கடந்த எட்டு ஆண்டுகளில் பிஜேபி ஆட்சியின் கீழ், வங்கிக் கடன் தள்ளுபடிகளும் வங்கி மோசடிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே யிருக்கின்றன. 2014 வரை நல்ல நிதி நிலையில் இருந்த பொதுத்துறை வங்கிகள், மோடி ஆட்சி தொடங்கியதில் இருந்து வீழ்ச்சியடையத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில் தான், திருப்பிச் செலுத்தாத கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுடன் நாட்டை விட்டு ஓடிப்போகும் சுதந்திரம் கார்ப்பரேட் மோசடியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. 24,000 கோடி பெரும் கடனுடன் நாட்டை விட்டு வெளியேறிய ரிஷி மிகச் சமீபத்திய முக்கியமான அகர்வால் மிகச் சமீபத்திய நபராவார். ஏபிஜி சிப்யார்டு என்ற அவருடைய நிறுவனம் கெடுமதி மோசடியளர்களின் வரிசையில் முக்கியமானதாக விளங்கியது. இருப்பினும், இந்த அரசாங்கத்தை கவலைக் குள்ளாக்குவது எதுவெனில், எதுவெனில், ஏழைகளின் நலத்திட்டங்களுக்கான செலவினங்கள் தான். இந்தத் தப்பியோடிச் சென்றுவிட்டவர்களைப் பற்றி கவனிக்கத்தக்க வகையில் மௌனம் சாதிக்கும் பிரதமரோ மானியங்களுக்குச் செலவிடப்படும் தொகை குறித்து கவலை கொள்கிறார். உண்மையைத் திரிக்கும் தனது தேர்ந்த வாய்வீச்சுத் திறமையை உபயோகித்து,மானியங்களை 'இனிப்புத் தடவிய தின்பண் டங்கள்' என சமீபத்தில் அவர் வரையறுத்தார். கோடிக்கணக்கான ஏழைகள் உயிர் பிழைத்தி ருக்கவே பெரும்பாடுபட வேண்டியிருக்கும் இந்தியா போன்ற நாட்டின் பிரதமமந்திரி, அவர்களின் சமூக நல மேம்பாட்டிற்கான உரிமைகளை பெறுவதற்காக, அதன் குடிமக்களை அவமானப்படுத்த சுதந்திரம் எடுத்துக் கொள் கிறார். ஆனால் உண்மை என்னவென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நலத்திட்டங்கள் = மீதான செலவினங்களின் சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. அதேநேரத்தில், கடன் தள்ளுபடிகளும் வங்கி மோசடிகளும் வியக்கதக்க அளவிற்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. மதவெறிச் சூழலை கொந்தளிப்பாக வைத்திருப்பதன் மூலம் வங்கிக் கொள்ளை பயனாளிகளுக்கும் மோடி ஆட்சியின் கள்ளக்கூட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்கிட, பிஜேபியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவும் ஆர்எஸ்எஸ்சின் காலாட் படையினரும் கூடுதல் நேரம் வேலைசெய்ய, - செயலில் இறக்கி விடப்பட்டுள்ளனர். த இந்து செய்தியேட்டின்படி, மோடி ஆட்சியின் கீழ், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்தத் தொகை கிட்டத்தட்ட 10 லட்சம் கோடிகளாகும். அதேநேரத்தில், ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் கடைசி ஆறு ஆண்டுகளில் (2008-14) தள்ளுபடி செய்யப்பட்ட கடன்தொகை ரூ.32,000 கோடிகளாகும் (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜனவரி 11, 2021).
கீழே காட்டப்பட்டுள்ள ஒப்பீடு, மோடி ஆட்சியின் கீழ் இந்த நாடு முன்னேறிச் செல்லும் பாதையை மிகவும் தெளிவாக்குகிறது.
மோடி ஆட்சியின் கீழ் வழங்கப்பட்ட தள்ளுபடிகளின் ஆண்டு வாரியாக பிரிக்கப்பட்ட விவரங்கள் அட்டவணை 1ல் கொடுக்கப் பட்டுள்ளது. மார்ச் 2022 வரையுள்ள கெடுமதி மோசடியளர்களின் வரிசையில் முதலாவதாக கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட் உள்ளது. எரா இன்ஃபிரா என்ஜினீயரிங், கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர், ஆர்ஈஐ அக்ரோ லிமிடெட், ஏபிஜி சிப்யார்டு ஆகியவை அதனைத் தொடர்ந்து வருகின்றன. மெகுல் சோக்சியின் நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ், ரூ.7,110 கோடி என்ற திகைக்க வைக்கும் அளவிற்கு இந்திய வங்கிகளுக்கு கடன்பட்டுள்ளது. இரா இன்ஃபிரா என்ஜினீயரிங் ரூ.5,879 கோடி கடன்பட்டுள்ளது. அதேநேரத்தில், கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் ரூ.4,107 கோடி கடன்பட்டுள்ளது. ஆர்ஈஐ அக்ரோ லிமிடெட், ஏபிஜி சிப்யார்டு ஆகிய வேறு பெரிய மோசடியாளர்கள் முறையே ரூ.3,984 கோடி, ரூ.3,708 கோடிக்கு வங்கிகளை மோசடி செய்துள்ளார்கள் (த இந்து, ஆகஸ்ட் 2, 2022).
2014ல் இந்த அரசாங்கம் பதவியேற்ற பிறகு, வங்கித் தள்ளுபடிகள் போன்றே வங்கி மோசடிகளும் அதிவிரைவான விகிதத்தில் உயர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்தியா டுடே இதழின் படி 2014 லிலிருந்து ஒவ்வொரு நாளைக்கும் சராசரியாக, திகைக்க வைக்கும் அளவிற்கு ரூ.100 கோடியை நாடு இழக்கிறது என்பதை மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் உள்ளடக்கியுள்ளன. 202021 நிதியாண்டில், வங்கி மோசடியின் மூலம் 71.38 லட்சம் கோடிகள் உறிஞ்சப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், குறைந்த அளவிற்கு ?1,000 கோடிகள் மட்டுமே மீட்கப்பட்டது. இது வெளியேறிய தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதாகும் (இந்தியா டுடே டிசம்பர் 15, 2021).
வைப்புத்தொகையாளர்களின் பணத்தால், திரும்ப செலுத்தாத கடனாளிகளை மீட்பது
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் போது வழங்கப்பட்ட கடன்களில் தான், தள்ளுபடிகளும் வங்கி மோசடிகளும் நிகழ்ந்துள்ளன என பிஜேபி
அரசாங்கம் வாதிடுகிறது. இந்தக் கூற்றின் உண்மைத் தன்மையை நாம் பார்க்கலாம். எந்தவொரு வங்கிக் கடனையும் தள்ளுபடி செய்வதற்கு, வங்கியாளரின் கணக்கு புத்தகத் திலுள்ள நிதி சொத்துகள் 'செயல்படாத சொத்துகள்' என முதலில் வகைப்படுத்தப் படவேண்டும். ஒரு வங்கியிலிருந்து பெறப்பட்ட எந்தவொரு கடனோ அல்லது முன்பணமோ அதற்கான வட்டி மற்றும்/அல்லது அசல், தவணை வழங்கப்பட்ட தேதியிலிருந்து 90 நாளைக்கு திரும்ப செலுத்தப்படாமல் இருக்கும் பட்சத்தில், செயல்படாத சொத்து எனப்படும். தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து முன்பணங்களும் கடன்களும் இப்போதைய ஆட்சியின் கீழ், 90 நாட்கள் வரை கண்டிப்பாக திரும்ப செலுத்தப்படாமல் இருந்திருக்கின்றன என்றே இதற்கு அர்த்தமாகும். 2014 க்கு முன்பே கடன்கள் வழங்கப்பட்டன என ஒருவர் வைத்துக் கொண்டாலும்கூட, முன்னதாக தொடர்ந்து தவணைகளை திரும்ப செலுத்திக் கொண்டிருந்த பலரும் மோடி ஆட்சியின் போது ஏன் தவறிழைக்கத் தொடங்கினர் என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய ஆட்சியின் கீழ் திரும்பச் செலுத்தாமையானது ஒப்பீட்டளவில் அதிவிரைவு வேகத்தில் நிகழத் தொடங்கியது ஏன்? ஏனென்றால் திரும்பச் செலுத்தத் தவறிய வர்களுக்கு தண்டனை கிடையாது என்பதாலா? இருப்பினும், வங்கிகளின் மோசமான நிலையில் இருந்த நிதிச்சொத்துகள் தங்களால் முன்னதாகவே அங்கீகரிக்கப்பட்டதால்தான் செயல்படாத சொத்துகள் என்னும் பிரச்சினையே வெளிக் கொண்டுவரப்பட்டது என மோடி அரசாங்கம் வாதிடுகிறது. செயல்படாத சொத்துகள் குறித்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரையறைக்கு எதிராக செல்லக்கூடிய இந்த வாதத்தை ஒருவர் ஏற்றுக் கொண்டாலும் கூட, இந்த மோசமான நிலையில் இருந்த நிதிச்சொத்து களை மீட்க 2014 க்குப் பிறகு பிஜேபி அரசாங்கம் என்ன செய்தது? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கடன்களை மீட்கும் விகிதம், திரும்பப் பெறுவதற்காக வைக்கப்பட்டுள்ள பொறியமைவு என்ன? மேலும், அதன் வெற்றி என்ன?
திரும்பச் செலுத்தத் தவறிய கடனை மீட்டெடுக்கும் எண்ணம், மோடி அரசாங்கத்திற்கு ஒருபோதும் இல்லை
மோடி ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளின் போது இந்த அரசாங்கம், வங்கிகளின் செயல் படாத சொத்துகளை தீர்ப்பது என்ற குறிப்பிடப்
பட்ட நோக்கத்துடன் (நிறுவன) கலைப்பு, திவால் நீதிமன்றத்தையும் (ஐபிசி), தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தையும் (என்சிஎல்டி) நிறுவியது. செயல்முறையை ஐபிசி வரைய றுத்தது. என்சிஎல்டி என்பது நிறுவன பொறி யமைவு ஆகும். இதன்மூலம் தான் தீர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிதிநிலையில் வலிமையை அடைவதற்காக வங்கிகளின் இருப்புநிலையைச் சீர்செய்வது என்ற நோக்கத்து டன் இது ஏற்படுத்தப்பட்டது. இந்த செயல் முறையில் உண்மையிலேயே என்ன நிகழ்ந்தது என்றால், கடனைத் திரும்பப் பெறுவது மந்தமாகவும் கடன் தள்ளுபடி செய்வது அதி வேகத்திலும் நடந்தன. (கடனைத்) திரும்பச் செலுத்தாதவர்களுக்கு குற்ற நடவடிக்கை எதுவும் இல்லை. சாதாரணமாக வைப்புக் கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்தைக் கொண்டு கடனை திரும்பச் செலுத்தாதவர்களின் கணக்கு நேர் செய்யப்பட்டது. (கழிவு மூலம் ஒரு சொத்தின் மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டது). மார்ச் 2022 வரை, ஐபிசியின் மூலமாக தீர்க்கப்பட்ட கடன் தொகை ரூ. 6.85 லட்சம் கோடிகளாகும். கிட்டத்தட்ட ரூ.2.25 லட்சம் கோடிகளை கடன் வழங்கியவர்கள் பெற்றனர் (பிசினஸ் ஸ்டாண்டர்ட், மே 9, 2022). இது ஐபிசி செயல்முறையின் கீழ் தீர்ப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானதாகும். தீர்க்கப்பட்டவை களில் சில பெரிய தொகைகளை வெளியே எடுத்த உடனே இந்த மூன்றில் ஒரு பங்கு என்ற எண்ணிக்கை நான்கில் ஒரு பங்குக்கும் குறைவா னதாக வீழ்ந்து விடுவதால், இந்த எண்கள் கூட உண்மையான சித்திரத்தை வழங்குவதில்லை. ஐபிசி செயல்முறையின் கீழ், எடுத்துக் கொள்ளப் பட்ட 4,451 வழக்குகளில் 396 தீர்வு காணப் பட்டன. 1,349 வழக்குகள் கலைப்பு நடவடிக் கைக்கு உட்படுத்தப்பட்டன. 1,114 முடித்துக் கொள்ளப்பட்டன அல்லது திரும்பப் பெறப் பட்டன. 1,682 இன்னும் நிலுவையில் உள்ளன. நலிவுற்ற நிறுவனங்களை மீட்டெடுப்பது என்ற குறிப்பிடப்பட்ட நோக்கம் நிறைவேற வில்லை என்பதையே பெரும் எண்ணிக்கை யிலான நிறுவனங்கள் மூடப்பட்டது நமக்கு காட்டுகிறது. கார்ப்பரேட்டுகள் அவர்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தவில்லை. மேலும் கணிசமான கடன் குறைப்பை பெற்றுக் கொண்ட பின்பு தங்களது நிறுவனங்களைக் கலைத்துவிட்டனர். இந்தச் சுமையை, மேலே குறிப்பிட்டது போன்று சாதாரண வைப்புத் தொகையாளர்கள் மட்டுமேயல்ல, 'இருப்பு நிலையை சரிசெய்ய வேண்டிய' செயல்முறையை மேற்கொள்வதற்காக, பொதுத்துறை வங்கிகளில் மறு மூலதனமாக்கலுக்காக ரூ. 3.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதிலிருந்து அரசாங்கக் கருவூலமும் கூட சுமக்க வேண்டியிருந்தது. இறுதி நிதிச்சுமை அரசாங்கக் கருவூலத்தின் மீதே விழுந்தது.
கார்ப்பரேட்டுகளின் பணப்பேழைகளில் மக்களின் பணம்: மோடிப் பொருளாதாரம்
விரைவாக அங்கீகரித்தல், தீர்வு காணுதல், மறுமூலதனமாக்கல், மறுசீரமைத்தல் போன்ற அரசாங்கத்தின் நீண்ட காலத் திட்டங்களால், சமீபத்தில் செயல்படாத சொத்துக்கள் என்ற பிரச்சனை குறைக்கப் பட்டிருக்கிறது என தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். 2014 இல் பிஜேபி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த போது வங்கிக் கடன்களில் ஒட்டுமொத்த செயல்படாத சொத்துக்கள் 4.1% ஆக இருந்தது. அது 2018ல் 11.5% எனும் உச்சநிலையை தொட்டது. தற்போது 5.97% ஆக குறைந்திருக்கிறது. இந்த சந்தேகத்திற்கிடமான கடன்களை விரைவாக அங்கீகரித்ததும் அத்தகைய கடன்களை சரியான நேரத்தில் தீர்த்ததும் தான் 'வெற்றி'யின் கதைக்கு காரணமென காட்டப்படுகிறது. ஒட்டுமொத்த நடவடிக்கையினால் சுமையானது யார் தலையில் சுமத்தப்பட்டது என்பது மூடி மறைக்கப் பட்டுவிட்டது. 2016லிருந்து 2019 வரையிலான நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் கூட்டு இழப்பு ரூ.1,64,474 கோடி என்பது சுட்டிக் காட்டப்படவேண்டும். ஆக, மத்திய அரசாங்கம் லாபத்தில் பங்கையும் வரி வருமானத்தையும் இழந்தது. இதையொட்டி பல்வேறு நிலைகளில் அரசாங்க நிதியின் மீது நெருக்கடி ஏற்பட்டது. மோடி அரசாங்கம் அதிகாரத்தைப் பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு என்ன நடந்தது என நாம் பார்க்கலாம். 2013-14 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ.37,393 கோடி ஒட்டுமொத்த லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்தன.
சுருங்கக் கூறுவதென்றால், வைப்புத் தொகை யாளர்கள், வரி செலுத்துபவர்கள் ஆகிய பொது மக்களின் பணம், பொதுத்துறை வங்கிகளின் இருப்பு நிலையை 'சீர்' செய்ய உபயோகிக்கப் படுகிறது. திரும்பச் செலுத்தாத கார்ப்பரேட்டு களின் திகைக்க வைக்கும் அளவிற்கான
கடன்தொகையோ தள்ளுபடி செய்யப்படுகிறது. மாபெரும் அளவிலான பொதுமக்களின் பணம், மறுமூலதனமாக்கலுக்காக செலவழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, மேலும், இந்த செயல்முறையில் புழக்கத்திற்குள் பணம் நுழைக்கப்படுவதற்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒட்டுமொத்த வலிமிகுந்த நடவடிக்கையின் முடிவில், செயல்முறையின் ஒருங்கிணைந்த ஆற்றலின் நன்மைகளைப் பெற, இலாபத்தை அதிகரிப்பதற்காக செலவுகளை குறைக்க என்னும் பெயரில், பொதுத்துறை வங்கிகள் பெரிய வங்கிகளோடு இணைக்கப்படுகின்றன. தனியார் மயமாக்கத்தை முன் தள்ளுவது என்னும் இறுதி நோக்கத்துடன் இவையனைத்தும் செய்யப் படுகின்றன. பொதுத்துறை வங்கிகளில் அரசாங்கத்தின் குறைந்தபட்ச பங்குகளை 51%த்திலிருந்து 26% ஆக குறைப்பதற்காக வங்கி விதிகள் (திருத்த) மசோதா 2021 கொண்டு வரப்பட்டது என்பதை இங்கே கூறுவது பொருத் தமானதாகும்.
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப் படும் செயல்முறையை மாற்றியமைப்பதும் பொதுமக்களின் பணம் கொள்ளை அடிக்கப் படுவதை தடுப்பதும் இன்றைய காலகட்டத்தின் தேவையாகும். தற்போதைய ஆட்சியின் ஒரு சில கள்ளக்கூட்டு கார்ப்பரேட்டுகள் முதலில் அவர்களுடைய கடனை திரும்பச் செலுத்தாததன் மூலம் வங்கிகளை கொள்ளையடிப்பதற்கும், பிறகு இந்த குற்றத்தை செய்ததற்கு பரிசாக அதே வங்கிகளுக்கு அவர்களை முதலாளிகளாக ஆக்குவதற்கும் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.
இந்த வங்கிகள் பொதுத்துறைக்கு சொந்தமானதாக இருக்கும்போது அனைவருக்குமான நிதிச் சேவைகள், கிராமப் புறங்களின் உட்பகுதி களுக்கும் வங்கிகளின் வலைப் பின்னலை வளர்த்தெடுத்தது போன்ற வற்றில் முக்கிய பங்கு வகித்தன. லாபத்தை தேடும் தனியார் நிறுவனங் களுக்கு வங்கிகள் கொடுக்கப்பட்டால் வங்கிகள் இது போன்ற பங்களிப்பை ஆற்றாது. ஏற்கனவே கணிசமான கடன் குறைப்பை பெற ஐபிசியையும் என்சிஎல்டி செயல்முறையையும் கார்ப்ப ரேட்டுகள் உபயோகித்து விட்டன. அதே கார்ப்பரேட்டுகள் வங்கிகளின் முதலாளிகளாகி விட்ட உடனேயே, வைப்புத் தொகையாளர்களின் பணத்திற்கு என்ன நடக்குமென்பதை கணிப்ப தொன்றும் கடினமானதல்ல. ஆக, பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்பது என்பது சாதாரண மக்கள் கடினப்பட்டு உழைத்த சேமிப்புகளை பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.
அட்டவணை 1:
மோடி ஆட்சியின் கீழ் ஆண்டு வாரியாக
பிரிக்கப்பட்ட தள்ளுபடிகள்
நிதியாண்டு தொகை (லட்சம்கோடி ரூபாயில்)
2021-22 1,57,096
2020-21 2,02,781
2019-20 2,34,170
2018-19 2,36,265
2017-18 1,61,328
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)