நரேந்திர மோடியின் 72 ஆவது பிறந்த நாளுக்கு முந்தைய நாள் செப்டம்பர் 16 அன்று, அவரின் நெருங்கிய முதலாளித்துவ நண்பர் கௌதம் அதானி போர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர் பட்டியல் படி உலகத்தில் மூன்றாவது பணக்கார நிலைக்கு தள்ளப்படுவதற்கு சற்று முன்பு உலகில் இரண்டாவது பணக்காரராக சொற்ப காலம் இருந்தார். அவர் 152.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இருக்கும்போது அவருடைய நெருக்கமான உலகளாவிய போட்டியாளர்களாக பிரான்ஸ் நாட்டு தொழில் அதிபர் பெர்னார்டு அர்னால்ட்டும் அமெரிக்க தொழில் முனைவோரும் அமேசான் இணைய வணிக தளத்தின் நிறுவனருமான அமேசான் ஜெப் பேசோஸ்ம் இருக்கின்றனர். அமெரிக்க தொழில் முனைவோரும் டெஸ்லா மின்சார கார் உற்பத்தி நிறுவன தலைமை செயல் அலுவலருமான எலான் முஸ்க் 273.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். அதானிதான் இன்று ஆசியாவின் முதல் பணக்காரராவார். அதானி முகேஷ் அம்பானியை விட கூடுதலாக 50 பில்லியன் சொத்துக்களோடு அவரை இந்தியாவில் தொலைதூர இரண்டாம் இடத்திற்கு தள்ளி விட்டார்.
பண்ட வணிக நிறுவனமாக 1988ல் துவங்கப்பட்ட அதானி குழுமம் இன்று துறைமுகங்கள், சிறப்பு பொருளாதார மண்டலம், சாலைகள் முதல் விமான நிலையங்கள், எரிசக்தி, எரிவாயு, வேளாண் வணிகம், சேமிப்புக் கிடங்கு இன்னும் எல்லாவற்றிலும் என்று இந்தியாவின் மிகப்பெரிய உள்கட்டுமான குழுமமாக வளர்ந்துள்ளது. அதானியின் அபரிதமான பொருளாதார வளர்ச்சியை நரேந்திர மோடியின் அரசியல் வளர்ச்சியுடன் தான் ஒப்பிட முடியும். சொல்லப்போனால், இரண்டும் ஏக காலத்தில் நடந்தேறியிருக்கின்றன என்பது மட்டுமின்றி, இரண்டுக்கும் நெருங்கிய கூட்டும் உள்ளது. 2001 குஜராத் நிலநடுக்கத்திற்கு பிறகு மோடி குஜராத்தில் முதலமைச்சரானார். நிலநடுக்கத்திற்கு பிந்தைய குஜராத்தில் மறு கட்டுமானத்தினூடே சொத்துக்களையும் மூல வளங்களையும் அபகரித்ததன் மூலம் அதானி பெரிய அளவில் வளரத் தொடங்கினார். 2002 குஜராத் இனப்படுகொலைகளுக்குப் பிறகு மோடி சிஐஐ (இந்திய தொழில் கூட்டமைப்பு) தலைவர்களால் விமர்சிக்கப்பட்டார். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய பேரரசு நாடுகள் தங்கள் நாட்டில் நுழைய அவருக்கு தடை விதித்திருந்தன. 2003 "துடிப்பான குஜராத்"(Vibrant Gujarat) மாநாட்டில் அதானி பெருமளவு முதலீடு செய்தார். அந்நிகழ்வின் போது கார்ப்பரேட்டுகள் மோடியை புத்தாக்கம் செய்து இந்தியாவின் முதன்மை செயல் அலுவலருக்கான (CEO) ஆற்றல் மிக்கவர் என்று புகழாரம் சூட்டினர். இதுதான் அதானிக்கு குஜராத் அரசாங்கத்திடமிருந்து மிகப்பெரும் பிரத்யேக சலுகைகளை பெற துவங்குவதற்கான முக்கிய திருப்பமாக அமைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமான முந்த்ரா துறைமுகத்தை சுற்றி அதானி ராஜ்யம் அபரிதமான வளர்ச்சியை துவங்கியிருக்கிறது.
2014இல் மோடி தனது தேர்தல் பிரச்சாரத் திற்கு அதானியின் ஜெட் விமானத்தையும் ஹெலிகாப் டரையும் பயன்படுத்தினார். பிரதம மந்திரி ஆவார் என்று அறிவிக்கப்பட்ட அவர், அகமதாபாத்திலிருந்து டெல்லிக்கு அதானியின் ஜெட் விமானத்தில் சென்றதானது இந்தியாவில் அரசு சார் முதலாளித்துவம் புதிய உயரங்களை எட்டியதை உலகத்துக்கு அறிவித்தது. அதிலிருந்து அதானியின் மூர்க்கத்தனமான விரிவாக்கத்துக்கு வங்கிகள் பணத்தை கொட்டினர். அதே சமயம் இந்திய அரசாங்கம் இந்தியாவில் மட்டுமல்ல
வெளிநாடுகளிலும் அதானியின் விரிவாக்கத்தை ஊக்குவிக்க ஆனதெல்லாம் செய்தது. இப்போது அதானி இந்திய வங்கியின் கடனில், ஆஸ்திரேலிய சுரங்கத்திலிருந்து நிலக்கரியை எடுத்து அதை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கிறார். அதானி குழுமத்திற்கு ஸ்ரீலங்காவின் காற்றாலை ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். மார்ச் 30, 2014 அன்று மோடி சகாப்தம் துவங்கும் போது அதானியின் சொத்து 4.5 பில்லியன் டாலராக இருந்தது ஜனவரி 2020ல் அது இரு மடங்குக்கும் அதிகமாக 11 பில்லியன் டாலர் ஆனது. பெருந்தொற்று காலத்தில் ஜூன் 2021ல் அதிகரித்த அளவில் 76.7 பில்லியன் டாலராக எகிறி குதித்த சொத்து மதிப்பு, இப்போது செப்டம்பர் 2022ல் 150 பில்லியன் டாலருக்கும் மேலாக உயர்ந்து நிற்கிறது.
8 ஆண்டுகளில் 30 மடங்கு வளர்ச்சி என்பது அரசு சார் முதலாளித்துவத்தின் வெட்கக்கேடான வகை மாதிரியின் விளைவு ஆகும். இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலை, ரயில், தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் இந்தக் குழுமத்தின் பிரத்தியேக வளர்ச்சி இருப்பதை வைத்துக் கொண்டு கருவான உள்கட்டமைப்பு மீது பெரும் ஏகபோகத்தையும் இந்தியாவின் வெளிநாட்டு வணிகத்தில் தனது கிடக்கிப்பிடியை இறுக்கிக் கொள்வதையும் உத்தரவாதப்படுத்தும் வகையில் அரசு நேர்மையற்ற முறையில் பொது சொத்துக்களையும் வளங்களையும் அதானி குழுமத்திற்கு மடைமாற்றம் செய்கிறது. சங்-பாஜக முகாம் இதை கம்பளத்துக்கு அடியில் போட்டு மூடி விட்டு அதானியை பெரிய சொத்துக்களை உருவாக்கு பவராக, பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குபவராக முன்னிறுத்து கிறது. அதானியின் வளர்ச்சிக் கதையை மோடியின் கீழான இந்தியாவின் வளர்ச்சிக் கதையாக காட்டுகிறது. ஆனால், ஒவ்வொரு பொருளாதாரக் குறியீடும் இந்தியாவின் சரிந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்திலிருந்து அபாயகரமாக உயர்ந்த வேலைவாய்ப்பின்மை, வறுமை, பசி, ஊட்டச் சத்துக் குறைபாடு ஆகியவை வரை அவர்களின் பரப்புரையை கடைந்தெடுத்த பொய் என்றும் அது இந்திய மக்களுக்கான கொடூரமான அவ மானம் என்றும் அம்பலப்படுத்தி வருகின்றன.
பெரும் சமூக, சுற்றுச்சூழலை விலையாக கொடுத்துதான் கார்ப்பரேட் வளர்ச்சி என்பது இருக்கிறது. எனவே தான் அதானி குழுமத்தின் சூறையாடும் திட்டங்களுக்கு எதிராக, பழங்குடி
மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு எதிரான கொள்ளையை மறைத்து அதையே புதுப்பி கத்தக்க ஆற்றலை வளர்ப்பதாகவும் பழங்கு மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதாகவும் பாசாங்குத்தனம் காட்டுவதற்கு எதிராக உலகம் முழுவதும் "அதானியை தடுத்து நிறுத்துங்கள்” என்று எதிர்ப்பியக்கம் வளர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அதானியின் அதிசயத்தக்க வளர்ச்சி என்பது கடன் கொடுத்து உருவாக்கப்பட்ட குமிழி என்றும் அந்தக் குமிழி உடையும்போது எப்படி ஐக்கிய அமெரிக்காவில் நிதி நிறுவன ஜாம்பவான்கள் வீழ்ந்தார்களோ அதுபோல் இந்தியாவில் பெரும் பொருளாதார நெருக்கடியை அது ஏற்படுத்தும் என்பதும் தெளிவாகி வருகிறது.
அதானி குழுமத்தின் நிகர மதிப்பு உயர்வு என்பது பல்வேறு துறைகளை மூர்க்கத்தனமாக கடன் மூலம் பெற்ற நிதி கொண்டு கையகப் படுத்துதல், குழுமத்தின் நிதி வருவாய்க்கு அந்த அளவு நேரடி தொடர்பில்லாத பங்குச்சந்தையில் பங்கு விலை உயர்வு ஆகியவற்றை முதன்மை யாக கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, அமேசான் நிறுவனத்தையும் அதானி குழுமத்தை யும் ஒப்பிட்டால் இரண்டின் நிகர மதிப்பும் ஒரே மட்டத்தில் 150 பில்லியன் டாலராக இருக்கும் போது அவற்றின் வருவாய் பாரதூரமாக முறையே 486 பில்லியன் டாலர் என்றும் 29.2 பில்லியன் டாலர் என்பதாகவும் உள்ளது.
இன்று மோடி ராஜ்ஜியம் இதுவரை இல்லாத அளவிலான தங்கு தடையற்ற மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை குறிக்கிற தென்றால், அதானியின் பேரரசு இதுவரை இல்லாத அளவு சொத்தின் குவிமானத்தை காட்டுகிறது. அரசு சார் முதலாளித்துவத்தில் வெகுமக்கள் விவரிப்பான அதானி-அம்பானி கம்பெனி ராஜ்ஜியம் என்பது மோடி அரசாங் கத்தின் உண்மையான குணாம்சமான பெரும் பணக்காரர்களின், பெரும் பணக்காரர்களால், பெரும் பணக்காரர்களுக்கான அரசாங்கம் என்பதை சரியாகவே தொகுத்து சொல்கிறது. ஜனநாயகம் உயிர்ப்பித்திருக்க வேண்டுமானால் இந்தியாவில் மோடி ஆட்சி அகற்றப்படுவதோடு இந்தியப் பொருளாதாரம் மற்றும் அரசியலின் மீது வளர்ந்து வரும் கார்ப்பரேட் கட்டுப்பாடு முறியடிக்கப்பட்டாகவும் வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)