தமிழ்நாட்டில் எல்கேஜி முதல் உயர்கல்வி வரை கல்வி இலவசம் என்று திராவிட முற்போக்கு ஆட்சி நடத்தும் திமுக அறிவித்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அரசு கல்லூரியிலும் கூட சில ஆயிரங்கள் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது. அரசின் நிதி உதவி பெறும் (தனியார்) கல்லூரிகளில் பல ஆயிரங்கள் கட்ட வேண்டியிருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் கொள்ளையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

அரசின் நிதி உதவி பெறும் கல்லூரிகள் என்பவை தனியாரால் நடத்தப்படுபவை. கல்லூரியின் ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை அரசே அளித்துவிடும். கல்லூரியின் நிர்வாகம் முறையாக இயங்குவதை மண்டல உயர்கல்வி இணை இயக்குநர் கண்காணித்து . வருவார். சென்னையின் ஸ்டெல்லா மேரீஸ், விவேகானந்தா துவங்கி, பாளையம்கோட்டையின் புனித சவேரியார் கல்லூரி வரை அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள்தான்.

தமிழ்நாட்டில் 163 அரசு கல்லூரிகளும்,
அரசின் நிதி உதவி பெற்று இயங்குகின்ற கல்லூரிகள் 160ம் இருக்கின்றன. சுய நிதியில் இயங்கும் தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை 392. இந்த புள்ளிவிவரங்கள்படி பார்த்தால்,உயர் கல்வி படிக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டு மாணவர்கள் தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்களையே பெருமளவு சார்ந்திருக்க வேண்டியிருப்பது புலப்படும்.



அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளின் கட்டணம் அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தின் அளவுக்கு இருக்க வேண்டும். இவ்வகை கல்லூரிகளுக்கான கட்டணம் எவ்வளவு என்பதை அரசு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடுகிறது. அந்த கட்டணங்களை மட்டுமே தனியார் நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும்.உசிலம்பட்டியில் உள்ள தேவர் கல்லூரியில் இந்த ஆண்டு வசூலிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள கட்டணமும், வசூலிக்கப்படும்

உசிலம்பட்டியில் உள்ள தேவர் கல்லூரியில் இந்த ஆண்டு வசூலிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள கட்டணமும், வசூலிக்கப்படும் கட்டணமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பல கல்லூரிகளில் இதனை விட அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை என்பதற்கு மாறாக செமஸ் டருக்கு ஒருமுறை கட்டணம் வசூலிப்பதும் நடக்கிறது. கல்லூரியில் சேர்வதற்கான மனு அனைத்து படிப்புகளுக்கும் ஒன்றுதான் என்பதற்குப் பதிலாக ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு மனு என்பது துவங்கி பல்வேறு முறைகளில் கட்டணக் கொள்ளை நடக்கிறது.

அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள் தமக்கான சுயநிதி பிரிவுகளைத் துவக்கிவிட்டன. சுயநிதி பிரிவில் கல்லா கட்டிய பின்னரே, அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அரசு உதவி பெறும் பிரிவில் அடித்த கொள்ளையைக் கொண்டு சுய நிதி பிரிவுகளை விரிவுபடுத்திக்கொண்டு செல்கின்றன.

கல்விநிறுவனங்களில் கூடுதல் கட்டணங்களைத் தடுக்கும் சட்டத்தின்படி (சட்ட எண் 57/1992) அரசு நிர்ணயம் செய்த கட்ட ணத்தைக் காட்டிலும் கூடுதலாக எந்த பெயரில் கட்டணம் வசூலித்தாலும் அது கேப்பிடேஷன் ஃபீஸ் என்று கருதப்பட்டு, அச்சட்டத்தின் பிரிவு 7ன்படி குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

மேலும், தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் 1976 என்பது அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளை அரசு கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தைத் தருகிறது.

இருந்தபோதும், தமிழக அரசு இதுநாள் வரை செயலற்று இருக்க அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள் சுய நிதி கல்லூரிகள் என்பதுபோல கட்டணக் கொள்ளை நடத்துகின்றன. கட்டணக் கொள்ளை நடப்பது பற்றி கொடுக்கப்படும் புகார்கள் மீது மற்ற முறைகேடுகள் பற்றிய புகார்கள் மீது உயர்கல்வி துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. நிர்வாகத்துக்கு கடிதங்கள் அனுப்புவதோடு தங்கள் கடமை முடிந்தது என்று நிலையெடுக்கின்றனர். அரசு உதவி பெறும் கல்லூரி நிர்வாகம் அளிக்கின்ற லஞ்சப் பணம் அதிகாரிகளின் வாயை அடைக் கிறது என்பதாகத் தோன்றுகிறது. உதாரணமாக, மதுரையில் நமது மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் கழகம் எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் கட்டணக் கொள்ளையைப் பற்றி பல்வேறு இயக்கங்களை நடத்தியதாலும், ஆசிரியர்களின் போராட்டங்களாலும், இதுவரை கல்லூரி நிர்வாகம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பித் தர வேண்டும், கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உயர் கல்வித் துறையின் பிராந்திய இணை இயக்குநர் உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போதைய நிலையில் மேற்படி கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு 8 கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டியுள்ளது. ஆனால், இதுவரை கட்டணக் கொள்ளை ஓயவும் இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட 8 கோடி ரூபாய் திருப்பித் தரப்படவும் இல்லை அந்த கல்லூரி மீது பிராந்திய இணை இயக்குநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவுமில்லை.

இது போன்ற கொள்ளையின் காரணமாக ஏழைகளின் பிள்ளைகள் கல்லூரி படிப்பிற்குச் செல்வது குறைந்து போகிறது. தனியார் சுயநிதி கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கடன் வலையில் சிக்கிக்கொள்கின்றனர். இப்பிரச்சனை கோவிட் காலத்தில் பளிச்சென்று வெளிப்பட்டது.

கோவிட் காலத்திலும் சட்ட விரோத கட்டணத்தை வசூல் செய்த வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் மீது அப்போதைய BBA மாணவர்கள் அகில இந்திய மாணவர் கழகத்திடம் புகார் அளித்ததின் பேரில் தலையீடு செய்யப்பட்டது. சட்ட விரோத கட்டணம் செலுத்தாமலேயே போராட்டத்தின் மூலம் BBA இறுதி ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்கள் பெற்றுத் தரப்பட்டன. அது முதற்கொண்டு, அந்தக் கல்லூரியின் கட்டணக் கொள்ளை உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் கழகம் தொடர் இயக்கம் நடத்தி வருகிறது. மதுரை மாநகருக்குள் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் குறித்து பிரச்சாரத்தை மாணவர் கழகம் செய்து வருகிறது.

இதன் நீட்சியாக, கடந்த 25 ஆகஸ்ட் அன்று
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
இகக(மாலெ), அய்சா, ஆர்ஒய்ஏ இணைந்து
நடத்திய பெற்றோர் மாணவர் ஆசிரியர்களின்
கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்
மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பழம்பெரும்
கல்லூரி ஆசிரியர்கள் இயக்கமான மூட்டாவின்
மூத்த முன்னோடிகளும், நிர்வாகிகளும், அலுவலர்களும், கல்விச் செயல்பாட்டாளர்களும், கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும், கிராமப்புர வறியவர்களும் போராட்டத்தில் பெருமளவு கலந்துகொண்டனர். அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கே. மங்கையர்க்கரசி மாணவர்களை அமைப்பாக்கும் வேலையைச் செய்து வருகிறார். இப்போராட்டம், ஆசிரியர்களும் மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து அரசின் கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டியதின் அவசியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தது போலவே திமுக ஆட்சிக்காலத்திலும் அரசு நிதி உதவி பெறும் தனியார் கல்லூரிகளின் கொள்ளை தொடர்கிறது. திமுகவின் உயர் கல்வி அமைச்ச ராக இருக்கும் பொன்முடி தனியார் கல்வி நிறுவனக் குழுமத்தை நடத்துபவர் என்பது திமுக ஏழைகளின் பக்கமா, கல்வித் தந்தைகளின் பக்கமா என்பதைத் தெளிவாகக் காட்டும்.

பாஜகவின் கல்விக்கொள்கையை எதிர்ப் பதாக திமுக சொல்லிக்கொள்கிறது. ஆனால், பல்கலைக்கழகங்களில், தன்னாட்சி கல்லூரிகளில் புதிய கல்விக்கொள்கையின் வணிக அம்சங்கள் பாடங்களாக துவக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு முயற்சி எடுக்கவில்லை. அதுபோல, தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவும் முயற்சி எடுக்கவில்லை. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் கட்டணக் கொள்ளை நடப்பதை அரசு வேடிக்கைப் பார்க்கிறது.

பாஜக கொண்டு வர நினைக்கும் இந்துத் துவக் கருத்துகளை கல்வியிலிருந்து விலக்கி வைப்பது, அதேசமயம், அதே புதிய கல்விக் கொள்கையின் கல்வி தனியார்மயக் கொள் கையை ஆதரிப்பது என்ற இரட்டை வேட முகத்தை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இப்படி யாக முற்போக்கு பேசிக்கொண்டே அனைவ ருக்கும் கல்வி என்ற ஜனநாயகக் கடமையை திமுக அரசு கைவிடுகிறது.

மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் இணைந்து நடத்தும் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நமது அனைத்திந்திய மாணவர் கழகம் தன்னால் முடிந்த அனைத் தையும் செய்ய வேண்டும்