இகக(மாலெஆவணங்கள்:

சுற்றுச்சூழல்காலநிலை நெருக்கடிபகுதி 3 )

( 2023 பிப்ரவரி 16-20 வரை பாட்னாவில் நடைபெற்ற 11வது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் )

11. நாம்சூரியஒளி, காற்றுஇன்னபிற மாற்று ஆற்றல்களின் உற்பத்தியை, செயலூக்கமிக்க விதத்தில் முன்னேற்றிட வேண்டிய தேவை உள்ளது. மேலும் பெருமளவிலான பொதுப் போக்குவரத்துசுத்தமான வாகன எரிபொருள்சுத்தமான சமையல் எரிபொருள்சுத்தமான மின்சாரம் வழங்க வேண்டுமெனவும் கோர வேண்டும்புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அதானிஅக்மிபிர்லா போன்ற ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர்கள் இலாபம் ஈட்டுவதற்காக ஒப்படைக்கப்படாமல், பரவலாக்கப்பட்ட விதத்தில் உற்பத்தி செய்யப்பட்டுபொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தால் மட்டுமே அது பொருளுள்ள தீர்வாக இருக்க முடியும். நமது நாட்டில் புதைபடிவ எரிபொருளால் இயக்கப்படும் வாகனங்களுக்கு தீர்வாக மின்வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகக் காட்டப்படுகிறதுமின்சார வாகனங்களிலிருந்து நேரடியாக பசுமை வாயு வெளியேறுவது இல்லை என்ற போதும் அவை இயங்கும் மின்சாரம் பெருமளவுக்கு புதைபடிவ எரிபொருளில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது.

12. காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது என்ற பெயரில் அணு மின்னாற்றலை உற்பத்தி செய்வதையும் அனுமதிக்க முடியாது என்பதையும் மனங்கொள்ள வேண்டும்அணு மின்னாற்றலுக்கு முன்னுரிமை தருவது தொழில்நுட்பரீதியில் போலியானதுமட்டுமின்றிஅணுக் கழிவுகளை அகற்றும் போதுதவிர்க்க முடியாதவாறுபேரழிவுமிக்க தொடர் விளைவுகளோடுதொடர்ச்சியான அணுக்கதிர் வீச்சு காரணமாக தொழிற்சாலை, (கதிர்வீச்சு மூலகங்களை உற்பத்தி செய்யும்சுரங்கத் தொழிலாளருக்கு கொடூரமான உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தும்உண்மையில், உலகில் அணு ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் பணி கையளிக்கப்பட்டிருக்கும் சர்வதேச அணு ஆற்றல் முகமை "காலநிலை மாற்ற சவால்களுக்கு அணு மின்னாற்றல் ஒரு குறுகிய கால தீர்வல்ல…" என்றும், "கரிம உமிழ்வை உடனடியாகவும்திடீரெனவும் குறைத்திடும் தேவைக்கு அணு உலைகளைக் கட்டுவதை விடவும் மிகவும் விரைவாக அமல்படுத்த முடியக்கூடிய அணுகுமுறை தேவைப்படுகிறது" என்றும் ஒப்புக்கொள்கிறதுகூடுதலாகஅணுமின் உலைகள் அடிப்படையில் இலாபத்தை தனியார்மயமாக்குகிறதுமனிதர்களுக்கான கொடூர பாதிப்புகளையும் ஆபத்துகளையும் சமூகமயமாக்குகிறதுஎனவே நாம் கூடங்குளம்ஜைதாபூர் உள்ளிட்டு எங்கெல்லாம் புதிய உலைகள் கட்ட முயற்சிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அணு மின்னாற்றலுக்கான முன்னுரிமையை எதிர்ப்பதை தொடர வேண்டும்.

13. 2011 டர்பனில், சர்வதேச பேச்சுவார்த்தைகளின்போதுஅமெரிக்காவும் மற்ற வளர்ந்த நாடுகளும் கொடுத்த நெருக்கடிக்கு பணிந்த இந்திய அரசாங்கம், பொதுவான ஆனால் வேறுபடுத்தப்பட்ட பொறுப்பு என்ற கொள்கையை (வரலாற்று ரீதியான உமிழ்வின் அடிப்படையில் உமிழ்வின் சுமைகளை பகிர்ந்தளிப்பது) மறுத்ததன் மூலம் பெரும் தவறிழைத்துவிட்டது என்பதை கவனத்தில் கொள்கிறோம். இந்தியாஏழை நாடுகள்வளரும் நாடுகளோடு ஒற்றுமை கொள்வதற்கு மாறாகஉமிழ்வைக் குறைப்பதற்கான அளவுகோலாக தனிநபர் உமிழ்வு அளவை அனுமதிக்கும் முன்வைப்பை ஏற்றுக் கொண்டதுஅதன்மூலம்  வளரும்ஏழைநாடுகள் மீது குறைவான உமிழ்விற்கு கூடுதல் தண்டம் என்ற முறையில் பெருஞ்சுமை திணிக்கப்பட்டுவிட்டது. சமத்துவம்வரலாற்று ரீதியான பொறுப்புடைமை என்ற இரு அடிப்படைகளைக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டுமென அழுத்தம் திருத்தமாக கூறவேண்டிய தேவை நமக்குள்ளதுபாரிஸ் ஒப்பந்தம்தன்னார்வ உமிழ்வுக் குறைப்பு திட்ட பொறியமைவு ஆகியவை மூலம் பொதுவான ஆனால் வேறுபடுத்தப்பட்ட பொறுப்பு என்ற கொள்கையை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கியோட்டோ நெறிமுறைகளின் கீழ் இருந்த முந்தைய அமைப்புமுறை போன்றில்லாமல்   உமிழ்வைக் குறைப்பதற்காக தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை நாடுகள் தன்னிச்சையாக முடிவு செய்யும் இத்திட்டம், சட்டப்படியாக செயல்படுத்தப்படக்கூடியதல்லகண்டிப்பாக குறைக்கப்படவேண்டும் என்பதிலிருந்து தன்னார்வத்துடன் குறைத்துக்கொள்ளலாம் என்ற இந்த நகர்வு பசுமை இல்ல வாயு உமிழ்தலைத் தடுப்பதின் முயற்சியை நீர்த்துப்போகச் செய்யும். வளரும் நாடுகள் உமிழ்வுக் குறைப்புத் திட்டங்களில் பங்கெடுப்பதில்லை என தண்டிக்கும், பழிசுமத்தும் வளர்ந்த நாடுகளின் முயற்சியும் கூடவளரும் நாடுகளால் எதிர்க்கப்படுகிறதுஇருப்பினும்வளரும் நாடுகளின் நிலைமை சுரண்டலின் வர்க்கத்தன்மையை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது.

14. நெல் பயிரிடுதல், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றிலிருந்து வரும் பசுமை இல்ல வாயு உமிழ்வை, உலகிலுள்ள மிகப்பெரும் தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளின் தொழிற்சாலைகள், வாகனங்கள் ஆகியவற்றிலிருந்து வரும் ஆடம்பர உமிழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கும் மிகவும் விசித்திரமான நிகழ்வை இந்தியா மற்ற வளரும் நாடுகளோடு இணைந்து கண்டித்தாக வேண்டும். வளரும் நாடுகளும் இந்தியாவும் நீண்டகாலமாக கொண்டுள்ள பிழைத்திருப்பதற்கான உமிழ்தல் குறைக்கப்படமுடியாதுமேலும் அவற்றை ஆடம்பர உமிழ்விலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய தேவையும் உள்ளதுஇவையிரண்டையும் ஒரே வகையினத்திற்குள் கொண்டுவரும் எந்தவொரு முயற்சியும் ஆபத்தானதும்எதிர்க்கப்படவேண்டியதுமாகும்தனிநபர் பசுமை வாயு உமிழ்வுவரலாற்று ரீதியான பங்களிப்புபொதுவான ஆனால் வேறுபடுத்தப்பட்ட பொறுப்பு எனும் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படவேண்டும் என இந்தியா மற்ற வளரும் நாடுகளோடு சேர்ந்து அழுத்தம் திருத்தமாக கூறவேண்டியது முக்கியமானதாகும்.

15. இங்குகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இந்திய அரசாங்கம் சர்வதேச பேச்சு வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை என்பது முக்கியமானதாகும். காலநிலை நேயசுற்றுச் சூழல் ரீதியில் நீடித்து நிலைத்த வளர்ச்சி மாதிரியை உருவாக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளதுமக்களையும் வளங்களையும் இலாபத்திற்காக சுரண்டும் கார்ப்பரேட் செயல்பாட்டைப் போலல்லாது, வளர்ச்சிவளங்கள்ஆற்றல் தேவைகள், மாற்றத்தின் உரிமையாளர்கள் ஏழைஎளிய மக்களே என்ற அணுகுமுறையை இந்தியாவின்  (பருவநிலை மாற்றசெயல்திட்டம்  கொண்டிருக்க வேண்டும்.

16. இந்தியாவில் உள்ள பாஜக அரசாங்கம், 'தொழில் செய்வதை எளிதாக்குவதுஎனும் பெயரில் தன்னுடைய நவ தாராளவாத திட்டங்களை நிறைவேற்ற, சுற்றுச்சூழல்வனச் சட்டங்களை திரிப்பதற்கும், ஒழிப்பதற்குமான எந்த வாய்ப்பையும் விட்டு வைப்பதில்லைவனங்களில் வாழும் அட்டவணை பழங்குடியினர்மற்ற மரபார்ந்த வனவாசிகள் பல தலைமுறைகளாக தங்களின் வாழ்வுவாழ்வாதாரத்திற்கு சார்ந்திருக்கும் வன வளங்களின் தனிநபர், சமூக உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைகள் சட்டம் 2006, பல்லாண்டுகள் போராட்டத்தின் விளைவாக சட்டமாக்கப்பட்டதுவனப் பகுதியில் எந்தவொரு திட்டத்திற்கும்எந்தவொரு 'இறுதி' அனுமதி வழங்குவதற்கு முன்பு  பழங்குடியினரிடமும் வனவாசிகளிடமும் ஒப்புதல் பெறவேண்டிய தேவையை நடைமுறையில் இல்லாமலாக்குவதன் மூலம் புதிய வன (பாதுகாப்புவிதிகள் 2022, வன உரிமைகள் சட்டத்தை (2006) அப்பட்டமாக மீறுகிறது. கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையை மாற்றுவதன் மூலம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டம் நீர்த்துப்போகச் செய்யப்படுவதற்கும், துணைக் கட்டுமான திட்டங்களுக்கு கிராமசபைகளிடமிருந்து தடையின்மை சான்றிதழ் பெறுவதை தவிர்க்க வன உரிமைகள் சட்டம் பல வகையிலும் மீறப்படுவதற்கும் நாம் சாட்சியாக இருக்கிறோம். வனப் (பாதுகாப்புவிதிகள் 2022, வன அழிப்புக்கு ஈடுசெய்யும் பல்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளன. ஆனால், 'வளர்ச்சிஎன்ற பேரால் வெட்டப்படுவதற்கும்வேரோடு பிடுங்கப்படுவதற்கும்தீயிட்டுக் கொளுத்தப்படுவதற்கும் ஆளாகப்போகும்பல நூற்றாண்டுகள் பழமையான வனங்களை மறு உருவாக்கம் செய்ய முடியாதவையாகவே உள்ளனஇந்த ஒட்டுமொத்த திட்டங்களும், இன்னும் இருக்கும் ஆற்றல்மிகு பாதுகாப்புகளை பழங்குடியினர், வனவாசிகளிடமிருந்து பிடுங்கிஇந்த வனங்களின் பெரும் கனிமமற்ற இயற்கை வளங்களிலிருந்து இலாபம் சம்பாதிக்க வன நிலங்களைஅதானிகள், அம்பானிகள்ஜிந்தால்கள்வேதாந்தாக்களிடம் ஒப்படைப்பதை முறைப்படுத்தும்இயற்கையோடு நீடித்து நிலைத்த உறவுடன் வாழ்ந்துவரும் சமூகங்களை அதிகாரமற்றவர்களாக்கி வனங்களையும் சுற்றுச்சூழலையும் பேரழிவுக்குட்படுத்தி இலாபம் தேடும் முதலாளித்துவத்தை முன்னேற்றுவதையே இந்திய அரசாங்கத்தின் பொறுப்பற்ற பருவநிலைக் கொள்கை காட்டுகிறதுசுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குறியீடு 2020 இல், 180 நாடுகளுள் 178 வது இடத்தை பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் தவிரஅனைத்து தெற்காசிய நாடுகளுக்கும் பின்னால்இந்தியா 168 வது இடத்திலுள்ளது.

-தொடரும்