தோழர் திபங்கர் - நேர்காணல்மூத்த இதழியலாளர் ஊர்மிலேஷ் அவர்களுக்கு

தோழர் திபங்கர்நேர்காணல்

[மூத்த இதழியலாளர் ஊர்மிலேஷ் அவர்களுக்கு பீகார் அரசியல், தேர்தல் நிலவரம் குறித்து சிபிஐஎம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் அவர்கள் அளித்த நேர்காணல்]

டிஎம் கிருஷ்ணா - கலை - இலக்கிய விடுதலைக் குரல்!

கர்நாடக இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணாவிற்கு 2024 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி பட்டம் மியூசிக் அகாடமியால் வழங்கப்பட இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அவருடைய "ஆற்றல்மிகு குரலுக்கான" அங்கீகரிப்பாக, கர்நாடக இசைக் கலையை "அதன் இறுக்கமான சட்டகங்களுக்குள் வைத்திருப்பதற்கு மாறான பரிசோதனை முயற்சிகளுக்காக", மேலும், கர்நாடக இசையை "சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக" பயன்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என மெட்ராஸ் மியூசிக் அகாடமி தலைவர் என் முரளி குறிப்பிட்டிருந்தார். 

 

நாங்களும் இடதுசாரிகள்தான்

நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு மாலெ தீப்பொறி பத்திரிகை ஆசிரியர் ஜி.ரமேஷ் மற்றும் தீப்பொறி பத்திரிகைக் குழுவினர் தோழர் பாலசுந்தரம், தோழர் ரஞ்சனி, தோழர் ஜோஸ்வா ஆகியோர் சந்தித்துப் பேசிய உரையாடலின் முதல் பகுதி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 41 ஆண்டு பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

விடுதலை சிறுத்தைகள் கட்சி, நான் தலைமை ஏற்றபிறகு, தொடக்கத்தில் ஒரு சமூக நீதிக்கான இயக்கமாக, சமூக இயக்கமாகவே பயணத்தைத் தொடங்கியது.

ஏழைகள் ஜனநாயகத்தைப் பற்றி புரிந்து கொள்ள மாட்டார்கள் என பாஜக நினைக்கிறது!

இகக(மாலெ) பொதுச்செயலாளர் திபங்கரின் அரசியல் ஈடுபாடு, கொல்கத்தாவின் பிரசித்திப் பெற்ற இந்திய புள்ளியியல் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்றபோது துவங்கியது. மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தின்போது ஜோதி புன்யானியுடன் நடைபெற்ற உரையாடலின் போது, 'புல்டோசரை எதிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் அதோடு மோதித்தான் ஆகவேண்டும்' என்றார்.

பாஜகவை விவரிக்கும்போது 'பாசிஸ்ட்' என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நீங்களும் கூட அதைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், இந்தக் கருத்தாக்கத்தை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்வீர்கள்?

அலைகுடா குவாராவிற்கு வரவேற்பு

புரட்சியாளர் சேகுவாராவின் மகள் அலைடா குவாரா இந்தியாவிற்கு வந்தபோது டெல்லியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், இகக பொதுச் செயலாளர் து.ராஜா, இகக(மா) பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, ஆர்ஜேடி நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, கியூபாவின் தூதர் அலெக்ஸாண்டர் சிமன்காஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் பேசிய அலைடா, பொருளாதார தடை பற்றி பேசுவது எளிதானது. ஆனால், அதை நேரில் அனுபவிக்கும்போதுதான் அது எவ்வளவு கஷ்டமானது என்பதை உணரமுடியும் என்றார். அவர் மேலும் நாங்கள் பொருளாதாரத் தடைக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் என்ற முன்மொழிவு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறையின் அடிப்படை உணர்வுகளை அரித்துப்போகச் செய்யும்: இகக(மாலெ)

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான சட்ட ஆணையத்தின் கடிதத்திற்கு இகக(மாலெ) அளித்துள்ள பதிலில் இந்த முன்மொழிவு அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானது, ஜனநாயகத் துக்கு விரோதமானது என்று சொல்லி கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. ஒரே சமயத்தில் தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி முறைக்கும் சாவு மணி அடிக்கிற செயலாகும்.

சுடும் எதார்த்தமும் போராட்ட உணர்வும்

'ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு நீதான அனுப்பின உம் பையன'. காலேஜ் படிக்கும் தன் மகன் அப்பார்ட்மெண்ட் செப்டிக் டேங்க் கழுவச் சென்று விஷ வாயு தாக்கி இறந்து விட்டான் என்பதை நம்ப முடியாமல் என் மகனைக் காட்டு, அவனைக் காட்டுங்கள் என்று கதறும் தூய்மைப் பணியாளரான தாயிடம் அரசாங்க ஆஸ்பத்திரியில் அடாவடியாகப் பேசுகிறது போலீஸ். மலக் குழி மரணம். புகார் வாங்கக் கூட மறுக்கும் போலீஸ், கம்ப்ளைண்ட் எதுக்கு? என்ன பண்ணப் போறீங்க? எதுவும் நடக்காது. பேசி முடிச்சா கொஞ்சம் பணமாவது கிடைக்கும் என்கிறது. இன்னொரு பக்கம், மாநகராட்சி அலுவலகம்.