பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!
   
கடந்த 74வது சுதந்திரநாள் உரையில் மோடி, நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர் முதலா ளிகள்: அவர்களை கவுரவப்படுத்துவதே அரசின் முதன்மையான கடமை என்றார். அதற்கேற்ப மூர்க்கத்தனமாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறார்.

காவிப் பாசிசத்தை வீழ்த்திடுவோம்! புதியதோர் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடுவோம்!

மோடி ஆட்சியின் அடக்குமுறைகளும், மோசடிகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக சங்கிகளின் ஆட்சி, மோடி என்கிற தனிநபரின் ஆட்சி என்பதாக இந்திய ஜனநாயகம் சர்வாதிகாரமாக, பாசிசமாக மாறி வருகிறது. சர்வாதிகாரம், யதேச்சாதிகாரம் என்பன அடிப்படையில் அரசு எந்திரத்தை பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். பாசிசம் என்பது அரசு எந்திரத்தோடு கூடவே, தனியார் படைகளை, அரசு சாராத படைகளை, அரசு சாராத கும்பல்களைப் பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். இதுவும் கூட பாசிசத்தின் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.

ஆகஸ்ட் 01, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இடதுசாரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 01, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CPIML கட்சி மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி கண்டன உரை ஆற்றினார். அ.வி.கி.தொ.ச மற்றும் அ.வி.ம.ச சார்பில் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய மாநில அரசுகளே!

தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை, நாள் கூலி ரூ.600 உயர்த்திட வேண்டும்.

வீடு, நிலம், வழங்கிட நில சீர்திருத்த சட்டத்தை செயல்படுத்திடு!

55 வயது கடந்த அனைவருக்கும் ஒரு ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்கிடு!