2024 ஜூன் 15-16 தேதிகளில் பாட்னாவில் நடைபெற்ற இகக(மா லெவிடுதலையின் மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட

                               தீர்மானங்கள்

1. மக்களவை தேர்தல் முடிவுகள், மோடி சர்வாதிகாரத்திற்கும் பாஜகவின் அரசியல் ஆதிக்கத்துக்கான தேடுதல் முயற்சிக்கும் எதிரான மக்கள் தீர்ப்பு எனக்கூறி மத்தியக் கமிட்டி வரவேற்றதுஜனநாயகம், அரசமைப்புச் சட்டத்துக்கான போராட்டத்தை தொடரவும் உறுதி ஏற்றதுகட்சி வேட்பாளர்களான தோழர் ராஜாராம் சிங் தோழர் சுதாமா பிரசாத் ஆகியோர் முறையே காரகாட்டிலும் அர்ராவிலும் வெற்றி பெற்றதற்கு மத்தியக் கமிட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறதுதோழர் மனோஜ் மன்சிலின் பொய்வழக்கில் தண்டிக்கப்பட்டு அவரது சட்டமன்றப் பதவியை அநியாயமாக ரத்து செய்யப்பட்டதுஇதையடுத்து நடைபெற்ற அகியோன் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தோழர் சிவபிரகாஷ் ரஞ்சனை வெற்றிபெறச் செய்ததற்காக அகியோன் மக்களுக்கு மத்தியக் கமிட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

2. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான இந்தியா கூட்டணியின் போராட்ட முயற்சிகளை மத்தியக் கமிட்டி பாராட்டுகிறதுமக்களது விருப்பங்களை முழுமையாக நிறைவேற்றும் அதே வேளைபாஜக வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளைத் தொடர்வதென்றும் தீர்மானிக்கிறது.

3. 2024 மக்களவை தேர்தலில் பாஜக வுக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ள போதிலும்ஒடிசாவில் ஆட்சிக்கு எதிரான மக்கள் உணர்வையும் அங்குள்ள அரசியல் வெற்றிடம்மாற்றத்திற்கான மக்கள் ஏக்கம் இரண்டின் மீதும் சவாரி செய்து பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. 24 ஆண்டுகால முதல்வர் நவீன் பட்நாயக்கின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளதுகிரஹாம் ஸ்டெயினையும்அவரது சின்னஞ்சிறு மகன்கள் இருவரையும் கொடூரமாகக் கொலைசெய்த குற்றவாளியான தாரா சிங்கையும், அவனது கூட்டாளிகளையும் விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி அவப்பெயர் பெற்ற மோகன் மஜ்ஹியை முதல்வராகக் கொண்டு கார்ப்பரேட் சார்பு பாஜக ஆட்சியமைத்துள்ளதுசத்தீஸ்கர்மத்தியப் பிரதேசம்குஜராத் மாநிலங்களை நடத்திச் செல்லும் அதே திசையில் ஒடிசாவையும் கொண்டு செல்ல முனையும் பாஜகவின் நோக்கத்தை மத்தியக் கமிட்டி சுட்டிக்காட்டியதுபாஜகவின் இந்த நோக்கத்தைமாபெரும் ஒற்றுமையுடனும் உறுதிப்பாட்டுடனும் எதிர்த்துப்போராட ஜனநாயக சக்திகளுக்கு மத்தியக் கமிட்டி அழைப்பு விடுக்கிறது.

4. பைசாபாத் தொகுதியில் தலித் சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத்திடம் பாஜக தோல்வி அடைந்ததற்காக அயோத்தி மக்களுக்கு எதிரான இழிந்த வலதுசாரி எதிர்த்தாக்குதலை நிராகரிக்குமாறு மத்தியக் கமிட்டி மக்களுக்கு அழைப்பு விடுக்கிறதுஅங்குள்ள பாஜக ஆதரவாளர்களும் வலதுசாரி சூழலும் அயோத்தியில் உள்ள இந்துக்களுக்கு எதிராகஅவர்கள் நன்றி இல்லாதவர்கள்சந்தர்ப்பவாதிகள் என்று அறிவித்து, அவர்களை(இந்துக்களைபுறக்கணிக்க வேண்டுமென்றும் தீவிரமான வெறுப்பு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்அயோத்தி வாக்காளர்களை அவதூறு செய்யும் பாஜகவின் செயல்வாக்காளர்களை சொந்தம் கொண்டாடும் அதன் இழிந்த மனப்போக்கை அம்பலப்படுத்துகிறது.

5. 2024 மக்களவை தேர்தல் மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பான மேலதிகமான கேள்விகள்சந்தேகங்கள்அய்யங்களை எழுப்பியுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவிற்குப் பிறகு 11 நாட்கள் கடந்தும் இரண்டாவது கட்டத்திற்குப் பிறகு நாட்கள் வரையிலும் மொத்த வாக்கு எண்ணிக்கையை ஏன் அறிவிக்கத் தவறியது என்பதை இந்திய தேர்தல் ஆணையம் இன்னமும் தெளிவுபடுத்தவில்லைஇந்த காலக் கட்டத்தில் 1 கோடியே 7 லட்சம் வாக்குகளும் வாக்கு சதவீதம் 5.7% அதிகரித்ததற்கும் இன்னும்கூட நம்பகமான விளக்கத்தை தேர்தல் ஆணையம் தரவில்லை. 362 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 5,54, 598 வாக்குகளை தேர்தல் ஆணையம் கணக்கிலெடுக்கத் தவறியதாகவும், 140-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளனதேர்தல் ஆணையத்திடமிருந்து தக்க பதில்களைக் கோரி இன்னும் கூடுதலான வீறுகொண்ட அறுதியிடலுடன் மக்கள் தெருக்களுக்கு வந்தாக வேண்டும்.

6.தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பங்குச் சந்தை ஊழல்பங்குச் சந்தை மோசடிக்கு வழிவகுத்த நரேந்திர மோடிஅமித் ஷாவின் அறிக்கைகள் மீதான விசாரணை வேண்டுமென்ற பொது மக்கள் கோரிக்கையை மத்தியக் கமிட்டி அங்கீகரிக்கிறதுஜூன் 1, 2 தேதிகளில் வெளியான கருத்துக் கணிப்புகள் பாஜகதேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று செய்திகள் பரப்பப்பட்டதை தொடர்ந்து, நிஃப்டிசென்செக்ஸ் எப்போதும் இல்லாதவாறு பங்குச் சந்தையில் உச்சத்துக்கு எகிறியதுஆனால்ஜூன் 4-ல் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் அடுத்துகருத்துக்கணிப்புகள் தவறாகப் போனதால் பங்குச் சந்தைகள் சரிந்து பல லட்சம் கோடி இழப்புகளை சந்தித்துள்ளன.

7. நீட் தேர்வு நடத்துவதில் நடந்துள்ள பெரும் ஊழல் முறைகேடுகளும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளனஅது போட்டித் தேர்வுகளை தனியார் மயமாக்குவதற்கும் இட்டுச்சென்றுள்ளதுபிராந்தியத் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு மாநில வாரியங்கள் வேறுவேறு பாடத்திட்டங்களை கொண்டுள்ள பன்மைத்துவ இந்தியாவில் ஒரே நாடு ஒரு தேர்வு மாதிரி தவறானது என்பதை நீட் தேர்வுகள் அது தொடங்கப்பட்டதிலிருந்தே வெளிப்படுத்தியுள்ளனதேசிய தேர்வுகள் முகமை மூலம் தேர்வுகள் நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்பல்கலைக்கழகங்கள் தங்கள் சொந்த நுழைவுத் தேர்வுகளை தாங்களே நடத்திக் கொள்ள வேண்டுமென்றும் கட்சி தொடர்ந்து போராடும்.

8. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அருந்ததி ராய்ஷேக் சவுகத் ஹுசைன் மீது வழக்குத் தொடர தில்லி துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கியதுஜனநாயகம்மாறுபட்ட குரலை பழிவாங்கும் நடவடிக்கையின் மற்றொரு எடுத்துக்காட்டாகும்இது இந்தியவகை பாசிசத்தின் முக்கிய இயல்பாக மாறியுள்ளதுதில்லியின் அதே துணைநிலை ஆளுநர்தான் செயல்பாட்டாளர் மேதா பட்கருக்கு எதிரான பொய்யான அவதூறு வழக்கு தொடுத்துஅதனால்  குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனையை எதிர் நோக்கியிருக்கிறார்அனைத்து கொடூரமான சட்டங்களையும் திரும்பப் பெறவும்அரசியல் கைதிகள்தண்டனைக் காலங்கள் முடிந்த பிறகும் விடுவிக்கப் படாதவர்கள் விடுதலைக்காகவும் கட்சி தொடர்ந்து போராடும்.

9. ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே அருந்ததி ராய்ஷேக் சவுகத் ஹுசைன் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்படுவதையும், “தி கேரவன்” பத்திரிகையாளர்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருப்பதும்சத்தீஸ்கரில் இரண்டு முஸ்லீம் ஆண்களைக் கொன்று குவித்ததையும்ஆதிவாசி செயல்வீரர் சுனீதா போட்டம் கைது செய்யப்பட்டுள்ளதும் நடந்துள்ளன. இவை அனைத்தும் பாசிச அரசியலின் தொடர்ச்சியை காட்டுவதற்கான திட்டமிட்ட முயற்சியை வெளிப்படுத்துகின்றனமோடி ஆட்சியை எதிர்த்து போராட்டங்களை தொடருமாறு நாட்டு மக்களுக்கு மத்தியக் கமிட்டி அழைப்பு விடுக்கிறது.

10. புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கின்றனஇச்சட்டங்கள்குடியுரிமைகளையும் மானுட உரிமைகளையும் வலுவிழக்கச் செய்யும்இந்தச் சட்டங்கள்நியாயமான அரசியல் மாற்று கருத்தையும் எதிர்ப்பு தெரிவிப்பதையும் ஒடுக்குவதை எளிதாக்கும். இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்தியக் கமிட்டி வலியுறுத்துகிறது. "சட்டங்களை காலனித்துவ நீக்கம்" செய்வதாகச் சொல்லப்படும் இந்த கேலிக்கூத்தை அம்பலப்படுத்துமாறு மக்களை வலியுறுத்துகிறதுஉண்மையில் இதுகுடியுரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக காலனித்துவ போலீஸ் அதிகாரங்களை ஆழமாக்குவதையும் போலீஸ் ஆட்சியைக் வழக்கமாக்கி விட முயல்வதையுமே அர்த்தப்படுத்துகிறது என்பதையும் அம்பலப்படுத்தியாக வேண்டும்.

11. வதோதராவில் 462 வீடுகள் கொண்ட ஒரு வளாகத்தில் ஒரு தனி முஸ்லீம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிராகமதவெறி பிடித்த குடியிருப்பாளர்கள் கும்பலாக ஒன்றுகூடி நிற்பதுமுஸ்லிம்கள்தலித்துகளுக்கான குடியிருப்பு உரிமையை பறிக்கும் சாதிய ஒதுக்குதலின்  பகிரங்கமான இந்து மதவெறி அணிவகுப்பே தவிர வேறல்லபரந்த சமூகத்தின் மௌனம் வெறுப்பு வெறியர்களுக்கு துணிச்சல் அளிக்கிறதுவெறுப்புக்கு எதிராக ஒன்றுபடுங்கள்நீதிக்காக ஒன்றுபடுங்கள்மதச் சிறுபான்மையினர் மனிதர்களல்ல என நிரந்தரப்படுத்தும் முயற்சியை மறுத்து ஒன்றுபடுங்கள் என மக்களுக்கு மத்தியக் கமிட்டி அழைப்பு விடுக்கிறது.

12. 2017 ஜூன் மாதம் மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சவுரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது ஆறு விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமான மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக நியமித்ததற்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதை மத்தியக் கமிட்டி ஆதரிக்கிறதுமோடி அரசின் இந்த அவமதிப்புக்கு கூடுதலாகமோடி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் கடுமையான விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தவறியது மட்டுமல்லாமல்மேலும் புண்படுத்தும் வகையில்நீண்டகாலமாக நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம்முழு கடன் தள்ளுபடிமின்சார தனியார்மயமாக்கலை ரத்து செய்வதுஉற்பத்தி செலவைக் குறைப்பதுகாப்பீடு மற்றும் ஓய்வூதியத்தை உறுதி செய்வது போன்ற நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறியிருக்கிறது.

13. பற்பல மாநிலங்களிலும்வாழ்வதும், வேலை செய்வதும் சாத்தியம் இல்லை என்ற நிலையை வெப்ப அலை ஏற்படுத்தியுள்ளதுமக்களது உயிர்களும் வாழ்வாதாரமும் இழப்புக்கு ஆளாகி உள்ளனபேரிடர் அவசரநிலைக்கு உடனடியாக வினையாற்ற வேண்டிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான பிரதமர் அவர் பதவிக்கு வந்து இதுநாள் வரை அந்த கமிட்டி யை ஒருமுறைகூட கூட்டவில்லைவெப்ப அலையின் காரணமாக மிகவும் கடுமையாக  பாதிக்கப்பட்டஅதிலும் குறிப்பாக மிகவும் பாதிக்கப்படும் ஏழைதொழிலாளர் வர்க்கத்தைப் பாதுகாக்க அவசியமான உத்தரவுகளை பிறப்பிப்பது பற்றி சொல்லவேத் தேவையில்லைவெப்ப அலையை எதிர்கொள்ள  விரிவான செயல் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும்வெப்ப அலையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்றும் நாங்கள் கோருகிறோம்.

14. குடியேறிய காலனித்துவ நிறவெறி அரசான இஸ்ரேலின் பிடிகளில் தற்போது இனப்படுகொலையை எதிர்கொண்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மத்தியக் கமிட்டி தனது ஆழ்ந்த ஒருமைப்பாட்டை மறுஉறுதி செய்கிறதுஇஸ்ரேல் நடத்தும் கொடூரமான போர்க் குற்றங்களை கண்டிக்கும் அதேவேளைஇஸ்ரேலுக்கு மீண்டும் இராணுவ ஆதரவை அதிகரிப்பதை நியாயப்படுத்திட பொய்களைப் பயன்படுத்திஇஸ்ரேல் இன்னும் கூடுதலான போர்க் குற்றங்களை செய்வதற்கான தைரியம் கொடுக்கும் அமெரிக்காவையும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளி நாடுகளையும் மத்தியக் கமிட்டி கண்டனம் செய்கின்றதுஇந்திய அரசாங்கம்பாலஸ்தீனத்துடனான ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒருமைப்பாட்டை  உயர்த்திப்பிடிக்க வேண்டும்எந்த வகையிலும் இஸ்ரேலின் இனப்படுகொலை திட்டத்தை இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது என்றும் மத்தியக் கமிட்டி வலியுறுத்துகிறது.

15. குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து மத்தியக் கமிட்டி தனது ஆழ்ந்த வருத்தத்தையும்வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறதுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும்உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் மத்திய அரசை மத்தியக் கமிட்டி வலியுறுத்துகிறதுகுறைந்து வரும் வேலை வாய்ப்பு காரணமாகவும் குறைந்த ஊதியம் காரணமாகவும் இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உரிமைகள்பாதுகாப்பு குறித்த அக்கறையின்மையை மத்திய அரசு கைவிட வேண்டிய நேரமிது.

16. மோதல் என்ற போர்வையில் சத்தீஸ்கார் பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் பாஜக அரசின் இடைவிடாத தாக்குதல்களில் ஆதிவாசிகள் மீண்டும் மீண்டும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு வருவதை மத்தியக் கமிட்டி கண்டிக்கிறதுகடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியாலும்இப்போது அதிக தொகுதிகளில் வெற்றிபெற முடிந்ததாலும் தைரியமடைந்துள்ள மோடி ஆட்சியும் சங்-பாஜக படையும் சத்தீஸ்கர் மக்கள் மீது தங்களின் பாசிச தாக்குதலை தீவிரப்படுத்தவே செய்யும்சத்தீஸ்கரின் இயற்கை வளங்களை கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு எதிரான போரில் மக்கள்ஆதிவாசிகளுக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

17.கிராமப்புர வேலையில்லா திண்டாட்ட துயரத்தைத் தணிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட ஒதுக்கீடு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ .2.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட வேண்டுமென மத்தியக் கமிட்டி வலியுறுத்துகிறதுநகர்ப்புரகிராமப்புர ஏழை மக்களுக்கான விரிவான வீட்டுவசதித் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வருவது அவசியமானதாகும்மேலும் கோடி வீடுகள் என்ற அறிவிப்பு தேவையை நிறைவேற்றாது என்பதால் வீடு எண்ணிக்கையை அதிகப் படுத்துவதோடுவீடு ஒன்றிற்கு ஒதுக்கப்படும் தொகை குறைந்தபட்சம் ரூ லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.