ஜி20 கூட்டமைப்பின் 17வது உச்சி மாநாடு இந்தோனேசி யாவின் பாலி தீவில் 2022 நவம்பர் 14-15 தேதிகளில் நடைபெற்றது. இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோவிடம் இருந்து ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை உச்சி மாநாட்டின் இறுதி நாளில் இந்தியப் பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். அதன் அடையாளமாக ஜோகோ விடோடோ சுத்தியலை மோடியிடம் ஒப்படைத்தார். தலைமைப் பொறுப்பைப் பெற்றுக் கொண்ட பின் பேசிய இந்திய பிரதமர் மோடி,

"புவிசார் அரசியல் பதற்றம், பொருளாதார மந்தநிலை, உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு, கரோனா பெருந்தொற்றின் நீண்ட கால பாதிப்புகள் ஆகியவற்றை உலகம் ஒரே நேரத்தில் சந்தித்துள்ள வேளையில், ஜி20 அமைப்புக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது.

இந்த நேரத்தில் உலக நாடுகள் ஜி20 அமைப்பை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. அதற்கேற்ப ஜி20 அமைப்பு இந்தியாவின் தலைமையின் கீழ் அனைத்தும் உள்ளடக்கியதாக, லட்சியமிக்கதாக, தீர்க்கமானதாக சிறப்பாகச் செயல்படும் என உறுதியளிக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, உலகளாவிய மாற்றத்திற்கு ஜி20 அமைப்பை ஒரு வினையூக்கியாக மாற்றுவோம். புதிய கருத்துக்கள், விரைவான கூட்டு நடவடிக்கையுடன் கூடிய உலகளாவிய அமைப்பாக ஜி20 செயல்படும்.

வளர்ச்சியின் பயன் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அது ஒவ்வொருவருக்கும் கருணையுடனும் ஒற்றுமையுடனும் வழங்கப்பட வேண்டும். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் உலகளாவிய வளர்ச்சி சாத்தியமில்லை. நமது ஜி20 அமைப்பின் கொள்கையில், பெண்களின் தலைமையிலான வளர்ச்சிக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். அமைதி, பாதுகாப்பான சூழல் இல்லாமல், பொருளாதார வளர்ச்சி மற்றும் புதுமையான தொழில்நுட்பத்தின் பயன்களை நமது எதிர்கால தலைமுறையால் அனுபவிக்க முடியாது. எனவே அமைதி, நல்லிணக்கம் என்ற வலிமையான தகவலை ஜி20 அமைப்பு தெரிவிக்க வேண்டும். இந்த அனைத்து முன்னுரிமைகளும் இந்தியாவின் தலைமையிலான ஜி20 அமைப்பின் கருப்பொருளான 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதில் அடங்கியுள்ளது.

இயற்கை வளங்களுக்கு உரிமை கொண்டாடும் உணர்வால் பிரச்சினைகள் அதிகரிக்கும். இதுதான் சுற்றுச் சூழல் பாதிப்புக்கு முக்கிய காரணம். இயற்கை வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் பூமியின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு தீர்வாக இருக்கும். சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான வாழ்க்கைமுறை என்ற இந்தியாவின் கொள்கைஇதற்கு பயன்தரும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வெவ்வேறு நகரங்களில் ஜி20 கூட்டங்கள் நடத்தப்படும். இதன் மூலம் அக் கூட்டங்களுக்கு வரும் பன்னாட்டு விருந்தினர்களுக்கு இந்தியாவின் அற்புதமான பன்முகத் தன்மை, பாரம்பரியம், வளமான கலாச்சாரத்தின் முழு அனுபவம் கிடைக்கும். ஜனநாயகத்தின் தாயான இந்தியாவில் நடைபெறும் தனிச் சிறப்பு மிக்க கூட்டத்தில் நீங்கள் பங்கேற்க வாழ்த்துக்கள்.'

ஜி20 உச்சி மாநாட்டில் நம்ம மோடிஜி பேசியுள்ளதை செய்தித்தாள்களில் படிக்காதவர் களும்கூட முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே மேற்கூறிய பத்திகள். மோடிஜி பேசிய அனைத்தும் அவ்வளவு முக்கியமானவை. தற்போது ஜி20 கூட்டமைப் புக்குத் தலைமை ஏற்றுள்ள இந்தியாவின் தலைமைப் பீடத்தில் கடந்த எட்டரை ஆண்டுகளாக அமர்ந்திருக்கும் மோடிஜி அவர்கள், தான் பேசியதை தன் நாட்டில் நடைமுறைப் படுத்தியிருக்கிறார்களா? அல்லது ஜி20 உச்சி மாநாட்டில் பேசியதைத் தொடர்ந்து இனியாவது தன் நாட்டில் நடைமுறைப்படுத்துவாரா? 

வளர்ச்சியின் பயன் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இங்கே என்ன நடக்கிறது? 2014ஆம் ஆண்டிற்கு முன்னர் யார் என்றே தெரியாமல் இருந்தவர், அதான் அதானி, மோடியின் நண்பர் இன்று உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார். இந்தியா பட்டினிக் குறியீட்டில் மோசமான நாடுகளுடன் போட்டிபோட்டு பட்டினியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் பத்தே நாட்களில் இந்தியாவுக்கு வரும் என்றார் மோடி. 2024ல் பத்தாண்டுகள் ஆகிவிடும். பொதுத் தேர்தல் வரும்போது அப்போதும் இதையே சொல்வார் மோடி. 2016 நவம்பர் 8ம் நாள் இரவு இந்திய நாட்டிலுள்ள மக்கள் எல்லாருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அன்றிலிருந்து இன்று வரை அடித்தட்டு மக்களையெல்லாம் தூக்கமில்லாமல் இருக்கச் செய்துள்ளார். பணமதிப்பு இழப்பு என்று ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். இந்த பண மதிப்பிழப்பால் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 'கருப்பு பணம்' எல்லாம் ஒழிக்கப்பட்டு விடும் என்றார்.

ஆனால், அரிசிப் பானைக்குள்ளும் இடுப்புச்சேலை முடிச்சுக்குள்ளும் ஆயாக்கள் வைத்திருந்த சேமிப்பு (நல்ல) பணங்கள்தான் வெளியே வந்தன. அம்பானியும் அதானியும் அமித்ஷாவும் பாஜகவும் தாங்கள் பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத பணத்தையெல்லாம் கணக்காக மாற்றிக் கொண்டார்கள். 594 கி.மீ உள்ள கங்கா எக்ஸ்பிரஸ் வே என்ற சாலைக்கு ஒன்றிய அரசு அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட் டுள்ளது. அந்த சாலை வேலைக்காக பொதுத் துறை நிறுவனமான ஸ்டேட் வங்கி ரூ.12,000 கோடி அதானிக்கு கடன் கொடுக்கிறது. மக்கள் பணத்தின் மூலம் கொடுக்கப்படும் இந்தக் கடனைக் கொண்டு அரசாங்க இடத்தில் சாலை போட்டு 30 ஆண்டுகளுக்கு டோல்கேட் வரி வசூல் செய்யும் உரிமையும் கொடுக்கப் பட்டுள்ளது. இப்படி வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் அது வங்கிகளால் 'வராக் கடன்' என்று தள்ளுபடி செய்யப்படுகிறது. அப்படி இந்த அதானி - அம்பானிகள் போன்ற கார்ப்பரேட்டுகள் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை மட்டுமே பல லட்சம் கோடி ரூபாய்கள். கனரா வங்கி மட்டுமே 11 ஆண்டுகளில் ரூபாய் 1 லட்சத்து 29 ஆயிரத்து 88 கோடி தள்ளுபடி செய்துள்ளது. இப்போது கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 155 பில்லியன் டாலர். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 93 பில்லியன் டாலர். கவுதம் அதானியின் ஒரு நாள் வருமானம் ரூ.1,612 கோடி. முகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் ரூ.210 கோடி. மோடிஜியின் தயவால் அம்பானியை அதானி பின்னுக்குத் தள்ளி விட்டார். இந்தப் பணக்காரர்கள் பட்டியலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவும் இப்போது இ ணைந்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 1000 மடங்குகளில் அதிகரித்துள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் 2014ல் ரூ.10,074 கோடி. 2021ல் ரூ. 30,500 கோடி. என்னவொரு முன்னேற்றம்!. இதுதான் மோடிஜி சொல்லும் அனைவருக்கும் பொதுவான வளர்ச்சி!.

இயற்கை வளங்களுக்கு உரிமை கொண் டாடும் உணர்வால் பிரச்சினைகள் அதிகரிக்கும். இதுதான் சுற்றுச் சூழல் பாதிப்புக்கு முக்கிய காரணம். அதாவது தனிவுடமைச் சிந்தனைதான் சுற்றுச் சூழல் பாதிப்புக்குக் காரணம் என்கிறார் மோடிஜி. இங்கே இந்தியாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? காடுகள், கடற்கரைகள், மலைகள் எல்லாம் அனில் அகர்வாலிடமும் அதானியிடமும் அம்பானியிடமும் தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த ( தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் தங்கள் லாபத்திற்காக, இயற்கை வளங்களைக் கொள்ளை அடிப்பதற்காக, மலைகளில் வசிக்கும் பழங்குடி மக்களை அவர்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கிறார்கள். அவ்வாறு அவர்களை வெளியேற்றுவதற்கேற்றவாறு சட்டங்கள் திருத்தப்படுகின்றன மோடிஜியின் அரசால். புதிய சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு 2020. புதிய மீன்பிடிக் கொள்கை. வயல் வெளி களையும் வனங்களையும் அழித்து கார்ப்பரேட் முதலாளிகள் கபளீகரம் செய்யும் வளங்களைக் கொண்டு செல்ல எட்டு வழிச்சாலை. இந்தியா வின் கொள்கை சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான வாழ்க்கை முறை என மோடிஜி வெளிநாட்டில் தான் சொல்கிறார். உள்நாட்டில் அதற்கு நேர்மாறான கொள்கைகளையும் திட்டங்களையும் அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

5ஜி தொழில் நுட்பம் உள் நாட்டுத் தொழில் நுட்பம் என்கிறது மோடிஜியின் அரசு. அதை எந்நாட்டவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். C அதை ஏலம் எடுப்பத்தில் அம்பானிக்கும் அதானிமிடையேதான் போட்டி. ரிலையன்ஸ் ஜியோவுக்கும் அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ்ஸிற்கும் இடையே போட்டி. ஏர்டெல், வோடாபோன் ஆகியவை இருந்தாலும் இவர்கள் இவருவருக்குள்தான் அதிகம் போட்டி. முகேஷ் அம்பானிக்கு என இறுதியில் முடிவானது. இதில் வேடிக்கை என்னவென்றால், பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம் அரசுத் துறை நிறுவனம். அதற்கு இந்த 5ஜி தொழில் நுட்பத்தை, வளங்களுக்கு உரிமை கொண்டாடும் உணர்வால் பிரச்சினை அதிகரிக்கிறது என்று இந்தோனேஷியாவில் போய் சொல்லும் மோடிஜி அரசு கொடுக்கத் தயாராக இல்லை. இப்படி தனியார் முதலாளிகள் கையில் எல்லாவற்றையும் கொடுத்துவிட்ட பின்னர் புதுமையான தொழில் நுட்பத்தின் பயன்களை, மோடிஜி சொல்வதுபோல, நமது எதிர்கால தலைமுறையால் எப்படி அனுபவிக்க முடியும்.

மலைகளில் உள்ள கனிம வளங்களை யெல்லாம், தூத்துக்குடியை நாசப்படுத்திய ஸ்டெர்லைட் அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் கபளீகரம் செய்ய மோடிஜி முழு ஆசி வழங்குகிறார். ஒடிசாவில் உள்ள ஆதிவாசிமக்கள் அவர்கள் வாழ்விடங்களில் இருந்து அரசாங்கத்தாலேயே அப்புறப்படுத்தப்படுகி றார்கள். சமீபத்தில் மோடிஜியின் குஜராத்தில் மோர்பி நகரில் ஆற்றுப்பாலம் அறுந்து விழுந்து 142 பேர் இறந்துபோனார்கள். அதற்கு காரணம் தொழில் அனுபவமே இல்லாத அஜந்தா என்கிற தனியார் கடிகராக் கம்பெனியிடம் ஆற்றுப் பாலத்தை சீரமைக்கக் கொடுத்ததேயாகும். குஜராத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த பாலம் விபத்தால் வாக்கு சரிந்து விடுமோ என்கிற அச்சத்தால், எப்போதும் நிமிர்ந்து நடக்கும் மோடிஜி, இப்போது வாக்கிற்காக குனிந்து கும்பிடுபோகிறார்.

மோடிஜி அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பான சூழல் பற்றி பாலியில் போய் பேசுகிறார். ஆனால், இங்கே அவரின் ஆட்கள், பாஜக-ஆர்எஸ்எஸ் சங்கிகள், காஷ்மீரத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் இந்தியர்கள் என்றும் பிற பகுதிகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானியர்கள் என்றும் பாகுபாடு காட்டி கலவரங்களை மூட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெறுப்பு அரசியலை விதைத்துக் கொண்டிருக் கிறார்கள். வேலையின்மை, வருமானம் இன்மை, விலைவாசி உயர்வு பற்றி வாயைத் திறந்தாலே தேச விரோதிகளாக, தீவிரவாதிகளாகச் சித்தரிக்கபடுகிறார்கள். மாநிலங்களின் உள்துறை உ அமைச்சர்களுக்கான கூட்டத்தில் பேசிய மோடிஜி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் நல்ல பலனைத் தந்துள்ளது என்றும் கன் (துப்பாக்கி) வைத்திருப்பவர்களை மட்டுமல்ல பென் (பேனா) வைத்திருப்பவர்களையும் கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால், இளைஞர்கள் மத்தியில் தீய சிந்தனைகளைச் திணித்து விடுவார்கள் என்றார். அதாவது, மோடிஜியின் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை என்று எடுத்துச் சொன்னால், எழுதினால் அவர்கள் இந்த நாட்டிற்கு எதிரானவர்கள், அவர்கள் உண்மையை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி, பாஜக-சங்கிகள் அரசுக்கு எதிராகத் திரும்பி விடுவார்கள் என்பதால் பென் வைத்திருப்பவர்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்.

இந்தியாவின் தலைமையிலான அமைப்பின் கருப்பொருள் 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஜி20 ஒரே எதிர்காலம்' என்கிறார். இதை என்ன பொருளில் மோடிஜி அவர்கள் சொன்னார் கள் என்று நாம் பார்ப்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், மோடிஜியின் தலைமை யிலான பாஜக அரசு, 'ஒரே நாடு, ஒரேமொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே ரேசன் கார்டு, ஒரே சீருடை' என்ற ஆர்எஸ்எஸ்ஸின் திட்டத்தை அன்றாடம் நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில், சத்திஸ்கர் மாநிலம், அம்பிகாபூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவில் இருப்பவர்கள் எல்லோரும் இந்துக்கள்தான், அவர்கள் எல்லோருடைய டிஎன்ஏயும் ஒன்றுதான் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். நாற்பதாயிரம் ஆண்டுகளாக பூமியின் மொத்த நிலப்பரப்பிலும் உள்ள மனிதர்களிடம் ஒரே டிஎன்ஏதான் உள்ளது என்கிறார். கோல்வால்கர், சாவர்க்கரின் வழி வந்தவர்கள்தான் மோடிஜியும் மோகன் பகவத்ஜியும். மோடிஜிக்கு கட்டளையிடும் இடத்தில் இருக்கும் மோகன் பகவத், இந்தியா என்றால் இந்து மதம் மட்டும்தான், ஒரு மதம்தான், ஒற்றைத் தன்மைதான், பன்முகத் தன்மை கிடையாது என்று இந்தியாவிற்குள் பேசுகிறார். மோகன் பகவத்தின் வழியைப் பின்பற்றும் மோடிஜியோ, இந்தோனேசியா பாலியில் நின்று கொண்டு, ஜி20 அமைப்பின் கூட்டங்கள் இனி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடக்கும், அதில் கலந்து கொண்டு இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பார்க்க வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். ஒரு வகையில், மோடிஜியே இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட பாரம்பரிய நாடு என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பெண்களின் தலைமையில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்கிறார் மோடிஜி. ஆனால், மோடிஜியின் கட்சி ஆட்கள், சங்கி அமைச்சர்களோ, பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது, படிக்கப் போகக் கூடாது, பணிகளில் அமர்த்தப்படக் கூடாது, பூங்காக்களுக்கு வரக் கூடாது, பாவாடை தாவணி, சேலைதான் அணிய வேண்டும் என நிபந்தனைகளை நீட்டி முழங்கி படுபிற்போக்கான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

ஜி20 உச்சி மாநாட்டில் இந்திய பன்முகத் தன்மையையும் பாரம்பரியத்தையும் பற்றி பெருமையாகப் பேசிய அதே வேளை இந்தோ னேஷியாவில் வாழும் இந்திய சமூகத்தினர் மத்தியில் உரையாற்றும் போது, 2014க்கு முந்தைய இந்தியாவிற்கும் அதற்குப் பிந்தைய இந்தியா விற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று பேசி இந்திய பாரம்பரியத்தையே சிதைத்து விட்டார். எந்தவொரு நாட்டின் தலைவரும்அதிலும் குறிப்பாக ஆட்சியில் இருக்கும் அதிபரோ, பிரதமரோ தன் நாட்டில் நடக்கும் - பிரச்சனைகள் பற்றி வெளிநாட்டினர் மத்தியில் பேசுவது கிடையாது. அது மரபு கிடையாது என்பது மட்டுமல்ல தன் நாட்டைப் பற்றி தானே குறை சொல்வதாகும். மோடிஜி சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. 2014க்கு முன்பு தலித் மக்கள், சிறுபான்மை மக்கள், அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் அச்சமின்றி, நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று தலித் மக்கள், திருட்டுப் பட்டம் கட்டப்படு கிறார்கள், மாட்டைக் காட்டிலும் மிகக் கேவல மாக கட்டி வைத்துத் தாக்கப்படுகிறார்கள். அதன் விளைவாக இறந்தும் போகிறார்கள். இஸ்லாமி - யர்கள், சிறுபான்மையினர் வெறுப்பு அரசியலுக் குள்ளாக்கப்பட்டும், பயங்கரவாதிகளாகச் சித்தரிக் கப்பட்டும் அச்சத்தோடு வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மாட்டிறைச்சி வைத்திருந் தார்கள் என்றும் மாட்டைக் கொன்றார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு அடித்துக் கொல்லப்படு கிறார்கள். அவர்களின் வீடுகள் புல்டோசர்களால் இடித்துத் தள்ளப்படுகின்றன.

பல மொழிகள் பேசும், பல கலாச்சாரம் பண்பாடுகள் கொண்ட இந்தியாவில் பல = மதங்கள், பல வழிபாட்டு முறைகள் கொண்ட இந்தியாவில், இந்து, இந்தி, இந்துஸ்தான் என்று ஒற்றைத் தன்மையை திணிக்கவும் மதவெறியை, - சாதி வெறியை ஊட்டி வளர்த்துக் கொண்டும் இருக்கிறார்கள் சங்கிகள். 2014க்கு முன்பு மறைந்து மறைந்து தங்கள் சனாதனக் கருத்துக்களைக் பரப்புதல், ஆர்எஸ்எஸ் திட்டங்களை (குண்டு வைத்தல் மற்றும் கலவரங்களைத் தூண்டுதல்) செயல்படுத்துதல் ஆகியவற்றை மறைமுகமாகச் செய்து கொண்டிருந்த சங்கிகள் இப்போது பகிரங்கமாகவே எவ்வித அச்ச உணர்வும் இன்றி செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மனுதர்மத்தின் படி நடக்க வேண்டும் என்று சொல்லும் அவர்கள், அதில் உள்ள அசிங்கங் களைச் சுட்டிக் காட்டும்போது, சுட்டிக் காட்டுபவர்களை அடக்க முற்படுகிறார்கள். 2014க்குப் பின்னர் காவிப் பாசிசம் தன்னுடைய ஆக்டோபஸ் கரங்களை அனைத்து இடங்களிலும் பரப்பி வைத்துக் கொண்டு தன்னுடைய கார்ப்பரேட் எசமானர்களுக்காக விசுவாசத்தோடு இந்திய நாட்டையும் மக்களையும் காவு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் காவிப் பாசிசம் காணாமல் போகும் மக்கள் எழுச்சியால்.