இந்த பாசிச எதிர்ப்பு மாநாட்டில் எங்கள் கட்சி சார்பில் ஒருமைப்பாடு தெரிவித்து முழு மனதுடன் பங்கேற்பதாக குறிப்பிட்டவர் பாசிசம் பற்றி விரிவான கருத்தாக்கங்களை முன்வைத் தார். பாசிசத்தை எப்படி வரையறுப்பது? அதன் இந்திய வகை மாதிரி என்ன? அதை முறியடிப் பதற்கான போர்த்தந்திரம் என்ன? என்ற அம்சங்கள் குறித்து அவர் பேசினார்.
பாசிசம் என்பது முதலாளித்துவத்தின் இன்னும் செழுமைப்படுத்தப்பட்ட வடிவம். அது நிதி மூலதனத்தின் ஆட்சி. அவர்கள் ஜனநாய கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாகச் சொல்லுவார்கள். ஆனால், வெளிப்படையாக பயங்கர வாத சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துவார்கள். ஹிட்லர், முசோலினி ஆட்சிகள் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகள் தான். அன்றைக்கும் எதிர்க்கட்சியினர் இருந்தார் கள். பாசிச சக்திகள் பேச்சுரிமையை, கருத்துரிமையை, விமர்சனம் செய்யும் உரிமையை நீக்குவார்கள். தொழிற்சங்க இயக்கத்தை ஒடுக்குவார்கள். அவர்கள் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, ஆதிவாசிகள் பிரச்சினை எல்லாவற்றையும் எடுப்பார்கள். கோடிக் கணக்கான ரூபாய்களை விளம்பரத்துக்கு செலவு செய்வார்கள். சோசலிசம் பற்றியும் புரட்சி பற்றியும் கூட பேசுவார்கள். தேசியவாதத்தி லிருந்து தேசிய வெறியாக முழக்கத்தை உயர்த்துவார்கள். அவர்களுடைய சித்தாந்தம் பிற்போக்கு, ஆணாதிக்க, சாதிய சித்தாந்தமாக இருக்கும். அதை அவர்கள் புகழ்மிக்க மரபு என்று சொல்லுவார்கள். பல்வேறு காலக் கட்டத்தை கடந்து அது பாசிசமாக பரிணமிக்கிறது, அது அப்படி வளர்ந்து வரும் காலகட்டத்திலேயே அதை நாம் முறியடிக்க வேண்டும் என்று டிமிட்ரோ நமக்கு எச்சரித்திருக்கிறார். அவர்களைப் பொறுத்தவரை தேசிய வாதம் என்பது மதம் மற்றும் கார்ப்பரேட் அதிகாரத்தின் கலவை யாகும். அவர்கள் கலாச்சார தேசிய வாதம் பற்றி பேசுவார்கள். தமிழ் நாட்டின் ஆளுனராக இருக்கும் திரு.ரவி, ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருக்கிறார். இந்து என்று சொன்னாலே அது சனாதனம். அது வகுப்பு வாதம். அது ஆணாதிக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மைக்கேல் பட்டிக்கு செல்ல முடிந்த அண்ணாமலையால் ஏன் கள்ளக்குறிச்சி செல்ல முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது.
வெற்றிகரமான விவசாயச் சட்ட எதிர்ப்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு பிறகும் பாஜக தேர்தலில் அதிக வாக்குகள் பெறுகிறது. இந்த மாதிரியான சூழல் இடதுசாரிகள் இன்னும் ஆழமாக தீவிரமாக வேலை செய்ய வேண்டிய தேவையைக் கோருகிறது. தமிழ்நாட்டில் பாசிச சக்திகள் காலுன்ற நாம் அனுமதித்து விடக் கூடாது. அலை அலையாக மக்கள் போராட் டங்கள் இந்தியாவிலும் உலக அளவிலும் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலங்காவில் நடந்து வரும் போராட்டம் முக்கியமானதாகும். வரலாற்றில் சோவியத் செஞ்சேனை தான் ஹிட்லரை தோற்கடித்தது.
வரும் காலங்கள் கூடுதலான இடதுசாரி ஜனநாயக சக்திகளின் இயக்கங்களைக் கோருபவையாக இருக்கும். இகக(மாலெ) கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கின்ற முன் முயற்சிகளில் இணைந்து செயல்பட வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.