சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் மே தின விழா...
மே 15, 2022 சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிளைகளில் மே தின கொடியேற்று விழா தோழர் P. அன்பு CPIML ஒன்றிய செயலாளர் தலைமையில் 15 இடங்களில் நடைபெற்றது.
மேலும், 4 இடங்களில் RYA பெயர்பலகை திறப்பு விழாவும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தோழர் மோகனசுந்தரம் (மாவட்ட செயலாளர்), V.அய்யந்துரை (AIKM மாவட்ட செயலாளர்), R.வேல்முருகன் (AICCTU மாவட்ட செயலாளர், G.சுந்தர்ராஜன் RYA மாநில குழு),பாலு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
70 க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.