பீகார்மகா கூட்டணி ஊழியர்கள் ஒன்றுபட்ட உழைப்புஉழைக்கும் மக்கள் உற்சாக வரவேற்பு! 

40 மக்களவைத் தொகுதிகள் உள்ள பீகாரில் கடந்த 2019-ல் மொத்த வாக்காளர்கள் 7,12,16,290 பேர்.வாக்களித்தவர்கள் 3,99,89,711. ( 57.33 % ).  பாஜக 24  சதவீத வாக்குகளுடன் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றதுபாஜக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் 22.26 சதவீத வாக்குகளுடன் 16 தொகுதிகளிலும்லோக் ஜனசக்தி கட்சி சதவீத வாக்குகளுடன்  தொகுதிகளிலும் வெற்றி பெற்றனகாங்கிரசுடன் கூட்டணி அமைத்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் 15.68  சதவீத வாக்குகளைப் பெற்றபோதிலும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. 7.85 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 243 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு 2020 தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் 56.93%. பாஜகவும்ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்தனராஷ்ட்ரிய ஜனதா தளம்காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மகாகட்பந்தன் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டன. 110 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 19.46 % வாக்குகளுடன் 74  தொகுதிகளில் வெற்றி பெற்றதுஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளில்போட்டியிட்டு 15.39 % வாக்குகளுடன் 43 தொகுதிகளில் வெற்றி பெற்றதுஇவ்விரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தனநிதிஷ் குமார்முதல்வரானார். காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு 9.48% வாக்குகளுடன் 19  தொகுதிகளில் வெற்றி பெற்றதுஅதன் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிட்டு 23.11 % வாக்குகளுடன் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றதுநமது கட்சிக்குமத்திய பீகார்மகத் பகுதி மற்றும் வடக்கு பீகாரின் சில பகுதிகளில் இருந்த உறுதியான மக்கள்-ஊழியர் அடித்தளம்இத் தேர்தலில் ஆர்ஜேடிராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 தொகுதிகளில் வெற்றிபெற்று ஒரு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததற்கு முக்கியமான காரணம் ஆகும்

19 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐஎம்எல் கட்சி, 3.16% வாக்குகளுடன் 12 இடங்களில் வெற்றி பெற்றதுசிபிஐ 6  தொகுதிகளில் போட்டியிட்டு இடங்களில்சிபிஎம் தொகுதிகளில் போட்டியிட்டு 2  இடங்களில்   வெற்றி பெற்றன

2024 மக்களவை தேர்தலில்பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும்ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில்மகாகத்பந்தன் கூட்டணியும் பிரதான அணிகளாக உள்ளனதேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 17 தொகுதிகளிலும்ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும்சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி   5 தொகுதிகளிலும்ஜித்தன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா (செக்யூலர்கட்சி ஒரு தொகுதியிலும்உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகட்பந்தன் அணியில்   ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 26  தொகுதிகளிலும், ( அதில்விகாஷ்-ஷீல் இன்சான் கட்சிக்கு  மூன்று இடங்களை வழங்கியுள்ளது.)காங்கிரஸ் கட்சி தொகுதிகளிலும்கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதிகளிலும்(சிபிஐஎம்எல்-3, சிபிஐ-1,  சிபிஎம்-1) போட்டியிடுகின்றனசிபிஐஎம்எல்   அர்ராகாராக்கட்,  நலந்தா ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது

அர்ரா மக்களவைத் தொகுதி போஜ்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியான அர்ரா மக்களவைத் தொகுதியில் சந்தேஷ்பர்ஹாராஅர்ராஅகியோன் (SC),தராரிஜகதீஷ்பூர்ஷாஹ்பூர் என ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.    வரலாற்று ரீதியாக இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தலித் மற்றும் விளிம்பு நிலை சாதிகளைச்சார்ந்த கிராமப்புற ஏழைகளுக்கும்உயர்சாதி நிலவுடமையாளர்களுக்கும் இடையே தீவிரமான வர்க்கப்போராட்டங்கள் நடைபெற்ற கிராமங்களாகும்அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கத்தின் முதல் அகில இந்திய மாநாடு இங்குதான் மிக எழுச்சியுடன் நடத்தப்பட்டதுநம்முடைய புரட்சிகர பாரம்பரியம் மிக்க போராட்டங்களின் பின்னணியில் தான்,   1989 - 91ல்மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர்ராமேஷ்வர் பிரசாத் இந்திய மக்கள் முன்னணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்அதற்குப் பிறகு,  தொடர்ச்சியாக ஆர்ஜேடிஜேடியூபாஜக கட்சிகளை சேர்ந்தவர்களே எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2019 தேர்தலில்பிஜேபி கட்சியின் ஆர்கே.சிங் 5,60,106  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்சிபிஐஎம்எல் கட்சியின் வேட்பாளர் ராஜு யாதவ் கிட்டத்தட்ட 4,20,000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். 2020 இறுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்இந்த மக்களவைத் தொகுதியில், 3 தொகுதிகளில் ஆர்ஜேடி யும், 2 தொகுதிகளில் (அகியோன்,  தாராரிசிபிஐஎம்எல் கட்சியும், 2 தொகுதிகளில் பிஜேபி யும் வென்றன. இந்த தேர்தலில் அர்ரா மக்களவைத் தொகுதியில்சிபிஎம்எல் பாஜக இடையேதான் முக்கிய போட்டி நிலவுகிறது.

காராக்கட்: கராக்கட் மக்களவைத் தொகுதி,  நோகாதெஹ்ரிகராக்கட்கோஹ்ஓப்ராநபிநகர் ஆகிய சட்டமன்றப் தொகுதிகளைக் கொண்டுள்ளதுமூன்று சட்டமன்ற தொகுதிகள் ரோத்தாஸ் மாவட்டத்திலும்மூன்று அவுரங்காபாத் மாவட்டத்திலும் உள்ளனஇதுவிவசாயப் போராட்டப் பாரம்பரியத்தையும்சமூக ரீதியாக   குஷ்வாஹாயாதவாராஜ்புத் சமூகங்களின் செல்வாக்கையும் கொண்ட பகுதியாகும்

 2019 தேர்தலில்,  ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூகிட்டத்தட்ட லட்சம் வாக்குகள் பெற்று இத்தொகுதியை வென்றதுஆர்ஜேடி ஆதரவுடன் போட்டியிட்ட ராஷ்டிரிய லோக் சமதா கட்சி  3.14 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்ததுநாம் தனித்துப் போட்டியிட்டு கிட்டத்தட்ட 25,000 வாக்குகள் பெற்றோம்கடந்த 2020  சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேர்மாறாக அமைந்தனமகாகட்பந்தன் வலுவானதாக உருவானதுஆர்.ஜே.டி எம்.எல்.ஏக்களை பெற்றது;  சிபிஐஎம்எல் கராக்கட் தொகுதியைஎம்எல்ஏ அருண் குஷ்வாஹாகைப்பற்றியது. பின்னர் 2021 இல் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (RLSP) ஜேடியூ உடன் இணைந்ததுஆனால்அதுவும் நீடிக்கவில்லை. RLSP கட்சி ஜேடியூவில் பிளவை ஏற்படுத்தி 2023 ஜனவரியில் ஆர்எல்எம் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா என்ற கட்சியைஉருவாக்கியதுஇப்போது NDA ஆதரவுடன் ஆர்எல்எம் மீண்டும் போட்டியிடுகிறது. காராக்கட் மக்களவைத் தொகுதியில்பிரதானப் போட்டி சிபிஐஎம்எல்ஆர்எல்எம் கட்சிகளுக்கு இடையே உள்ளது.    

நலந்தா:அஸ்தவான்பிஹார்ஷரிப்ராஜ்கிர்இஸ்லாம்பூர்ஹில்சாநலந்தாஹர்நாட் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளதுவிவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டபகுதியாகும்கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிச நீரோட்ட கட்சிகளின் செல்வாக்கு நிலவிய பகுதியாகும். ’80 களில் ஒருமுறை,  ’90 களில் ஒருமுறை  என சிபிஐ கட்சிஇத்தொகுதியில் மக்களவை உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. 2019 மக்களவைத்தொகுதி தேர்தலில்ஜேடியூ 50% ற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதுகடந்த 2014  மக்களவைத் தேர்தலில்நாம் ஒருமுறை தனித்து போட்டியிட்டு சுமார் 20,000 வாக்குகள் பெற்றோம்தற்போது,  ஜேடியூசிபிஐஎம்எல் இடையே பிரதான போட்டி நிலவுகிறது

பீகாரில் தேர்தல் பிரச்சாரம்துவங்கியது 

நாம் போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும்,   தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளதுஇப்போது முதலேநோட்டீஸ்மூன்று நட்சத்திர கொடி தேர்தல் சின்னம் கொண்ட கொடிகளுடன் நமது தோழர்கள்வேட்பாளர்களுடன் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். “இந்தியா” கூட்டணியில்அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து,  ஆங்காங்கே சட்டமன்ற தொகுதி   அளவிலான செயல்வீரர் மாநாடுகளை கட்டமைக்கின்றனஇந்த மாநாடுகளில் மகாகட்பந்தன் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்கின்றனர்தேர்தல் பிரச்சாரத்தின் பல்வேறு கடமைகளை அமல்படுத்துவதில்   பொறுப்பேற்றுள்ளனர்கட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் குணால்திரேந்திர ஜாஅமர் மற்றும் பிறர் இந்த மாநாடுகளில் பங்கேற்றனர்ஜேஎன்யூதில்லி உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களின் அணிவரிசையும் இந்த தொகுதிகளில்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன

அகியோன் இடைத்தேர்தல்:தோழர்.மனோஜ் மன்ஜில்பொய்வழக்கில் அநீதியாக தண்டிக்கப்பட்டு 22 பேர்களுடன் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்இதனால் ஏற்பட்ட பதவி இழப்பால் காலியான அகியோன் சட்டமன்றத் தொகுதிக்கான மகாகட்பந்தன் வேட்பாளராக தோழர் சிவபிரகாஷ்ரஞ்சன் போட்டியிடும் அகியோன் இடைத்தேர்தல் பிரச்சாரமும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.   

அர்ரா:நூற்றுக்கணக்கான தொண்டர்கள்கட்சி ஆதரவாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்இந்த தொகுதியின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கிராமங்கள்நகர்ப்புறங்களிலும் ஆர்வத்துடன் பணியாற்றி வருகின்றனர்சிபிஅய்எம்எல்,  ஆர்ஜேடி கூட்டணி   கட்சிகளால் சட்டமன்ற தொகுதி வாரியாக செயல்வீரர் மாநாடுகள் நடைபெற்று வருகின்றனவாக்குச்சாவடிஅளவிலான தேர்தல் குழுக்கள் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதில் மும்முரமாக உள்ளனர்மே 10 ஆம் தேதி தோழர்சுதாமா பிரசாத் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்இதில் தேஜஸ்வி யாதவ் மற்றும் மகாகட்பந்தனின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

 காராக்கட்சிபிஅய்எம்எல் வேட்பாளர்கள் வெற்றிதொழிலாளர்விவசாயிகளின் வெற்றி

இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற தொகுதி  அளவிலான செயல்வீரர்கள் மாநாடு ஏப்ரல் 30 அன்று  உள்ள கோஹ் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றதுஇதில்,  தோழர் திபங்கர்கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார். “73 வயதில் மூன்றாவது முறையாக பிரதமராக விரும்பும் மோடி, 22 வயதிலேயே இளைஞர்களை ராணுவத்திலிருந்து ஓய்வுபெறச் சொல்வது பெருங்கொடுமை எனச்சாடிய திபங்கர், "தென் இந்தியாவில் பாஜக முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்றும்வடமாநிலங்களில் தற்போதுள்ள பாஜக பலம் பாதியாக குறைந்துவிடும் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன” என்றார். “ஆனால் நாம் திருப்தியடைந்து விடக்கூடாது,  இந்தியா முழுவதும் பாஜகவை முற்றிலுமாக வீழ்த்துவதற்கு கடுமையாகவும் இடைவிடாமலும் உழைக்கவேண்டும்." என்றார்மேலும்அவர் பேசுகையில், “எங்கள் வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்இது விவசாயிகள்தொழிலாளர்கள்மாணவர்கள்பெண்கள்ஆதிவாசிகள் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரது வெற்றியாக இருக்கும்." எனக் கூறினார்மே ஆம் தேதி தெஹ்ரி சட்டமன்றப் பகுதியில் மகாகட்பந்தன் ஊழியர் மாநாடு சிறப்பாக நடைபெற்றது

நலந்தா:தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாத ஜேடியூ எம்பி மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளமாற்றத்தையும் நீதியையும் எதிர்பார்க்கும் தொகுதி மக்களிடமிருந்துவேட்பாளர்   தோழர் சந்தீப் சவுரவின் பிரச்சாரம் உற்சாகமிக்க ஆதரவைப் பெற்று வருகிறதுவீடுவீடாகச் சென்று ஆதரவுகோரும் பிரச்சாரம்ஏராளமான இளைஞர்களையும்மாணவர்களையும்,விவசாயிகள்  கிராமப்புற தொழிலாளர்களையும் ஈர்த்துள்ளதுஏப்ரல் 23  அன்று பீகார் ஷெரீப்பில் திறக்கப்பட்ட தேர்தல் அலுவலக நிகழ்ச்சியில்கூட்டணியின்   தலைவர்கள்ஏராளமான கட்சித்தொண்டர்கள்இளைஞர்கள் கலந்து கொண்டனர்.அவருடன் ஆர்ஜேடி செய்தி தொடர்பாளரும்முன்னாள் எம்எல்ஏவுமான சக்திசிங் யாதவ் ஹில்சா சட்டசபை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சந்தீப் சவுரவ்பீகார் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும்   எடுத்த முயற்சிகள் நலந்தா மக்களால் பாராட்டப்படுகின்றனசட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளின் வீடியோக்கள் சாமானிய மக்களிடையே ஆர்வத்துடன் விவாதிக்கப்படுவதிலிருந்து தெரிகிறதுஎல்லா இடங்களிலும் இருப்பது போலவேஇங்கும் இளைஞர்களுக்கு கல்விவேலையின்மை பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது .

ஜார்க்கண்ட்:பீகார் மாநிலத்திலிருந்து 2000ல் பிரிக்கப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தின் வனங்கள்கனிம வளங்கள்குறிப்பாக இரும்புநிலக்கரிஅலுமினிய கனிமச் சுரங்கங்கள் கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் சுரண்டல் இலக்குகளாகத் திகழ்கிறதுமாநில மொத்த மக்கள் தொகையில் பட்டியல்பழங்குடி மக்கள் 28%, பட்டியல் சமூக மக்கள் 12%. பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற வேறுபட்ட  சமூகங்கள் வசிக்கும் வளமானகலாச்சார பாரம்பரியத்தையும்வரலாற்று ரீதியாக பழங்குடியினர் போராட்டமரபையும்புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செல்வாக்கையும் கொண்டதுஜார்கண்ட் மாநிலமக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 14. ( எஸ்டி 5 ,எஸ்சி 1). பாஜக கட்சி  11 எம்பி களை கொண்டுள்ளது.மறுவாழ்வு தரப்படாமல் வரைமுறையற்ற வகையில் பழங்குடியினர் நிலம் கைப்பற்றப்படுவதற்கு எதிராக கார்ப்பரேட் பெருமுதலாளிகள் மற்றும் அரசாங்கத்துடன் போராடி வரும்பழங்குடியின மக்களின் பாதுகாவலனாக நமது கட்சி திகழ்கிறதுபழங்குடியின மக்கள் உரிமைகள் காக்க உள்ளூர் நிலக்கரி மாஃபியாக்களுடனும் மோதல்களையும்சந்தித்து வருகிறதுராஞ்சிதன்பாத்கிரிதிகோடெர்மாஜம்தாடா மற்றும் பிற பகுதிகளிலும் கட்சி வலுவாக செயல்பட்டு வருகிறது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற பழங்குடியினர் கட்சி தலைமையில், மகா கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறதுஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 29 எம்எல்ஏக்களும்காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்களும்ஆர்ஜேடி மற்றும் சிபிஐஎம்எல் கட்சிகளுக்கு தலா ஒரு எம்எல்ஏ என மொத்தம் 48 பேர் உள்ளனர்.பாஜக தலைமை தாங்கும் எதிர்க்கட்சி கூட்டணியில் 30 எம்எல்ஏக்கள் மட்டுமே  உள்ளனர்இதில் பாஜகவுக்கு 26 உறுப்பினர்கள்அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த பேர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரின் பிரிவைச் சேர்ந்த ஒருவர். எனினும்ஜேஎம்எம் ஆட்சியை கவிழ்க்கஒன்றிய மோடி அரசாங்கம் தொடர்ந்து சதி செய்து வருகிறதுஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைதுசெய்யவேஅவர் பதவி விலகினார். 2024 பிப்ரவரியில்புதிய முதல்வர் சம்பாய் சோரன் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாஆட்சியை கவிழ்க்க ஒன்றிய பாஜக ஆட்சி சதிகளை அரங்கேற்றிய நெருக்கடியானநாட்களில்நமது கட்சி ஜேஎம்எம் உடன் உறுதியாக நின்றது

2014 மாநில சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் அணியை உருவாக்கினோம்பாஜககாங்கிரஸ் கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளுக்கு மாற்றாகமார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழு (எம்சிசி), சிபிஐசிபிஎம் போன்ற மாநில இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம்சிபிஐஎம்எல் கட்சி தன்வார் தொகுதியை வென்றது. 2019 மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சி பகோதர் சட்டப் பேரவைத் தொகுதியைக் கைப்பற்றினாலும் தன்வார் தொகுதியை  இழந்ததுமக்கள் தலைவர்படுகொலையுண்ட தோழர் மகேந்திர சிங் மூன்று முறை எம்எல்ஏ வாக இருந்ததுடன்இதுவரை நான்கு முறை பகோதர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம்.

மே 1: கோடர்மாவில்வேட்புமனு தாக்கல்

கோடர்மா மக்களவைத் தொகுதியில்கோடர்மாபர்கதாதன்வார்பகோதர்ஜமுவா மற்றும் கண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளதுஇவற்றில்தற்போது பாஜக கட்சிக்கு 3, சிபிஎம்எல்ஜேஎம்எம் மற்றும் சுயேச்சைக்கு தலா ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்பகோதர் சட்டமன்ற தொகுதி சிபிஎம்எல் எம்எல்ஏ ஆன தோழர் வினோத் சிங் போட்டியிடுகிறார்.

கோடர்மா மக்களவைத் தொகுதியை, 2004 முதல் பாஜக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் நாம் 2.67 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தோம். 2019 இல் இடதுசாரிக் கட்சிகள் மூன்று இடங்களில் போட்டியிட முடிவு செய்தனசிபிஎம் ராஜ்மஹால்சிபிஐ ஹசாரிபாக் மற்றும் சிபிஐஎம்எல் கொடெர்மாவில் போட்டியிட்டன. 68,000 வாக்குகளுடன் நாம் வது இடத்தைப் பெற்றோம்.தற்போது பாஜகசிபிஎம்எல் இடையேதான் முக்கிய போட்டி நிலவுகிறது.ஏப்ரல் 28 அன்று தோழர் வினோத் சிங்கிற்கு ஆதரவாக திலையாவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் மாநாடு நடைபெற்றதுஇதில் சிபிஐஎம்எல், ஆர்ஜேடி ஜேஎம்எம் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்தோழர் திபங்கர், ஜார்கண்ட் மாநில அமைச்சர் சத்யானந்த் போக்தாநடப்பு  எம்எல்ஏ அம்பா பிரசாத்பல கட்சித் தலைவர்கள் உரையாற்றினர். அரசமைப்பைக்காப்பாற்றவும்சர்வாதிகாரமான பேரழிவுமிக்க மோடி ஆட்சியை அகற்றவும்தேர்தல் போராட்டத்தில் வெற்றிபெறவும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் உற்சாகத்தையும் உறுதியையும் இந்த மாநாடுவெளிப்படுத்தியதுதோழர் வினோத் சிங்கிற்கு ஆதரவாக ஒருங்கிணைந்த  தீவிரப் பிரச்சாரத்தை நடத்த தீர்மானித்ததுதேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டிகளை ஊழியர்கள் அறிவித்தனர்மே 1, தொழிலாளர் நாளில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றதுபொதுச்செயலாளர் திபங்கர்ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரன்சிறைவைக்கப்பட்டுள்ள ஹேமந் சோரன் துணைவியும் கந்தே சட்டப்பேரவை தொகுதி வேட்பாளருமான கல்பனா சோரன் உள்ளிட்ட தலைவர்கள் சூழ ஊர்வலமாகச் சென்று தோழர் வினோத்சிங்வேட்புமனு தாக்கல் செய்தார்களத்தில் மகாகட்பந்தனின் வலுவானவிரிவான ஒற்றுமையை வெளிப்படுத்திய நிகழ்வுகள்மக்களுக்கு பதில்சொல்லக்கூடியமக்கள் எளிதில் சந்திக்கக்கூடியபொறுப்புமிக்க ஒரு மக்கள் பிரதிநிதியை எதிர்நோக்கி கொடர்மா தொகுதி முன்னேறிக் கொண்டிருப்பது தெரிகிறது.

-சந்திரமோகன்