடமில்லை. அப்படியென்றால் சமூக மாற்றம்ஒருங்கிணைந்த நீதிதிறன்மிக்க சமத்துவம் ஆகியவை பற்றிய ஒவ்வொரு பார்வையும் முழுவதுமாக ஒழித்துக் கட்டப்படும் என்றே அதற்கு அர்த்தமாகும்.

பலவீனமானவர்களை கடவுளும் கூட காப்பாற்ற மாட்டார் என பகவத் கூறுகிறார்வேறு வார்த்தைகளில் கூறினால் சிறுபான்மையினர் விளிம்பு நிலை குழுக்கள் ஆகியோர் மீதான தாக்குதல்கள் தற்போது தெய்வீகக் கடமையாக புனிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ்-ன் 99ஆம் ஆண்டு விழாவில் பகவத் தனது உரையில், பலவீனமானவர்களைத் தாக்குவதுபன்மைத்துவத்தை நொறுக்தித் தள்ளுவது, மாற்றுக் கருத்துக்களை சட்டவிரோதமாக்குவதுபெரும்பான்மையை தேசத்தோடு இணைத்து குழப்புவது என்ற பாசிச ஒழுங்கின் திட்ட வரைபடத்தை மறைக்க முயற்சிக்கவில்லைஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு பயணம் குறித்து வெளியிடும் போதுவரவிருக்கும் மகாராஷ்டிராஜார்கண்ட் தேர்தல்கள் குறித்தும் பகவத் நன்றாகவே அறிந்து வைத்துள்ளார் என்பது உண்மைதான். எனவே கோவில் கட்டுமான பணிக்காக அறியப்படும் மராத்தா கூட்டமைப்பின் ஹோல்கர் குடும்ப ராணி அகில்யா பாய் அவர்களின் 300 வது பிறந்த ஆண்டு விழா, சங்கி கதையாடலில் அவருடைய காலனிய எதிர்ப்பு வரலாறும் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக பழங்குடியின மக்களின் எதிர்ப்பு போராட்டம் என்ற தற்போதைய பின்னணியும் பறிக்கப்பட்ட பிர்சா முண்டாவின் 150 ஆவது பிறந்த ஆண்டு விழா, தியோகரின் அனுகுல்சந்திரா-வால் அமைக்கப்பட்ட சத்சங்கத்தின் நூற்றாண்டு விழா ஆகியவை ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவோடு ஒரே நேரத்தில் வருகிறது என நமக்கு நினைவுபடுத்தப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட போது, வெளிப்படையாக அதனை நிராகரித்த ஒரு அமைப்பு இன்று அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75வது ஆண்டு விழாவை நாம் அனுசரிக்கும் வேளையில் குடியரசின் எதிர்காலத்திற்கான விதிகளை நிர்ணயிக்கிறதுஇதுதான் அம்பேத்கர் முன்னுணர்ந்து நம்மை எச்சரித்த மாபெரும் பேரழிவாகும்இந்தப் பேரழிவை வென்று கடக்க இந்தியக் குடியரசும் அதன் மக்களும் தங்களது அனைத்து உள்ளார்ந்த வலிமையையும் துணிவையும் நிச்சயமாக வரவழைக்க வேண்டும்.