இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அம்பேத்கர் சுடர் விருது

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் உள்ளிட்ட பெருந் தலைவர்கள் பெயரில் விருது வழங்கி வருகிறது. 2023ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் சுடர் விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் அவர்களுக்கு அளித்து கவுரவித்துள்ளது. விருது வழங்கு நிகழ்ச்சி மே 28 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கண்டனம்

இந்திய நாட்டில் உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அல்லது சாதாரண குடிமக்கள் கூட நாடு முழுவதும் சென்று அரசியல் இயக்கங்களில் பங்கு பெறுவதற்கும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களைக் கட்டமைப்பதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உரிமை வழங்கி உள்ளதை, அரசியல் அமைப்புப் பொறுப்பு வகிக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் சற்றும் நாகரீகம் இன்றி தோழர் திருமாவளவன் பற்றி கருத்துக்களை வெளியிட்டு இருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும்.

திமுகவின் இரண்டாண்டு ஆட்சி

திமுகவின் இரண்டாண்டு ஆட்சியை, "ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டு ஆட்சி" 'ஆண்டது ஈராண்டு ஆளப்போவது நூறாண்டு" என்றும் கொண்டாடப்படுகிறது. திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென்றும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

பாஜகவுக்கான தென்னிந்தியாவின் நுழைவு வாயில் மூடப்பட்டு விட்டது!

மக்கள் விரோத, பிரிவினைவாத பாஜகவுக் கும் சங் பரிவாரின் சூழ்ச்சிகளுக்கும் கர்நாடக மக்கள் தீர்மானகரமான தோல்வியை அளித்ததற்கு இகக(மாலெ) பாராட்டுகளைத் தெரிவிக்கிறது. 2024ல் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு இந்த வெற்றி ஒரு முன்னோட்டமாக அமைய வேண்டும்.

கள்ளச் சாராய வியாபாரிகள் - காவல்துறை கூட்டு முறியடிக்கப்பட வேண்டும்!* *தமிழ்நாட்டில் முழுமையான மது­வி­லக்கு வேண்டும்!* *இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) வலியுறுத்தல்*!

தமிழ்நாட்டில் நேற்று இருவேறு இடங்களில் நடைபெற்ற கள்ளச் சாராய விற்பனையால் குடித்த 14 பேர் பலியாகி உள்ளனர். 
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் உயிரிழப்பு, 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல, செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்தாமூரில் 5 பேர் உயிரிழப்பு 7 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வரலாற்றில் தடம் பதித்த 11ஆவது கட்சிக் காங்கிரஸ் சொல்லும் செய்தி

இதுதான் இகக(மாலெ) விடுதலையின் 11ஆவது கட்சிக் காங்கிரஸின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியும் அரசியல் முழக்கமும் ஆகும். கட்சி அணிகளுக்கும் அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் நாடெங்கிலுமுள்ள போராடும் மக்களுக்கும் ஒரு மிகத் தெளிவான அழைப்பாகும்.-ஒரு நீண்ட கால புரட்சிகர கண்ணோட்டத்தில் இன்று நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மிகவும் அவசரமான அரசியல் பணிகளாக ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகும்.

பாசிஸ்டுகளுக்கு ஒரு சரியான அடியை கர்நாடகா வழங்கட்டும்

முக்கியத்துவம் வாய்ந்த 2024 நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மே 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, இந்த ஆண்டு மேலும் ஆறு சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. கடந்த இரண்டு பத்தாண்டுகளாக, பாசிசப் படை யணியின் தெற்கு நோக்கிய பயணத்திற்கான முக்கிய ஆய்வகமாக கர்நாடகம் உருவாகி யுள்ளது. 2014ல் மத்தியில் மோடி ஆட்சி அரியணை ஏறியதன் மூலம் அதிகாரம் பெற்ற பாசிச சக்திகள், புகழ்பெற்ற பகுத்தறிவு சிந்தனையாளர் எம்.எம்.கல்புர்கி, சமூக ஆர்வலரும் பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலையின் மூலம் தங்கள் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத் தினர்.

கட்சி துவக்க நாள் உறுதிமொழி

ஏப்ரல் 22, 2023 இகக(மாலெ) தோற்று -விக்கப்பட்டதன் 54வது ஆண்டு. இந்த தருணத்தில், தோழர் சாருமஜும்தாருக்கும் கட்சியை தோற்றுவித்த மற்ற தலைவர்களுக்கும் கட்சியை வலுப்படுத்தவும் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் கடந்த 54 ஆண்டு களாக தங்களது அனைத்தையும் தியாகம் செய்தவர்களுக்கும் புரட்சிகர அஞ்சலியை செலுத்துகிறோம். ஏப்ரல் 22, உலகின் முதல் சோசலிச புரட்சியின் முதன்மை சிற்பியும் மார்க்ஸ் எங்கல்சுக்குப் பிறகு மார்க்சிய தத்துவம், நடைமுறையின் ஆகச் சிறந்த பிரதிநிதியுமான தோழர் லெனினது பிறந்த நாளுமாகும்.

மோடி ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்படும் தங்கு தடையற்ற அவசரநிலையை எதிர்ப்போம்

திரிபுராவில் குறுகிய வெற்றியில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்ட மோடி அரசாங்கம், இந்தப் பாசிச ஆட்சியின் அடையாளமாக மாறியுள்ள தெரு அதிகாரம், பரப்புரை, அரசு அதிகாரம் ஆகியவற்றின் கொடிய சேர்க்கையை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முழுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

நீதிக்கான போராட்டத்தில், ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் ஒன்று சேருவோம். அதுதான் தோழர் சந்திரபோசுக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலி

அனைவருக்கும் வணக்கம்!

தோழர் சந்திரபோஸ் நினைவஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள கட்சி சிவகங்கை மாவட்டத் தலைமைக் குழுவுக்கு பாராட்டுகள்.

தோழர் செந்தமிழ், இது கந்தக பூமி என்று சொன்னார். இந்த பூமியை எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடித்துக்கொள்ளும் என்று சொன்னாரா? எப்படி வேண்டுமானாலும் தீப்பிடித்துக்கொள்ளும் என்று சொன்னாரா? எப்போது வேண்டுமானாலும் தீப்பிடித்துக் கொள்ளும் என்று சொன்னாரா? தெரியவில்லை. அவர்தான் சொல்ல வேண்டும்.