திருச்சி மக்களவை தேர்தல்:ஒரு பார்வை

 

எட்டு முறை மறுசீரமைப்புக்கு உள்ளான தற்போதைய திருச்சி மக்களவை தொகுதி திருச்சி மாவட்டத்தின்சட்டப்பேரவை தொகுதிகளையும் புதுக்கோட்டை மாவட்டத்தின்சட்டப்பேரவை தொகுதிகளையும் கொண்டது. 15,53,985 வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் கணிசமான ஆலைத் தொழிலாளர்அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்விவசாயத் தொழிலாளர்விவசாயிகள், மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்மிகவும் பிற்படுத்தப்பட்டபிற்படுத்தப்பட்டதலித், இஸ்லாமியகிறித்துவ சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமாக உள்ளனர்.

இதுவரை 17 முறை நடந்த தேர்தல்களில் கம்யூனிஸ்ட் அனந்த நம்பியார் முதல் காங்கிரஸ் திருநாவுக்கரசர் வரை வென்றுள்ளனர். 5 முறை காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதியில் அதிமுக தலித் எழில்மலைபாஜகவின் ரங்கராஜன் குமாரமங்கலம் போன்றவர்களும் வென்று மக்களவை உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

கடந்த 2009, 2014, 2019 தேர்தல்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட் கட்சி இம்முறைவீழ்க பாசிசம் வெல்க இந்தியா முழக்கத்தின் அடிப்படையில் மாநிலக் கமிட்டி முடிவின்படிபாஜக கூட்டணிஅதிமுக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாவட்டக் கமிட்டி வேலை செய்ததுஆலங்குடி கட்சி அமைப்பு சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்காகவும் அறந்தாங்கிஆவுடையார்கோவில் கட்சி அமைப்பு ராமநாதபுரம் அய்யூஎம்எல் வேட்பாளர் நவாஸ்கனிக்காகவும் வேலை செய்தது. திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி கட்சி அமைப்புகள் வேலை செய்தனதிருச்சி மாவட்டத்தின் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியிலும் அதேபோல மணப்பாறையின் ஸ்ரீரங்கம் தொகுதியின் கீழ் வரும் சமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வாகனப் பிரச்சாரமும் வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரமும் நடைபெற்றது.

வேட்பாளர் அறிவிப்பு செய்யப்பட்ட உடனே முதலாவதாக சமூக ஊடகத்தின் வாயிலாக துரை வைகோவுக்கு மாவட்டக் கட்சி ஆதரவு தெரிவித்தது. மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பிமாவட்டச் செயலாளர் வீமூ வளத்தான்மாவட்டக்குழு உறுப்பினர்கள் மணிமேகலை, வீரடிப்பட்டி ஊராட்சித் தலைவர் அராசாங்கம், ராஜலட்சுமிசின்னதுரைபாஸ்கர் உள்ளிட்ட தலைமைத் தோழர்கள் துரை வைகோவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் பரப்புரை இயக்கம் உள்ளிட்ட கட்சியின் சொந்த இயக்கம் நடத்தியதுடன் கூட்டணி கட்சிகளின் நிகழ்ச்சிகளிலும் கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

முனை போட்டி நிலவிய இந்த தொகுதியில் இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோலட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றுள்ளார்இரண்டாவது இடம் பெற்ற அதிமுக வேட்பாளரைவிடலட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் ஜூன் 07 அன்று கூடிய கட்சியின் மாவட்ட நிலைக்குழு தேர்தல் முடிவுகள் குறித்து பரிசீலித்தது.

திமுக சின்னத்தில் நின்றால் வெற்றி உறுதி என்ற திமுகவின் அழுத்தம்புதிய சின்னம்தொகுதியில் அவ்வளவு வலுவில்லாத மதிமுக கட்சி அமைப்பு என்ற பின்னணியில்லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் மதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். விவசாயிகள்தொழிலாளர்தலித்துகள் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் பிரிவினர் வலுவாக பாஜக-மோடி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதே இந்த அழுத்தமான வெற்றிக்கு காரணம். தேர்தல் பரப்புரையின் போது விவசாயிகள்ஏழை அடித்தட்டு மக்களிடம் ஒன்றிய மோடி அரசு எதிர்ப்பை தெளிவாக பார்க்க முடிந்தது. பல்வேறு விதமான உள்ளூர் கோரிக்கைகள்சமூக, அரசியல் பிரச்சனைகள் உள்ளோட்டமாக இருந்தாலும் பாஜக-மோடி எதிர்ப்பு அரசியல் மேலோங்கி இருந்ததுபலவிதமான அரசியல்சமூக பன்முகத்தன்மை கொண்ட கட்சிகளின் இணக்கமான உறவும் களமட்டத்தில அமைப்பு ரீதியான ஒற்றுமையான செயல்பாடும் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

மூன்றாண்டுகால திமுக ஆட்சி மீது இருந்த அதிருப்தி திமுக வின் வாக்கு சதவீதத்தை குறைத்து விட்டது என்று பேசப்படுகிறது. அதிமுக ஆட்சி காலத்து சில நலத்திட்டங்களை திமுக ஆட்சி கைவிட்டது, போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைபழைய ஓய்வூதிய திட்டம் போன்ற கோரிக்கைகளில் அரசு ஊழியர்ஆசிரியர் சமூகத்தின் அதிருப்தி போன்றவை சுட்டிக்காட்டப்பட்டனதிமுக அரசின் மகளிர் இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் போன்ற புதிய நலத்திட்டங்கள் புதிய பிரிவினரைபெண்களை கவர்ந்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆயினும் பாஜக கூட்டணியை தோற்கடிப்பதற்காக இந்த இரண்டு தரப்புமே தெளிவாக வாக்களித்துள்ளன.

நாம் தமிழர் கட்சியின் ராஜேஷ்லட்சத்துஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார். அக்கட்சிக்கு பொதுவாக இருக்கும் உசுப்பல்வாத தமிழர்தமிழ் அடையாளத்துடன் இந்த வேட்பாளர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெற்ற பிரபலமும் உதவியுள்ளது. தேர்தலில் முதன்மை அரசியல் போக்கு என்பதன் கூடவே இதுபோன்ற உள்ளூர் அடையாளங்களும்கூட மாநிலப் போக்காக அடையாள வளர்ச்சி பெறுவதும் உண்டு.

அமமுகபாஜக கூட்டணி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதுஅதிமுக -பாஜக கூட்டணி சேர்ந்திருந்தால் இக் கூட்டணி வெற்றி பெற்றிருக்கும், திமுக அணி தோற்றிருக்கும் என்று பாஜகஅதிமுக தலைவர்கள் பேசுகின்றனர்ஆனால் அதிமுகஅமமுகபாஜக (கூட்டணிவாக்குகள் இரண்டையும் கூட்டினால் கூட அது வெற்றிக் கோட்டை தொட முடிந்திருக்காதுமோடி எதிர்ப்பு அரசியல் வீச்சை தடுத்து நிறுத்தியிருக்க முடியாதுஒருவேளை அப்படி கூட்டணி அமைந்திருந்தால் கூட, அது இந்தியா கூட்டணி வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையை இன்னும்கூட அதிகப் படுத்தியிருக்கும்.

இந்தியா கூட்டணியை, பணத்திற்கோவாகனங்களுக்கோஎதற்கும் எவ்வகையிலும் சார்ந்திருக்காமல் கட்சி முடிவுப்படிகட்சியின் சொந்த பலத்தில் செயல்பட்டதை இடதுசாரிகள்மதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வியப்பாகவே பார்த்தனநமது அரசியல் பரப்புரையாலும் கட்சி அமைப்பு முயற்சியாலும் கண்டிப்பாக பல ஆயிரம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைத்திருப்பதாக மதிப்பீடுகள் முன்வந்தனஆயினும் நமது அமைப்பு ரீதியான செயல்பாடு இன்னும் பல மடங்கு மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென்றும் கூட்டம் கருதியதுஇந்த குறைபாடுகளை சரிசெய்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கந்தர்வக்கோட்டைபுதுக்கோட்டை தொகுதிகளில் போட்டியிட்டு பல்லாயிரக்கணக்கான வாக்குகள் பெற முயற்சி எடுக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது.

வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினரை சந்தித்து தொகுதியின் முக்கிய கோரிக்கைகளுக்காக மக்களவையிலும் மாநில அரசிடமும் குரலெழுப்பக் கோருவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

                         -வீ மூவளத்தான்