கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியத்தில், கட்சிக் காங்கிரஸ், குறிப்பிட்ட அந்த சூழலில் மேற்கொள்ளவிருக்கும் வழியை வகுத்தளிக்கும் மிக உயர்ந்த அமைப்பாகும். இந்தியாவில் தற்போதுள்ள சூழலானது, சுதந்திரத்துக்குப் பிந்தைய நாட்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்தவற்றிலேயே மிகவும் சவால் மிக்க சூழலாகும். இத்தகைய பின்புலத்தில், இகக(மாலெ)வின் 11வது காங்கிரஸ், கட்சியின் உள்ளார்ந்த வலுவையும் விரிவடைந்து வரும் அமைப்பையும் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராகவும் சங்கப் படைக்கு எதிராகவும் மக்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்துவதற்கான வளர்ந்து வரும் முன்முயற்சி, தலையீட்டை இயங்காற்றல் மிக்க வகையில் நிகழ்த்திக் காட்டியதெனலாம். காங்கிரஸ் துவங்குவதற்கு முன், பிப்ரவரி 15 அன்று நடந்த 'ஜனநாயகம் காப்போம், இந்தியாவைக் காப்போம்" பேரணியிலிருந்து, பிப்ரவரி 20 இரவு முடிந்த நிறைவு நிகழ்ச்சி வரையிலான ஒரு வாரகால நிகழ்வுகளும் இன்றைய மிக முக்கியமான கட்டத்தில், இகக(மாலெ) யின் மாபெரும் புரட்சிகர மரபையும் அதன் மறு உறுதிசெய்யும் அதன் வலுவையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் நிகழ்வுகளாக இருந்தன.
தொடர் நிகழ்ச்சிகளும் பல்வேறு தீர்மானங் களும் 11வது காங்கிரஸ், கட்சியின் நடந்து வரும் கொள்கை நடைமுறைகளையும் கட்சியின் வளர்ந்து வரும் அரசியல் வழியின் பல்வேறு பட்ட பரிமாணங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாக இருந்தது. காங்கிரசுக்கு முந்தைய நாளன்று நடைபெற்ற பேரணி, கட்சியின் அமைப்பு வலுவையும் புதிய பகுதிகளில் கட்சி வளர்ந்து வருவதையும் நகர்ப்புர பிகாரின் நடுத்தர வர்க்கங்கள் உள்ளிட்ட புதிய பிரிவினர் மத்தியில் கட்சியின் வளர்ந்து வரும் செல்வாக்கையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தது. பிகாரின் பாஜக அல்லாத மெகா கூட்டணியில் உறுப்பினர் பாத்திரத்தை வகித்து அரசாங்கத்துக்கு வெளியி லிருந்து ஆதரவு தந்துவருகிறது; அதே வேளை, மக்களது பலதரப்பட்ட உரிமைகளுக்காக நடத்தும் போராட்ட உறுதிப்பாட்டை உயர்த்திக் காட்டுவதாகவும் இருந்தது. கட்சியின் வலிமை, வெகு மக்களுடனான நெருக்கமான பிணைப் பிலும், தொடரும் வேலையிலும் உள்ளது. மேலும், அனைத்துவிதமான கடினமான சூழ்நிலையிலும் தாக்குப்பிடித்து நிற்கும் மக்கள் போராட்டங்களிலும் உள்ளது. கட்சியின் இந்தக் கருவான வலிமையின் குவிப்பும் அறுதியிடலும் தான் பாசிச எதிர்ப்பில் கட்சியின் கடப்பாடு மிக்க பாத்திரத்துக்கும் இத்தகையதொரு (அரசியல்) வழி கோருகிற பலதரப்பட்ட கடமைகளுக்கும் முன் முயற்சிகளுக்கும் திறவுகோலாக விளங்குகிறது.
கட்சிக் காங்கிரசின் முறையான துவக்கமானது, இடது முகாமுக்குள் இருக்கும் நெருக்கமான ஒற்றுமை, ஒத்துழைப்புடன் துவங்கியது. இகக(மாலெ) ஒரு அகில இந்திய ஒருங்கிணைப்பில் சேர்ந்துள்ள இகக(மா), இகக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சிகளுடன், ஜார்க்கண்டின் மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்புக் கமிட்டி, மகாராஷ்டிராவின் லால் நிசான் கட்சி, மகாராஷ்டிராவின் சத்ய சோதக் கம்யூனிஸ்ட் கட்சி, பஞ்சாபின் ஆர்எம்பிஅய் கட்சி ஆகிய (நமது) நீண்டகால கூட்டாளிகளும் பங்கு பெற்று தங்களது ஒற்றுமை, ஒருமைப்பாட்டுச் செய்திகளை தெரிவித்தன.
தொலைதூர வெனிசுலா, ஆஸ்திரேலியாவிலிருந்தும் அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளிலிருந்தும் சர்வதேச ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் உத்வேகமூட்டும் வெளிப்பாட்டையும் பதினோராவது கட்சிக் காங்கிரஸ் கண்டது.இந்தியாவில் பயிற்றுவிக்கும் உக்ரேனிய பேராசிரியர், பாலஸ்தீனை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலை புறக்கணிக்கும் பிடிஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த பிரதிநிதியின் கருத்துகளையும் காங்கிரஸ் செவிமடுத்தது.
லத்தின் அமெரிக்கா, ஆப்ரிக்கா,அய்ரோப்பா ஆகிய நாடுகளின் முற்போக்கு கட்சிகள், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அண்டை நாடுகளிலிருந்தும் வீடியோ, எழுத்து பூர்வமான செய்திகளும் வந்திருந்தன. வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்த்தும் நவ பாசிச சக்திகளை எதிர்த்தும் இந்துத்துவ வலதுசாரியின் திசைதவறிய சதித்திட்டங்களுக்கு சவால்விட்டும் வளர்ந்து வரும் தங்களது, சர்வதேச ஒருமைப்பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு காங்கிரசை செழுமைப்படுத்தினர்.
அநேகமாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசில்எப்போது மில்லாதவாறு முதல் முறையாக காங்கிரஸ் நிகழ்வுகளில், எழுத் தாளரும் களப்பணியாளருமான அருந்ததி ராய் போன்ற குடியுரிமைச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் பத்திரிகை, கல்வி உலகத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினார்கள். நமது விருந்தினர் பலர், அரசியல் தீர்மானம், அமைப்பு பரிசீலனை அறிக்கை, காலநிலை மாறுதல் சவால் உள்ளிட்ட தீர்மானங்கள் விவாதித்து நிறைவேற்றப்பட்டது, மத்தியக் கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது வரையும் காங்கிரசில் இருந்தனர். 27 மாநிலங்கள், ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் இருந்து 1700 பிரதிநிதிகள், பார்வையாளர்கள் பங்கு பெற்றது, அனைத்து பேச்சாளர்களது பேச்சையும் பல மொழிகளிலும் மொழிபெயர்த்தது, நூற்றுக்கு மேற்பட்ட தோழர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள், திருத்தங்கள் மீது நடந்த விவாதம், ஆறு தீர்மானங்கள், அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டது இறுதியாக, 81 பேரிலிருந்து 76 பேர் கொண்ட (மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவர் பதவி பொறுப்பினடிப்படையிலான உறுப்பினர்) தேர்ந்தெடுக்கப்பட்டது, உட்கட்சி ஜனநாயகத்தில் மிகப்பெரும் நடவடிக்கையாக இருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர்களைக் கொண்டு கட்சிக் காங்கிரஸ் மேடையில் ஒரு அரசியல் கருத்தரங்கை நடத்தியதும் கூட மரபில்லாத ஒன்றாகும். பிகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார், துணை முதல்வரும் ஆர்ஜெடி தலைவருமான தேஜேஸ்வி யாதவ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான்குர்ஷித், தமிழ்நாட்டிலிருந்து விசிகவின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஆகிய தலைவர்கள் 'ஜனநாயகம் காப்போம், இந்தியாவைக் காப்போம்' கருத்தரங்கில் கலந் து கொண்டதும் ஜார்க்கண்ட் முதல்வரும் ஜெஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரன் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியும் பாசிச மோடியின் பிடியிலிருந்தும் தரைமட்ட மாக்கும் சங்க் படையிடமிருந்தும் இந்தியாவைக் காக்க அனைவரையும் உள்ளடக்கிய தீர்மானகர மான எதிரணி ஒற்றுமையின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டியது. இவர் களது கட்சிகள், அகில இந்திய அளவில் செயல் மிகு எதிரணி ஒற்றுமையை உருவாக்குவது தொடர்பாக மல்லுக்கட்டி வரும் நிலையில், எதிர்பார்த்தபடியே நிதிஷ் குமார், சல்மான் குர்ஷித் பேச்சுகள் நகைச்சுவை கலந்த பரிமாற்றமாகவே இருந்தன.
ஆனபோதும், பேச்சாளர்களின் வேடிக்கை பேச்சுகளுக்கிடையே, மோடி ஆட்சி இந்தியா முழுவதும் மூர்க்கத்தனமாக மறுபதிப்பு செய்ய எண்ணும் பேரழிவுமிக்க குஜராத் மாடலுக்கு மாறாக பிகார் மாடல் குறித்த பேச்சு அக்கறைமிக்க வகையில் முன்னுக்கு வந்தது. கடந்த 30 ஆண்டுகளாக பாஜக குஜராத்தில் மேலோங்கிய நிலையில் இருப்பதும் ஆனால், அது (பாஜக) பிகாரிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறது என்பதிலும் இந்த வேறுபாடு இல்லை.
குஜராத் மாடலில் நடுநாயகமாக இருப்பது,2002 குஜராத் இனப்படுகொலையாகும். இனப்படுகொலையின் நடுநாயகமான தன்மை சமீபத்திய குஜராத் தேர்தல்களின் போது எண்ணற்ற முறை அடிக்கோடிட்டுக் காட்டப் பட்டது. பில்கிஸ் பானுவை வன்புணர்வு செய்து அவரது குடும்ப உறுப்பினர்களை படுகொலை செய்தவர்கள், 75வது சுதந்திர நாளன்று வீரர்களுக்குரிய வரவேற்புடன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டபோது வெளிப்பட்டது. 2002 இனப் படுகொலை, 'கலவரக்காரர்களுக்கு' பொருத்தமான பாடம், இது குஜராத்தில் 'நிரந்தரமான அமைதியை' கொண்டுவந்துள்ளது என்று அமித்ஷா விவரித்த போதும் வெளிப் பட்டது.
பிகாரும் கூட கொடூரமான தொடர் படுகொலைகள் பலவற்றைக் கண்டிருக்கிறது. பூர்னியாவின் ருபாஸ்பூர் சந்த்வாவிலிருந்து ஆர் வாலின் லக்ஷ்மண்பூர் பாதே வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் படுகொலைகளால் பிகார் அவ்வப் போது ரணகளமாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில், பாகல்பூர் கலவரம் மிகமிக அதிர்ச்சியூட்டும் மதவாதப் படுகொலை யாகும். ஆனால் பிகார், சாதிப் படுகொலைகளை அல்லது மத வன்முறைகளை ஒருபோதும் ஒரு அரசியல் மாடலாக ஏற்றுக் கொண்ட தில்லை. பிகாரில் இகக(மாலெ), அதன் துவக்கம் முதலே நிலப்பிரபுத்துவ வன்முறையையும் அரசு ஒடுக்குமுறையையும் வெற்றிகரமாக தாக்குப் பிடித்து நின்றிருக்கிறது. உண்மையில் இதைத் தான் பிகார் மாடல் என்று கூறமுடியும். பாபர் மசூதியினிடத்தில் மாபெரும் ராமர் கோவிலைக் கட்டும் திட்டத்துடன் அத்வானி மேற்கொண்ட மதவெறி பாசிச பயணத்துக்கு எழுந்த எதிர்ப்பும் பிகாரிலிருந்துதான் எழுந்தது என்பதை நினைவு கூருவதும் பொருத்தமானது. இனப்படுகொலை பயங்கரம் குஜராத் மாடலுக்கு நடுநாயகமாக இருந்ததென்றால் இதிலிருந்து வெகு கூர்மையான வேறுபாடாக, பிரபுத்துவமத வன்முறையை நிராகரித்து எதிர்த்து எழுந்தது பிகார் மாடலாகும்.
2002, குஜராத் இனப்படுகொலை பயங் கரத்தை முதலீடாக்கிக் கொண்டு சங்க்-பாஜக அமைப்பு தனது குஜராத் மாடலை எழுதுவதில் முன்னேறிக் கொண்டிருந்தது; இதில் மோடியும் அமித்ஷாவும் அரசியல் இசைக்குழுவின் தலைவர்களாக எழுந்துள்ளனர். அதானியும் அம்பானியும் கார்ப்பரேட் ராட்சசர்களாக வளர்ந்துள்ளனர். இந்த குஜராத் மாடலை, 2014 தில்லிக்கு கொண்டு வந்தது; இப்போது இந்த பாசிச மாடலால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பொருளாதார, அரசியல், சமூக அரசியல் பேரழிவால் இந்தியா முழுவதுமே இடர்ப்பட்டு வருகிறது. பேரழிவுமிக்க 9 ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி ஆட்சி முதலில் 'நல்ல நாளை' விற்பனை செய்தது, இப்போது 'அமுத காலத்தை' விற்று வருகிறது; இப்போது, சாம்ராஜ்யம் உலுக்கப்பட்டு வருவதாலும் அதானி எப்போதும் இல்லாத வகையில் மோடி-அதானி கூட்டணி அம்பலப்பட்டு, சவாலுக்கு இழுக்கப்பட்டிருப்பதாலும் இந்த மாடல் வெடித்துக் கொண்டிருக்கிறது. பாட்னாவில் பதினோராவது காங்கிரஸ் நடத்தப்பட்டதானது, வெடித்து வரும் குஜராத் மாடலுக்கு எதிராக பிகார் மாடலின் எதிர் தாக்குதல் தொடுக்கும் ஆற்றலைக் காட்டுகிறது.
மோடி ஆட்சி, எதிர்க் கட்சிகள் மீதும் ஒட்டு மொத்த நாடாளுமன்ற ஜனநாயக சட்டகத்தின் மீதும் அரசமைப்பு சட்ட ஆட்சியின் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்திவரும் நிலையில், 'அரசமைப்பு' ரீதியாக ஜனநாயகம் ரத்து செய்யப்பட்டதை இந்தியா எதிர்கொண்ட ஒரே தருணமான 1970களின் நடுவில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை காலத்தோடு இது அடிக்கடி ஒப்பி டப்படுகிறது. ஊழல், விலைவாசி உயர்வுக்கு எதிராக, சக்திமிக்க இரண்டு இளைஞர் இயக்கத்தை இந்தியா கண்டது. இந்த இளைஞர் இயக்கத்தின் இரண்டு மய்யங்களாக குஜராத்தும் பிகாரும் இருந்தன. குஜராத் கிளர்ச்சி நவ் நிர்மாண் இயக்கம் என்று அறியப்பட்டது. ஜெபியால் வழி காட்டப்பட்ட பிகார் இயக்கம் முழுப் புரட்சி இயக்கம் என்று அறியப்பட்டது. ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான எபிவிபி குஜராத் இயக்கத்தின் முக்கிய அமைப்பாக எழுந்தது. பிகாரில் அது, சோசலிஸ்ட் இயக்கத்துக்கு ஒத்து ஊதுகிற அமைப்பாக இருந்தது. இது, ஜனதா கட்சி உருவாக்கத்துக்கும் ஜனதா கட்சி அரசாங்கத்துக்கும் குஜராத்திலிருந்து இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக மொராஜிதேசாய் வருவதிலும் போய் முடிந்தது. ஆர்எஸ்எஸ் பிரதான நீரோட்டத்துக்கு வருவதற்கும் சட்டரீதியான தன்மை பெறுவதற்கும் இதுவரை பெறமுடியாதிருந்த அகில இந்திய அளவில் அரசு அதிகாரத்தைப் பெறுவதற்கும் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிப்பதாகவும் இருந்தது. ஆர்எஸ்எஸ், தனக்கு சாதகமாக சமநிலையை சாய்க்க முடிந்ததென்றால், பிகாரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முழுப் புரட்சி இயக்கத்தை எதிர்ப்பது காங்கிரசுடன் அணிசேர்வது எனும் அதன் தவறான முடிவால் கெடு வாய்ப்பாக கம்யூனிஸ்ட் இயக்கம் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது.
பிரிக்கப்படாத பிகார் சட்டப்பேரவையில் 1972ல் அதிக எண்ணிக்கையாக 35 இடங்களைப் பெற்றிருந்த இகக, தனது தளத்தை இழக்கத் தொடங்கியது. ஆர்எஸ்எஸ், ஜனதா கட்சியின் உள்ளிருந்தே அதை சீர்குலைக்கவும் கட்டுப்ப டுத்தவும் ஒரு பிரிவு சோஷலிஸ்டுகள் முன்னாள் ஜன சங்கத்தினர் ஆர்எஸ்எஸுடன் தங்கள் ஆதரவை தொடர்ந்ததாலும் ஜனதா கட்சி பரிசோதனை குறுகிய ஆயுளோடு முடிந்து போனது. பின்னர், ஆர்எஸ்எஸ், ஜனதா கட்சி பரிசோதனையை பாஜகவுக்கான ஏவுதளமாக பயன்படுத்திக் கொள்ள, பழைய சோசலிஸ்ட் இயக்கமோ தன்னை ஜனதா தளமாக மறு அணிச்சேர்க்கை செய்துகொண்டு, பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீடு பற்றிய மண்டல் ஆணைய பரிந்துரை அமுலாக்கத்தை அடுத்து, நீடித்த அரசியல் செல்வாக்கையும் சமூக அடித்தளத்தையும் (ஜனதா தளம்) பெற்றுக் கொண்டது.
சமீபத்திய பத்தாண்டுகளில் பிராந்திய கட்சிகளும் அடையாள அடிப்படையிலான கட்சிகளும் பல்கிப் பெருகியிருந்த போதும் வரலாற்று ரீதியாக சுதந்திர இந்தியாவுக்குப் பிந்தைய அரசியல் பரப்பு, காங்கிரஸ், சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட், இந்துத்வா வலது ஆகிய முக்கியமான நான்கு போக்குகளால் (இந்தியா) குறிக்கப்படுகிறது.
காங்கிரஸ் மேலோங்கிய நிலையிலிருந்த காலத்தின்போது இந்துத்வ வலது, தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு துருவமாக எழுந்து நிற்க, அப்போதிருந்த காங்கிரஸ் எதிர்ப்பு சூழலை தோதாக பயன்படுத்திக் கொண்டது. அதன் அரசியல் வளர்ச்சி ஒருபுறமிருப்பினும் மண்டலுக்குப்பிந்தைய காலத்தில் சோசலிஸ்ட் முகாமின் அமைப்பு ஒற்றுமை உடைந்து போனது. இந்த உடைவு, பிராந்திய அடிப்ப டையில் மட்டுமின்றி, பாஜக வின் எழுச்சி குறித்த சோசலிஸ்ட் முகாமின் பதில்வினை என்ற முக்கிய பிரச்சனையடிப்படையிலும் ஏற்பட்டது.
பாஜக தனது கருவான சில பிரச்சனைகளை தள்ளிப்போட ஒப்புக் கொண்டதன் மூலம் சோசலிஸ்ட்களின் சில பிரிவுகள் தேஜகூ பதாகையில் இணைந்து கொள்வதை (பாஜக) வசதி யாக்கியது. முந்தைய தேஜகூ காலத்தைப்போல பாசாங்குத்தனத்தையோ செயல்தந்திர அடக்கத்தையோ இனியும் காட்டத் தேவை யில்லை என்பதை 2014 தெளிவாக்கி விட்டது. 2019ல் மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, பாசிச ஆட்சி அனைத்து அதிகாரங்களையும் குவித்துக் கொண்டு இந்தியாவை எதிர்க்கட்சி இல்லாத குடியரசாக்கும் வேகத்தை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஒரு கட்சி ஆட்சியாக்கவும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளுவதென்ற அவர்களது பேராவலையும் பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே அறிவித்து வருகிறார்கள். இந்த புதிய கட்டம், கம்யூ னிஸ்ட்டுகள், சோசலிஸ்ட்கள், அம்பேத்க ரிஸ்ட்டுகள், காந்தியர்கள், நேருவியர்கள் நெருக்கமாக வருவதை, பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒருமுனைப்பட்ட எதிர்ப்பில் கரம் கோர்ப்பதை அவசியமானதாகவும் சாத்தியமானதாகவும் ஆக்கி இருக்கிறது. இதை ஏற்கத்தக்க வகையில், 11வது கட்சிக் காங்கிரஸ், இந்த கட்டாயமான தேவையையும் தூக்கிக் காட்டியிருக்கிறது. மேலும், பிகார் போன்றதொரு மாநிலத்தில், புரட்சிகர கருத்தியல், அமைப்பு, முன் முயற்சிகள், போராட்டங்களைக் கொண்ட மரபின் ஆதரவையும் கொண்டிருக்குமானால் அது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் உயரத்திக் ! காட்டியிருக்கிறது. இது, 1970களின் மத்தியில் இருந்த பிகாருக்கும் இன்றுள்ள பிகாருக்கும் இடையே உள்ள திட்டவட்டமான வேறுபாட் டையும் குறிக்கிறது. 50ஆண்டுகளுக்கு முன்பு லாலு பிரசாதும் நிதிஷ் குமாரும் அன்றிருந்த பாட்னாவின் மாணவர் இயக்கத்தை வழி நடத்திக் கொண்டிருந்தார்கள். இகக(மாலெ) பிகாரின் கிராமப்புர பகுதிகளில் அதிலும் குறிப்பாக பாட்னாவுக்கு அருகிலுள்ள சாகாபாத், மகத் பிராந்தியங்களில் போர்க்குணமிக்க புரட்சிகரப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் இவ்விரு போக் குகளும் களத்தில் ஒன்று குவிந்து இருக்க வில்லை.
இந்த இரண்டு போக்குகளுமே அடிக்கடி ! சிறையில் சந்தித்து கொண்டன என்பதும் 'முழுப் புரட்சி' தேடுதலில் உத்வேகமடைந்த ஜெபி இயக்கத்தின் செயல்வீரர்கள் இகக(மாலெ) கட்சியில், அதிலும் குறிப்பாக குறுகிய காலமே வாழ்ந்த ஜனதா கட்சி அரசாங்க பரிசோதனை சரிவடைந்ததை அடுத்து ஏற்பட்ட மாயை விலகிய செயல்வீரர்கள் சேர்ந்தனர் என்பதும் மற்றுமொரு செய்தி.
இகக(மாலெ), 1990கள் முதல், தேர்தல் அரங்கில் தனது இருப்பைக் காட்டத் தொடங்கி யிருந்தது. ஆட்சிக்(கடிவாளங்கள்) ஜெபி இயக்கத்தின் வாரிசுகளின் கைகளுக்குள் வந்தது; பாஜகவும் கூட நிதிஷ் குமாரது அய்க்கிய ஜனதா தளத்துடன் பலனளிக்கும் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு பிகாரின் ஒரு ஆளும் கட்சியாகவும் மாறியிருந்தது. இகக(மாலெ), சட்டப்பேரவையில் பிகாரின் மிகவும் ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களது புரட்சிகர எதிரணிப் பதாகையை உயர்த்திப் பிடித்து வருகிறது. இன்று, சமூக மாற்றம் மக்கள் உரிமைகளுக்கான சண்டையை முன்னெடுத்துச் செல்லும் அதேநேரம், மக்களது முன்னோக்கிய பயணத்துக்கு மிகப்பெரும் தடையாக முன்வந்துள்ள பாசிசத்தை தோற்கடிக்கும் புரட்சிகரக் கடமையை நிறைவேற்றுவதில் இகக(மாலெ) தீர்மானகரமாக இருக்கிறது. உள் ளூ ரில் செல்வாக்குமிக்க பிரபுத்துவ சக்திகளை எதிர்த்த, நிலம், கூலி, கவுரவத்துக் கான நேற்றைய போராட்டங்கள், பாசிச கொள்ளையர்களிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்கவும் இந்தியாவைக் காப்பதற்குமான இன்றைய போராட்டமாக வளர்ந்திருக்கிறது.
11வது கட்சிக் காங்கிரஸ், அடைய வேண்டிய நோக்கங்களையும் அவற்றை அடைய முன்னுள்ள வழிகளைக் குறித்தும் அடிக்கோ டிட்டுக் காட்டியுள்ளது. இப்போது, மக்கள் எதிர்ப்பின் முழு வலுவையும் இந்திய கம்யூனிச இயக்கத்தின் புகழார்ந்த மரபிலிருந்தும், இந்திய வரலாற்றின் ஒவ்வொரு முற்போக்கு மரபிலிருந்தும் முழு ஆற்றலையும் சுவீகரித்துக் கொண்டு ஒட்டுமொத்த கட்சியும் சூழ்நிலையின் தேவைக்கேற்ப எழுந்து நின்றாக வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)