பிரதமர்இந்திய தலைமை நீதிபதி இடையேயான நட்புறவு:

இந்தியக் குடியரசின் எதிர்காலத்திற்கான அபாய அறிகுறி

 இந்தியாவின் பல புதிய வழக்கங்களில், அமைப்பாக்கபட்ட விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட அந்தரங்க மத நிகழ்ச்சியில் பங்கேற்க, தலைமை நீதிபதியை அவரது இல்லத்தில் பிரதமர் சந்திப்பதும் கூட தற்போது வழக்கமாகி விட்டதுவிநாயகர் சதுர்த்தி நிகழ்வின்போது பிரதமர் மோடி மஹாராஷ்டிர தொப்பியை அணிந்து கொண்டு இந்தியத் தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் விநாயகருக்கு வழிபாடு செய்தது தற்போது சர்வதேச செய்தியாகி உள்ளது.

பிரதமர் இந்த ஒரே கல்லில் பல மாங்காய்களை நிச்சயமாக வீழ்த்தி விட்டார்இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை என்ற சொல் முழுவதும் சிதைக்கப்பட்டுவிட்டது என இந்த உலகுக்கு தெரியப்படுத்த, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்புவிழாவில் நடத்தப்பட்ட செங்கோல் சடங்கு முதல், அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டராமர் கோயிலின் முழுவதும் அரசியலாக்கப்பட்டகுடமுழுக்கு’ வரை கிடைக்கும் எந்த வாய்ப்பையும் அவர் ஒருபோதும் தவறவிடுவதில்லைபெரும்பான்மை சமூகத்தினரின் மதப்பிரிவுமதச்சார்பற்ற இந்திய அரசு எனப்படுவதன் உண்மையான மதமாக தற்போது ஆகிவிட்டதுஇந்தத் தொடர் வரிசையின் அண்மைய வெளிப்பாடு தான் தலைமை நீதிபதி வீட்டில் நிகழ்த்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி ஒளி ப்பட (போட்டோநடவடிக்கையாகும்.

இந்த ஒட்டுமொத்த நிகழ்விலும் தவறாகக் கருதமுடியாத மகாராஷ்டிரா கோணமும் உள்ளதுவிநாயகர் சதுர்த்தி இந்தியாவின் பல மாநிலங்களிலும் அதிகரித்த அளவில் கடைப்பிடிக்கக் கூடியதாக இருப்பினும் இது மகாராஷ்டிராவிற்கே உரித்தான விழாவாகும்அவருடைய குறிவைக்கப்பட்ட முதன்மையான பார்வையாளர்களாக மகாராஷ்டிரர்களையே அவர் மனதில் நினைத்துக் கொண்டிருந்தார் என்ற உண்மையை மறைக்க நரேந்திர மோடி எவ்வித முயற்சியையும் செய்யவில்லைஅவருடைய எக்ஸ் பக்கத்தில் ஆங்கிலத்துடன் கூடமராட்டியிலும் இந்த செய்தியை அவர் பதிவு செய்திருந்தார். மோடியின் ஒவ்வொரு பிற ஒளிப்பட நடவடிக்கையையும் போல இந்த நடவடிக்கையும் தேர்தல் கணக்கீடுகளால்தான் இயக்கப்பட்டுள்ளது என்பதை சொல்ல வேண்டிய தேவையுமில்லை. மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல்களுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளது.

நீதித்துறையின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் தனக்கு இருக்கிறது என்ற செய்தியையும் கூட மோடி இதன் மூலம் சொல்லியுள்ளார். நிர்வாகத்துறைசட்டமியற்றும் துறைநீதித்துறை ஆகியவற்றுக்கிடையில் அதிகாரத்தை பிரித்து வைப்பது என்ற கருத்தாக்கம், நீதித்துறையின் சுதந்திரம் குறித்த கோட்பாடுநீதிபதிகள் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும்ஆட்சியாளர்களிடம் இருந்து ஆரோக்கியமான இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் என்ற வழக்கம், இவையனைத்தும் குப்பை தொட்டியில் வீசப்பட்டாகிவிட்டதுஅழைக்கப்படாமலே ஒரு பார்வையாளராக பிஎம் கலந்து கொண்டாரா அல்லது சிஜேஐ மூலம் அழைக்கப்பட்டிருந்தாரா என்பது குறித்து அநேகமாக நமக்கு ஒருபோதும் தெரியாமல் போகலாம்இருந்தபோதிலும் பரவலாக அறியப்பட்ட அந்த ஒளிப்படமும் காணொளியும் தாக்குதல்தன்மை வாய்ந்த ஆட்சியாளர்களின் முன்னே நீதித்துறை பின்வாங்கி சென்று விட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றாக என்றும் நிலைத்திருக்கும்.

மோடியின் கணக்கீடுகள் எளிதாக புரிந்து கொள்ளதக்கதாக இருக்கிறபோதுசிஜேஐ-யின் நெருக்கடி புரிந்துகொள்ள கடினமான ஒன்றாகும்ஜனநாயகத்தின் பிற தூண்களை கீழ்நிலைப்படுத்துவதன் மூலம் அதிக அதிகாரங்களை கைப்பற்றிக் கொள்ளும் ஆட்சியாளர்களின் தாக்குதல்தன்மைக்கு நீதித்துறை உடந்தையாகிவிட்டது என்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளதுஅதற்கு மாறாகமதிப்பீடு செய்வதில் சிஜேஐ தவறிழைத்து விட்டார் என்ற அவருக்கு ஆதரவான கோணம் முதல் இந்த வழக்கத்திற்கு மாறான பிஎம்சிஜேஐ பிணைப்பை புரிந்துகொள்ள முயற்சிப்பதற்கு விமர்சகர்கள் வேறு பல விளக்கங்களையும் வழங்குகிறார்கள்.

ஒவ்வொரு தனித்த நிகழ்வு குறித்தும் முழுமையான விளக்கங்கள் நம்மிடம் இல்லாத போதிலும் நீதித்துறையும் தற்போதைய அரசியல் நிறுவனமும் சந்திக்கும் புள்ளியை சுற்றியுள்ள சூழல் கவனிக்கத் தவற முடியாதளவு மிகவும் முக்கியமானதாகும். பொதுமக்களின் நினைவுகளில் ரஞ்சன் கோகாய் அத்தியாயம் இன்னும் கூட நீங்காமல் உள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்குலி பாஜகவில் சேருவதற்காக முன்னதாகவே ஓய்வு பெற்றுஏற்கனவே மேற்கு வங்கத்திலிருந்து பாஜக எம்பியாகி விட்டது அண்மைய நிகழ்வாகும்கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் பல்வேறு பிற நீதிபதிகளும் பதவி ஓய்வுக்கு பிறகு தங்களது ஆர்எஸ்எஸ் தொடர்பை அறிவித்துள்ளனர். நீதித்துறையில் ஆர்எஸ்எஸ் இன் இந்த ஊடுருவலும் அதன் விளைவாக சங்கிப் படையணியின் பாசிசத் தாக்குதலை நோக்கி வளர்ந்துவரும் நீதித்துறையின் மென்மையான போக்கு அல்லது பாசிசத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவதும் கூட நமது காலத்தின் அதிர்ச்சிக்குரிய எதார்த்தமாகும்.

அன்றொரு நாள் நீதித்துறையில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விஹெச்பியின் ஒருநாள் கருத்தாடல் (brainstorming) அமர்வில் இரண்டு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 30 முன்னாள் நீதிபதிகள் கலந்து கொண்டனர்ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூட இந்த அமர்வில் உரையாற்றினார். அது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவும் செய்திருந்தார். விசித்திரமாக இந்த மூடிய கதவுக்குள் நடைபெற்ற அந்தரங்க நிகழ்வில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களின் அடையாளங்களை வெளிப்படுத்திய இந்தப் பதிவை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டது தவறென விஹெச்பியின் தலைவர் அலோக் குமார் தற்போது கூறுகிறார். குமார் கூறியதன் அடிப்படையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா, கோயில்களை கையகப்படுத்துவதுமதமாற்றம்இன்ன பிற, உள்ளிட்ட சங்கிக் குடும்ப நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியவை இந்த அமர்வில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளாகும்.

குற்றவியல் சட்டங்களிலும் நடைமுறைகளிலும் பெரும் மாற்றங்களை மோடி அரசாங்கம் ஏற்கனவே செய்துள்ளதுமேலும் தேர்தல் பத்திரங்களின் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் இறுதியில் செய்தது போலநிர்வாகத்துறையின் ஆணைகளைத் தலைகீழாக மாற்றியமைக்கவோ அல்லது தடுக்கவோ  வேண்டிய பல்வேறு முக்கிய பிரச்சனைகள் நீதித்துறையின் முன்னால் உள்ளன.

இந்தப் பின்னணியில் தான் பிஎம்-சிஜேஐ நல்லிணக்கம் பார்க்கப்பட வேண்டும்பிணையே விதியாகும்சிறை விதிவிலக்காகும்என்ற கோட்பாட்டை சிஜேஐ சந்திரசூட் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்மேல் நீதிமன்றங்களால் பிணைகளுக்குத் தடை வழங்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக பிணை வழங்க மறுப்பதற்காக கீழமை நீதிமன்றங்களை அவர் கண்டிக்கவும் செய்கிறார்ஆனால் உமர் காலித்தின் விசயத்தில் உமரின் பிணை மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தால் பதினான்கு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை நாம் பார்த்துள்ளோம். மனுதாரர் தனது பிணை மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டு உயர்நீதிமன்றத்திற்கு திரும்பும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்எந்த நீதிமன்றத்தைக் கண்டு உச்ச நீதிமன்றம் அஞ்சுகிறது? அச்சத்தின் குடியரசாக இந்தியாவை மாற்றுவதற்கு முயற்சிக்கும் ஆட்சியாளர்கள் தங்களது புல்டோசர் மாதிரி ஆட்சி நிர்வாகத்துடன் வெறியாட்டம் போடுகின்றனர். இவ்வேளையில் ஆட்சியாளர்களின் தலைவருக்கும் நீதித்துறையின் தலைவருக்கும் இடையேயான இந்த நல்லிணக்கம்இந்தியக் குடியரசின் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை குறியாக மட்டுமே பார்க்கப்பட முடியும்.

தமிழாக்கம் செந்தில்