டிஎம் கிருஷ்ணா - கலை - இலக்கிய விடுதலைக் குரல்!

கர்நாடக இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணாவிற்கு 2024 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி பட்டம் மியூசிக் அகாடமியால் வழங்கப்பட இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அவருடைய "ஆற்றல்மிகு குரலுக்கான" அங்கீகரிப்பாக, கர்நாடக இசைக் கலையை "அதன் இறுக்கமான சட்டகங்களுக்குள் வைத்திருப்பதற்கு மாறான பரிசோதனை முயற்சிகளுக்காக", மேலும், கர்நாடக இசையை "சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக" பயன்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என மெட்ராஸ் மியூசிக் அகாடமி தலைவர் என் முரளி குறிப்பிட்டிருந்தார். 

 

சிறுபான்மையினருக்கு, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்புச் சட்டம்?

மார்ச் 11 அன்று தேர்தல் பத்திரங்கள் சம்பந்தமாக தேவைப்படும் தகவல்களை வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற ஸ்டேட் பேங்கின் வேண்டுகோள் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக இந்த நாடு காத்துக் கொண்டிருந்தது. ஆனால். அதே நாள், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஐ அமல்படுத்துவதற்கான விதிகளை, மிக நீண்ட காலம் கழித்து, மோடி அரசாங்கம் அறிவித்தது. இச்சட்டம் 2019 டிசம்பர் 11 அன்று நிறைவேற்றப் பட்டிருந்தது. ஆனால் அதற்கான விதிகளை அறிவிப்பதற்கு மோடி அரசாங்கத்திற்கு 51 மாதங்கள் ஆகி இருக்கிறது. ஏன்? ஒரே காரணம்தான். 2024 தேர்தல்.

தேர்தல் பத்திரம்: ஒரு மோசடித் திட்டம்

அண்மைய ஆண்டுகளில் மிகவும் அப்பட்டமான மோசடிகளில் ஒன்று, மோடி அரசாங்கத்தின் தேர்தல் பத்திரத் திட்டமாகும். இத் திட்டம் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இறுதியில் அதனைச் செல்லாது என அறிவித்துள்ளது. இத் தீர்ப்பு, ஜனநாயகத்தில் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்ட நம்பிக்கையூட்டும் நியாயமான தீர்ப்பு என வருங்காலத்தில் பேசப்படும். மிகவும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இன்றைய இந்தியாவில் கார்ப்பரேட் அதிகாரத்திற்கு எதிரான சமமற்ற போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மாமன்னன்: சமூக நீதிக் கட்சிக்குள் நிலவும் சாதிய ஒடுக்குமுறை

சமூகத்தின் பல அடுக்குகளில் சாதிய ஒடுக்குமுறை பல பரிமாணங்கள் கொண்டுள்ளது. அதில் ஒன்று அரசியல் களம். தொடக்கத்தில் பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதோருக்கும் இடையே இருந்த முரண்பாட்டில் உருக்கொண்ட திராவிட இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் இடைநிலை சாதிகளுக்கும் தலித் சாதிகளுக்கும் இடையே இருந்த முரண்பாடு முன்னுக்கு வந்தது. 1990களில் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த 'சாதிக் கலவரங்கள்', சமீபத்திய நிகழ்வான ஆணவக் கொலைகள் இதனை தெளிவாக வெளிக்காட்டுகின்றன.

நட்சத்திரம் நகர்கிறது:

பின்னணியில் அமெரிக்க கறுப்பின பாடகி நீனா சிமோன்இன் 'இட்ஸ் எ நியூ டான்' (இதுவொரு புதிய காலை) என்ற பாடல் ஒலிக்கிறது. ஆஸ்திரிய ஓவியர் குஷ்டாவ் கிளிம்ன்ட்இன் புகழ்மிக்க ஓவியம் 'த கிஸ்' (அந்த முத்தம்) காட்சியாகிறது. கலவி முடிந்த பின் தன் காதலனிடம் "இனியா, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என காதலி கேட்கிறாள். அப்படித் தொடங்கும் உரையாடல் இளையராஜா குறித்த விவாதமாக, வாக்குவாதமாக உருமாறு கிறது. அவள் தனது உணர்வுகளை மதிக்க வில்லை என எரிச்சல் கொண்டு, காதலி மீது ஏற்படும் வெறுப்பினால் அவளை சாதி அடிப்படையில் அவமானப் படுத்துகிறான் காதலன். அதனால் கலவி வரை வந்த காதல் சண்டையில் முடிந்து பிரிகிறார்கள்.