பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும்
ஏழு தமிழர்களையும் இஸ்லாமிய சிறைவாசிகளையும்
விடுதலை செய்ய வேண்டும்
நீதிக்கான மக்கள் இயக்கம் சார்பாக பாபர் மசூதி இடிப்பு மற்றும் இஸ்லாமிய சிறைவாசி கள் விடுதலை குறித்து காணொளி வாயிலாக 8-.12-.2021 அன்று கருத்தரங்கம் நடந்தது. நீதிக்கான மக்கள் இயக்கம் மாநில அமைப்பாளர் தோழர் சிம்சன் தலைமை தாங்கி கூட்டத்தை துவங்கி வைத்தார். மக்கள் போராட்டங்களுக்காக சிறை கொட்டடியில் கிடந்த தன்னுடைய அனுபவங்க ளை தோழர் சிம்சன் தன் உரையில் பகிர்ந்து கொண்டார்.
தொடந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர்பாரூக் அவர்கள் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு 20 ஆண்டுகள் கடந்தும் நியாயம் வழங்கப்படாததைக் கண்டித்தும் திமுகவை நம்பி ஒட்டு மொத்தமாக வாக்களித் துள்ள இஸ்லாமிய சமூகத்தின் நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை அறுத்து விட வேண்டாம் என வலியுறுத்திய அவர், நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இம்முயற்சிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
தொடந்து உரையாற்றிய நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட தோழர் அபுதாஹீர் சிறைவாசிகளின் வழக்குகள் அதில் சட்டப்படியே செய்ய வேண்டிய விசயங்களை கூட அரசுகள் சிறைத்துறையினர் கவனத்தில் கொள்ளாமல் இருக்கும் போக்கை விளக்கிப் பேசினார்.
கோவை மாவட்ட நீதிக்கான மக்கள் இயக்கம் அமைப்பாளர் தோழர் பெரோஸ் பாபு, நீதிக்கான மக்கள் இயக்கத்தின் போராட்ட வரலாறுகளையும் வட இந்தியாவில் ‘இன்சாஃப்மஞ்’ எனும் பெயரில் நீதிக்கான மக்கள் இயக்கம் நடத்தும் போராட்டங்களை எடுத்துக்கூறிய அவர் நீதிக்கான மக்கள் இயக்கம் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான இயக்கம் என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும் ஏழு தமிழர்கள், இஸ்லாமியர் முதல் வீரப்பன் வழக்கில் இருக்கும் தண்டனைக்காலம் கடந்த மாதையன் உள்ளிட்ட சிறைவாசிகள் வரை அத்தனை பேரையும் விடுவிக்க வேண்டிய காரணிகள் குறித்து பேசினார்.
இகக(மாலெ) தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் என்.கே நடராசன், இந்த அநீதியான விசயங் களில் அரசு செய்யும் பிழைகளையும் சீர் செய்ய வேண்டிய விசயங்களையும் குறிப்பாக ஒன்றிய அரசின் மற்றும் சங்கப்பரிவாரங்களின் பிரச்சாரங் களுக்கு பலியாகாமல் மாநில அரசு துணிந்து செயலாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்
இறுதியாகப் பேசிய மக்கள் சிவில் உரிமைக் கழக அமைப்பின் தோழர் வழக்கறிஞர் சா.பாலமுருகன் தனது உரையில், வழக்கின் சட்ட நுணுக்கங்கள் பற்றியும் அதில் இஸ்லாமியர்கள் எவ்வாறு பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்பதையும் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக் காட்டிப் பேசினார். சிறைவாசிகள் விடுதலைக் காக நீதிக்கான மக்கள் இயக்கம் எடுத்த இந்த முன் முயற்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்த அவர் நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இந்த கோரிக்கைக் கான தொடர் போராட்டப் பயணங்களில் துணையாக நிற்போம் என கூறினார்.
கருத்தரங்கத்தின் அழைப்பினைத் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. -பெரோஸ்பாபு
Image Thanks India Spend