உக்ரைனுக்குள் நுழைந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்ட நிலையிலும் உக்ரைன் மீதான புதினின் யுத்தம் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. உக்ரைனின் பல பகுதிகளிலும் குண்டு போடுவது அதிகரித்தும் தீவிரமடைந்தும் இருப்பதால் மனித உயிரிழப் புகள் அதிகரித்து வருகின்றன. அகதிகளாக வெளியேறுவதும் அதிகரித்தி ருக்கிறது. உக்ரைன் பெரும் நாசத்திற்கு உள்ளாகி யுள்ளது. உக்ரைனிய ராணுவ தகவல்படி ரஷ்யத் துருப்புக்களும் அதன் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ கருவிகள் இரண்டுமே பெரும் ராணுவப் பின்னடைவை சந்தித்திருப்பதாக சொல்லப்படுகிறது. யுத்தத்தின் பொருளாதார மற்றும் மனித இழப்பு அதிகமாகும் போது அதன் விளைவுகளை அந்த பிராந்தி யத்தி லும் அதை தாண்டியும் உணர முடியும். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையிலான மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் எவ்வித போர் நிறுத்தத்திலும் முடிவடையவில்லை எனும் போது, நீடித்த அமைதிக்கான ராஜதந்திர ரீதியிலான கட்டமைப்பு பற்றி பேச ஏதுமில்லை.
இந்தியாவில் உள்ள நமக்கு, புதினின் உக்ரைன் யுத்தம் சர்வதேச அரங்கில் மோடி அரசாங்கத்தின் படுதோல்வியை பட்டவர்த்தன மாக அம்பலப்படுத்தியுள்ளது. மோடி அரசாங்கம் தன்னைத்தானே புகழ்ந்து மார்தட்டிக்கொள்ளும் முக்கிய அம்சங்களில் ஒன்று - மோடியின் கீழ் சர்வதேச அரங்கில் மோடி அரசாங்கத்தின் ஆகிருதி வளர்ந்திருப்பதாக சொல்லப்படுவதை சுற்றி கட்டப்படுவதுதான். இந்திய பிரதம மந்திரிகளி லேயே அதிகப்படியான எண்ணிக்கையில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டவர் மோடி ஆவார். இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை கூட்டங்களில் திரும்பத் திரும்ப வெளிநடப்பு செய்து மட்டுமே சமாளித்து வருவதன் மூலம் உக்ரைன் நெருக்கடியில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை பக்கவாத முடக்கத்தில் இருப்ப தாகவே தோற்றமளிக்கிறது. 2020 உக்ரைன் அரசாங்க புள்ளிவிவரப்படி அங்கு படிக்கும் மாணவர்களிலேயே இந்திய மாணவர் கள்தான் அதிகம் உள்ளனர். அதாவது 76,000 பேரில் 20,000க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். அவர்களைப் பாதுகாப்பதிலும் உரிய காலத்தில் அவர்கள் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்படுவதை உறுதி செய்வதிலும் மோடி அரசாங்கம் தவறிவிட்டது.
உக்ரைனுக்குள் ரஷ்யா நுழையும் என்ற ஆபத்து வளர்ந்துவந்த பின்னணியில் ஜனவரி 15 அன்று இந்திய தூதரகத்தால் வெளியிடப்பட்ட முதல் அறிவுரை அத்தியாவசிய பணி இல்லா மல் உக்ரைனில் இருக்கும் இந்திய குடிமக்கள் தற்காலிகமாக அங்கிருந்து வெளி யேறுவது பற்றி பரிசீலிக்கலாம் என்றது. அதற்கு அடுத்த நாள் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புபவர்கள் கிடைக்கக்கூடிய வர்த்தக விமானங்களில் இருக்கைகள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இரண்டு நாட்கள் கழித்து அதிகப்படியான பயணச்சீட்டு கட்டணத்துடன் மூன்று சிறப்பு ஏர்-இந்தியா விமான சேவை அறிவிக்கப்பட்டது. தூதரகம் எல்லா மாணவர்களையும் வெளியேறுமாறு சொன்னபோது உக்ரைன் வான்வெளியை மூடி விட்டது. உக்ரைனில் இருந்து நேரடி விமானம் என்பதற்கு வழியில்லாமல் செய்யப்பட்டு விட்டது. பிறகு சாத்தியப்பட்ட ஏதாவது வழி முறைகளை பயன்படுத்தி அண்டை நாடுகளுக்கு வருமாறு மாணவர்கள் அறிவுறுத்தப் பட்டார்கள். ஆசியா, ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு மாணவர் களுடன் கடும் பனியில் உணவும் தண்ணீரும் இல்லாமல் நெடுந்தூரம் நடந்து வந்த மாணவர்கள், பிறகு ரயில் நிலையங்களிலிருந்தும் எல்லைகளிலிருந்தும் இனவாத பாதுகாப்பு படைகளால் திரும்ப அனுப்பப் படுவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. உக்ரை னில் சிக்கி கிடந்த இந்திய மாணவர்களை உரிய நேரத்தில் பத்திரமாக மீட்க உத்தரவாதம் செய்ய அரசாங்கம் தவறிய போதிலும், அது மாணவர்க ளின் துயரங்களை நிகழ்ச்சியை நிர்வகிக்கும் பிரச்சார இயக்கமாக மாற்றி அதை உத்தரப்பிரதே சத்தின் நீடித்த தேர்தலுக்கான பிரச்சார கருப்பொருளாக பயன்படுத்திக் கொண்டது.
ரயில் நிலையங்களும் விமான நிலையங் களும் செல்ல போக்குவரத்தை ஏற்பாடு செய்வதும் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி மாணவர்களை பத்திரமாக மீட்பது என்பதும் களத்தில் உண்மையான தேவையாக இருக்கும்போது, மீட்பு நடவடிக்கைக்கு "ஆபரேஷன் கங்கா" என பெயர் சூட்டப்பட்டு நான்கு அமைச்சர்கள் அதை மேற்பார்வையிட அனுப்பப்பட்டனர். மீட்டு திரும்ப கொண்டுவரப்பட்ட மாணவர்கள் மோடியை புகழ்ந்து முழக்கமிட வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். உத்தரபிரதேசத்தில் தேர்தல் மரபுகளின் உணர்வுகளை மீறி, தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக அங்கு வந்தடைந்த மாணவர்களிடம் தொலைக்காட்சிகள் படம் பிடிக்கும் வெளிச்சத்தில் யோகி ஆதித்யநாத் உரையாடினார். தங்கள் பெயரை மீட்புப்பணிகள் பட்டியலில் இருந்து நீக்கி விட்டு வடநாட்டு பயணிகள் பெயரை சுவாமிநாராயண் சன்ஸ்தா என்ற சர்வதேச (பிஏ பிஎஸ்) வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் செயல்படும் முக்கியமான இந்துத்துவா அமைப்பு உதவியுடன் தூதரக அதிகாரிகள் சேர்த்ததாக தென்னிந்திய மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்திய தொலைக்காட்சிகளுக்கு மாணவர்கள் தங்கள் நிலைமையை எடுத்துச் சொன்னாலோ அல்லது உதவி கூறி காணொலிகளை பரிமாறி னாலோ அவற்றைச் சங் படை இழிவுக்குள்ளாக்கி பிரச்சாரம் செய்தது. துயரத்தில் இருக்கும் மாணவர்களைப் பார்த்து இந்தியாவில் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத இந்த மாணவர்கள், சிறப்பு சலுகை பெற்ற பிரிவினராக உள்ளதாக சித்தரித்தது. மட்டுமல்லாமல் மீட்புப்பணி குளறுபடிகளுக்கு அவர்கள் தான் காரணம் என்று பழியை அவர்கள் மீது போட்டது. கர்நாடகாவில் பாஜக தலைவர் ஒருவர் குண்டு வீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட நவீன் சேகரப்பாவின் உடலை திருப்பி கொண்டு வருவது என்ற பிரச்சினையை உயிரோடு இருக்கும் 8 மாணவர்கள் வரும் இடத்தை இறந்த பூதவுடல் அடைத்துக் கொள்ளும் என்று சொல்லி நிராகரித்தார். (இறந்த உடல்கள் பொதுவாக விமானத்தில் பயணிகள் பகுதி அல்லாத வேறு பகுதியில் வைத்து தான் கொண்டுவரப்படுகின்றன) பாஜக தலைவரின் இந்தக் கூற்று அபத்தமானது மட்டுமல்ல இரக்கமற்ற அடாவடித்தனமானதும் ஆகும். இந்தியாவில் மருத்துவ கல்வி கட்டணம் கட்டுப்படியாகாததாக உள்ளதால் மாணவர்கள் உக்ரைனுக்கு படிக்கச் செல்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது. இந்திய அரசாங்கத்தின் ஆதரவு இந்த மாணவர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் அவர்கள் அலட்சியத்துக்கும் அவமானத்துக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.
உக்ரைன் மீதான புதினின் நியாயமற்ற யுத்தத்தை மோடி அரசாங்கம் கண்டிக்க மறுப்பது என்பது சர்வதேச உறவுகள் விசயத்தில் கொள்கை முடக்குவாதம் இருப்பதையே குறிக்கிறது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுடனான வளர்ந்துவரும் போர்த்தந்திரக் கூட்டின் விளைவாக இந்தியா பாலஸ்தீன நலனுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திவிட்டது. இப்போது ரஷ்யாவை பகைத்துக்கொள்ள பயந்து மோடி அரசாங்கம் சுயாதிபத்திய இருத்தலுடன் கூடிய உக்ரைனுக்கு ஆதரவளித்து நிற்க மறுத்துவிட்டது. யுத்தத்தில் இந்தியா தலையிடாமல் இருப்பதை இந்திய வெளியுறவுக் கொள்கையின் சுதந்திரத்திற்கான அறிகுறி என்றோ அல்லது சர்வதேச விவகாரங்களில் இந்தியா ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தன்னை தள்ளி தூரத்தில் நிறுத்திக் கொண்டுள்ளது என்றோ பார்ப்பது தவறானதாகும். உலக மேலாளுமைக்கான அமெரிக்கத் திட்டத்தில் இந்தியாவின் போர்த்தந்திர அடிபணிதல் என்பது மோடி தலைமையின் கீழ் பல மடங்கு உயர்ந்திருக்க மட்டுமே செய்துள்ளது. இப்போதுள்ள சூழலில் புதினை தீவிர வலது - வலுவான தலைவர் என்று சங்-படை மரியாதைக்குரியவராக பார்ப்பதும் இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் பொறுத்து, உக்ரைன் யுத்தத்தை சிறந்த வகை மாதிரியாக புகழ்வதும் இந்தியா, ரஷ்யாவை ஆதரிப்பதற் கான அடிப்படையாகும்.
ரஷ்யாவில் காவல்துறை அடக்குமுறை யையும் மீறி மேலும் மேலும் அதிக அளவிலான மக்கள் அரசாங்கத்தின் அதி தீவிர தேசியவாத போர்கூச்சலுக்கு எதிராக, போரை உடனே நிறுத்த வேண்டும் என்று கோரி வருகிறார்கள். அவர்கள் ரஷ்யாவின் தேசிய நலன்களை புதினின் போர் வெறியாட்டத்திலிருந்தும் கூடவே உள்நாட்டு அதிருப்தியை ஒடுக்க சர்வாதிகார திட்டத்தின் மூலம் அண்டை நாடுகளுடன் போர் தொடுப் பதையும் பிரித்து நிறுத்தி பார்க்கிறார்கள். இந்தியாவிலுள்ள நாமும் மோடி அரசாங்கத்தின் கோளாறான பார்வையில் இருந்து மாறுபட்டு இந்தியாவின் சொந்த நலன்களை மாறுபட்ட கொள்கை சட்டகத்தின் வாயிலாக பார்ப்பதற்கான நேரம் இது. பெரிய வல்லமைமிக்க நாடு அருகில் உள்ள நாட்டை குண்டு போட்டு அழிக்க முற்படுமானால் இந்தியா அந்த சிறிய நாட்டுக்கு ஆதரவாகவும் அந்த நாட்டின் சுயாதிபத்திய இருத்தல் மற்றும் சுயநிர்ணய உரிமைக்காகவும் நிற்கவேண்டும். உக்ரைன் மீதான புதினின் யுத்தம் தொடருமானால் அது உலக எண்ணெய் விலை ஏற்றத்திற்கு, உலக உணவு நெருக்கடிக்கும், ஐரோப்பாவில் ஆயுதப் போட்டியை தீவிரப் படுத்தவும் அதிகார போட்டிக்கும் தான் வழிவகுக்கும். அதன் விளைவுகள் உலக ளாவியதாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் இந்தியா ஒரு முடக்குவாத வெளியுறவு கொள்கையை கொண்டிருக்க முடியாது. யுத்தத்தை உடனடியாக நிறுத்தவும் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவதற்கான (கைமீறிப் போவதற்கு முன்) செயலாற்றக்கூடிய இந்தியாவின் பங்கு பாத்திரம் இந்த மணி நேர தேவையாக உள்ளது.
மத்திய கமிட்டி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)