நாம் அனைவரும் விடுதலைப் போராட்டத்தின் மதிப்புகளைப் போற்றி, உயர்த்திப்பிடித்து சமூக நீதிக்கான இலக்கை அடைவோம்!

மரியாதைக்குரிய மாநாட்டு தலைவர் அவர்களே, சக பேச்சாளர்களே, சமூக நீதிக்காகப் போராடும் அனைத்து எனது நண்பர்களே!

இந்திய மக்கள் முன்னால் இருக்கக் கூடிய மிக முக்கியமான இந்த நிகழ்ச்சி நிரலில் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு எங்களை அழைத்ததற்காக எமது சிபிஐ எம் எல் கட்சியின் நன்றியையும் இந்த இரண்டாவது மாநாட்டிற்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாச்சாத்தி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை, சிபிஐஎம்எல் கட்சி வரவேற்கிறது!

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் மீது, கடந்த 1992ல் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை வழக்கில் தர்மபுரி அமர்வு நீதிமன்றம் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 215 குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனைகளை வழங்கியது. அதன் மீது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை சிபிஐஎம்எல் கட்சி வரவேற்கிறது.

மணிப்பூர் கொடூரங்களை மன்னிக்க மாட்டோம்! மோடி ஆட்சியை விரட்டும் வரை ஓயமாட்டோம்!! சிறப்பு மாநாடு

2023 செப்.15, மாலையில் நாகர்கோவில் சிவகாமி அம்மாள் கல்யாண மண்டபத்தில் இகக (மாலெ) சார்பில் “மணிப்பூர் கொடூரங்களை மன்னிக்க மாட்டோம்! மோடி ஆட்சியை விரட்டும் வரை ஓயமாட்டோம்!!" என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இகக(மாலெ) குமரி மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.அந்தோணிமுத்து தலைமை தாங்கினார். இகக(மாலெ) மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம், மாநில நிலைக்குழு உறுப்பினர் க.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இகக(மாலெ) மாநில நிலைக்குழு உறுப்பினர் சுசீலா வரவேற்புரையாற்றினார்.

செப்டம்பர் 2-13 மக்கள் சந்திப்பு பரப்புரைப் பயணம்

கிராமப்புர மக்களின் நிலம், வேலை,கூலி, கவுரவம், ஜனநாயகம் கோரிக்கைகளை வலியுறுத்தும் பரப்புரைப் பயணம் தோழர் சந்திரகுமார் பிறந்த ஊரான பெருந் தோட்டத்தி லிருந்து 2023 செப்டம்பர் 2 அன்று தொடங்கியது. தரிசாக கிடக்கும் நிலத்தை உழைக்கும் மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கை மீது உற்சாக மிக்க பெருந்திரள் கிளர்ச்சியால் ஊக்கம் பெற்று முன்னணி தோழர்கள், மயிலாடுதுறை மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர் குணசேகரன் தலைமையில் தியாகிகள் சுடரேந்தி பயணத்தைத் தொடங்கினர்.

தோழர்கள் சந்திரகுமார்சந்திரசேகர், சுப்பு தியாகிகள் பெயரால் உறுதி ஏற்போம்! கார்ப்பரேட் காவிப்பாசிசத்தை தோற்கடிப்போம்!!

தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராக.. பாட்டாளி வர்க்க விடுதலைக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மிகப்பெரிய விலை கொடுத்தது வரலாறு. '40 கள் தொடங்கி '60 கள் வரை செங்கொடி ஏந்திய பல தலைவர்கள், தொண்டர்கள் பலர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

தோழர்கள் வாட்டாக்குடி ரணியன் களப்பால் குப்பு, இன்னும் பலர் நிலவுடைமை ஆதிக்கத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் உச்சமாக, கீழ் வெண்மணியில் பெண் கள், குழந்தைகள், ஆண்கள் என 44 விவசாயக் கூலிகள் குடிசையில் வைத்து கொளுத்தப் பட்டார்கள்.

மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை உருவப்படம் திறப்பு- அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்வு

மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை அமைப்பு குழு ஒருங்கிணைத்த, மார்க்ஸ் உருவப்படம் திறப்பு - அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்வு டாக்டர் அம்பேத்கர் திடல் விசிக அலுவலகத்தில் ஆகஸ்ட் - 12, 2023 அன்று பேராசிரியர் தோழர் அ. மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது. மார்க்ஸ் உருவப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர்  ஆர்.நல்லக்கண்ணு திறந்து வைத்தார். விசிக தலைவர் தோழர் தொல். திருமாவளவன் எம்.பி, அவர்கள் மார்க்ஸ் அஞ்சல் தலை வெளியிட்டார்.

பெங்களுருவில் கூடிய எதிர்க்கட்சிகள் சொல்லும் செய்தி

பெங்களுருவில் எதிர்க்கட்சிகளின் வெற்றிகரமான இரண்டாவது கூட்டமும் இந்தியா (ஐஎன்டிஐஏ) என்ற பெயர் சுருக்கத்துடன் ஒரு புதிய கூட்டணியின் தோற்றமும் மோடி ஆட்சியை திடுக்கிடச் செய்துள்ளது எனத் தெளிவாகவே தெரிகிறது. இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் புதிய கட்சிகளைக் கண்டுபிடித்தும் உற்பத்தி செய்ததன் மூலமும் டெல்லியில் அதே நாளில் ஒரு இணையான 'கூட்டணி'யின் காட்சியை அரங்கேற்ற வேண்டும் என்ற கடும் முயற்சியில், இந்த ஆட்சியின் அதிகரித்து வரும் பதற்றம் தென்படுகிறது.

பாரதிய ஏதேச்சதிகார கட்சியாக உருமாறிவிட்ட பாரதிய சனதா கட்சி

பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் என்பது சரியான திசையில் முன்னெடுக் கப்பட்டுள்ள வரவேற்கத்தக்க ஒன்றாகும் என இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் கூறினார். இந்த பிப்ரவரி மாதம் பாட்னாவில் நடைபெற்ற இகக(மாலெ)யின் 11வது கட்சிக் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் பரந்த ஒற்றுமைக்கான யோசனைக்கு விதைபோட்டது. அதன் அதிர்வையும் விரிவாக்கத்தையும் இந்தக் கூட்டத்தில் காணமுடிகிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மற்றும் நிகழ்ச்சிநிரலுக்காக தொடர்ந்து கொண்டிருக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகளின் இக் கூட்டம் ஒரு அடுத்த கட்ட நகர்வாகும்.

வேர்களிடம் செல்வோம்! வேரூன்றுவோம்!

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை கூர்மைப் படுத்திட வேண்டுமானால், கட்சிக் கிளைகளை, ஊராட்சிக் (உள்ளூர்) கமிட்டிகளை பலப்படுத்திட வேண்டும் என கட்சி மத்திய கமிட்டி அறைகூவல் அறைகூவல் விடுத்து இருக்கிறது. மே 25, நக்சல்பாரி நினைவு நாள் முதல் ஜூலை 28 வரை அதை சடங்குத் தனமாக அல்ல. ஒரு பெரும் இயக்கமாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறது. ஜூலை 28, தியாகிகள் நினைவு நாளன்று அனைத்து கிளைகளும், கிளை உறுப்பினர்களும் கூடி, பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திட, கட்சிக் கிளைகளை வலுப்படுத்திட சபதம் ஏற்றிட வேண்டும் என திட்டமிட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கப் போராடிய எம்எல் கட்சி தோழர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்ததற்குக் கண்டனம்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் நீண்டகரை பி. கிராமத்திற்குட்பட்ட சர்வே எண்:919யில் 25 சென்ட் நிலத்தை ராஜமோகன் என்பவரும் 10 சென்ட்நிலத்தை போலிச்சாமியார் அய்யப்பனும் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு 04.04.2023ம் தேதியன்று மனு கொடுக்கப்பட்டது. மனு மீது நடவடிக்கை எடுக்காமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தனர். எனவே, ஆக்கிரமிப்பாளர்ளை அகற்றிட 11.05.2023ம் தேதியன்று மேற்படி ராஜமோகன் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.