முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடியிருப்பை இடித்து தள்ளியதை இகக(மாலெ) கட்சி வன்மையாக கண்டிக்கிறது

ஆட்சி மாறியது. பழனிசாமி ஆட்சி போய் ஸ்டாலின் ஆட்சி வந்தது. மக்கள் எதிர்பார்த்தார்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என எதிர்பார்த்தார்கள். இப்பொழுது ஆறுமாதங்கள் கடந்து விட்டன. பத்திரிக்கைக ளெல்லாம் பாராட்டின

ஆனால் தமிழகத்தில் கணிசமான மக்களுக்கு குடியிருக்க வீடில்லை. நூற்றாண்டுகளாக குடியிருந்துவரும் சாமானிய மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை

தேர்தல்களின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பட்டா வழங்கப்படும். வீடற்றவர்களுக்கு  வீட்டுமனை வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் இலவசமாகவே வழங்கப்படும். கருணாநிதியும் சொன்னார். ஜெயலலிதாவும் சொன்னார். பழனிசாமியும் சொன்னார். தொடர்ந்து ஸ்டாலினும் சொன்னார். சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம் என்ற வாய் வீச்செல்லாம் இருக்கும்

இப்போதும் ஸ்டாலின் அதே வழியில்தான் ஆட்சியை தொடரப்போகிறாரா

சென்னையில் ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் நடந்த வேதனையான நிகழ்வு மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கிறது.  

கொளத்தூர் அவ்வை நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 60க்கு மேற்பட்ட ஆண்டுகள் குடியிருந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆட்சியிலும் பட்டா வழங்க வேண்டும் என கோரி வந்துள்ளார்கள்ஸ்டாலினே ஆட்சிக்கு வந்து விட்டார் நமக்கு பட்டா வந்துவிடும் என்று நம்பினார்கள். ஆனால் பட்டா வரவில்லை. பட்டாவிற்கு பதிலாக பேரிடிதான் வந்தது

அரசு அதிகாரிகள் இப்பகுதி மக்களிடம், இவ்வழியாக மேம்பாலம் வரப்போகிறது. 14அடி வேண்டும் எனச் சொல்லியதோடு டிசம்பர் 10ந்தேதி ஒரு வாரத்தில் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளனர். நோட்டீஸ் கொடுத்த இரண்டே நாளில் பொக்லைனை வைத்து 20க்கு மேற்பட்ட வீடுகளை இடித்து தள்ளிவிட்டனர். வீட்டில் இருந்தவர்கள் இப்போது நடு ரோட்டில் நிற்கின்றனர். அத்தோடு 60க்கு மேற்பட்ட ஆண்டுகள் குடியிருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று சொல்லி காலி செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். ஆட்சியாளர்கள் எப்பொழுதும் வளர்ச்சி என்ற பெயரில் ஏழைகளின் தலையில் மிதிப்பதே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டியுள்ள பெருமுதலாளிகளை காப்பாற்றுவதோடு, ஏழைகள் 60 ஆண்டுகளாக குடியிருந்துவந்தபுறம்போக்கு நிலத்தை நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வெளியேற்றம் செய்யும் ஒரு அரசை, மக்களுக்கான அரசு என்று எப்படி கூறமுடியும். கொளத்தூர் அவ்வை நகர் குடியிருப்பை இடித்ததை இகக(மாலெ) கட்சி வன்மையாக கண்டிக்கிறதுநீண்ட நாட்களாக மக்கள் கோரி வரும் பட்டாவை உடனடியாக வழங்கி அம்மக்களை பாதுக்காக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது

என்.கே. நடராஜன்

மாநிலச் செயலாளர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை

தமிழ்நாடு