இதுவிவசாயிகள் விரோத பட்ஜட், இளைஞர் விரோதபடஜட், ஏழைகள்விரோத பட்ஜட் - மக்கள் விரோதபட்ஜட்!
-ராஜாராம் சிங்
விவசாயிகள், விவசாயம்
இந்த நிதி நிலை அறிக்கை மக்கள் விரோதமானது. விவசாயிகள் விரோதமானது. இளைஞர் விரோதமானது. ஏழைகள் விரோதமானது. விவசாயத்தை லாபகரமாக ஆக்கமுடியாமல் விவசாயிகள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் 3.5% குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது! சி2+50% பரிந்துரைப்படி, விளைபொருளுக்கு சட்டபூர்வமான குறைந்தபட்ச ஆதரவு விலை முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறது. ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற வீரமிக்க விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக சிங்கு எல்லையில் நினைவுச்சின்னம் எழுப்பிட வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன்.
இளைஞர், வேலை வாய்ப்பு
நாட்டின் 50% இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையே ஒப்புக்கொள்கிறது. பின் எதற்காக ஸ்கில் இண்டியா(திறன்மேம்பாட்டு திட்டம்)? ஒரு கோடி இளைஞர்களுக்குத் திறன் வளர்ப்புத் திட்டம் என்று சொல்லப்படுகிறது. இது மிகப் பெரிய ஏமாற்று, இதன்மூலம் 500 பெரும் நிறவனங்களே ஆதாயமடையும். அக்னிவீர் திட்டம் போலவே கம்பெனிவீர் திட்டத்தை திணிக்க அரசு விரும்புகிறது. அக்னிவீர் திட்டம் போலவே இதிலும் இளைஞர்கள் வேலை இல்லாமலிருப்பார்கள். இவர்கள் சொல்லுவது ஸ்கில் இண்டியா அல்ல. கில் இண்டியா (இந்தியாவைக் கொல்) திட்டமாகும்.
வரியும் வறியமக்களும்
இந்தியாவின் மொத்த வரி வசூலில் 60% க்கு மேலாக வறியவர்கள், சாமானிய மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. ஆனால் எல்லா ஆதாயங்களும் சலுகைகளும் சூப்பர் (பெரும் பெரும்) பணக்காரர்களுக்கே கொடுக்கப்படுகிறது. சூப்பர் பணக்காரர்கள் மீது வரிவிதிக்க வேண்டும். சமூக நலத்திட்டங்களுக்கு கல்வி, மருத்துவத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வரவேண்டுமென வலியுறுத்துகிறேன்.
பீகாரும் சிறப்புத்திட்டமும்
பீகாரிலிருந்து ஜார்க்கண்ட் பிரிக்கப்பட்டபோது, பீகாரின் வருவாய் வெகுவாக வீழ்ச்சியடைந்து விட்டது. அதை ஒட்டி பீகாருக்கு சிறப்புத்திட்டம் அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
பீகாரை ஒட்டியுள்ள சர்வதேச எல்லையின் குறுக்கே தண்ணீர் பிரச்சனையால் ஏற்படும் சிக்கல் பெரும் சிக்கலான பிரச்சனையாகும். இதனால் அடிக்கடி வெள்ளப்பிரச்சனையை சந்திக்கிறது. இதை எதிர்கொள்ள நேபாளத்தில் ஒரு உயர்மட்ட அணை கட்டுவது பற்றி பேசப்பட்டது. ஆனால் பேச்சு பேச்சாகவே இருக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. பீகார், வெள்ளத்தடுப்பு, துயர்தடுப்பு பணிகளில் மிகவும் பினதங்கியுள்ளது. இதனால் அதன் பாசனமுறையும் மிகவும் சீர்கெட்டுள்ளது. இது குறித்து இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.
-2024-25 நிதிநிலை அறிக்கை மீது 25-07-2024 அன்று, இகக (மாலெ) பீகார், மக்களவை உறுப்பினர் ராஜாராம்சிங் பேசியதின் சுருக்கம்.…………………………….. செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசிஉற்பத்தி மய்யத்தின் தற்போதையஉற்பத்தி நிலவரம் என்ன?
-ராஜாராம் சிங் (கேள்வி எண் 794)
கேள்வி: அ) சென்னை, செங்கல்பட்டிலுள்ள பொதுத்துறைநிறுவனமான ஒருங்கிணந்த தடுப்பூசி உற்பத்தி மய்யத்தின் தற்போதைய உற்பத்தி நிலவரம் என்ன?
பதில்:
செங்கல்பட்டில் ஒருங்கிணந்த தடுப்பூசி உற்பத்தி மய்யம் ஒன்றை ஹெச்எல்எல் பயோடெக் லிமிடெட் நிறுவனம் மூலம் அமைக்க இந்திய அரசு, மே 2012இல் அனுமதி அளித்தது. ஆனாலும் குறித்த காலக்கெடுவுக்குள் செயல்படுத்தமுடியவில்லை, இதனால் செலவு கணிசமாக அதிகரித்து விட்டது. தடுப்பூசி உற்பத்திக்கான இந்த ஹெச்பிஎல் நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர பல்வேறு வாய்ப்புகள் பற்றி கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் திட்டவட்டமான விளைவுகள் ஏதும் இல்லை.
ஆ) செங்கல்பட்டின் இந்தஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மய்யத்தில்கோவிட் பெருந்தொற்றின்போது கோவிட்-19 தடுப்பூசி உற்பத்திசெய்யப்பட்டதா? அப்படியானால் அதன்விவரம் என்ன? உற்பத்தி செய்யப்படவில்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன? இ) இந்தியாவின் நோய்த்தடுப்புதிட்டத்தை முன்னேற்றிடும் வகையில் செங்கல்பட்டுஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மய்யத்தை வலுப்படுத்த இந்திய அரசாங்கம் எடுத்த முயற்சிகள் என்ன?
பதில்: ஆ), இ) செங்கல்பட்டிலுள்ள இந்த ஆலையை செயல்படுத்த, மருத்துவம், குடும்ப நலத்துறை அமைச்சகம் பல முயற்சிகளை மேற்கொண்டது. இந்த நிறுவனத்தை செயல்படுத்தும் ஆர்வமுள்ள திட்ட முகவர்களைக் கண்டறிய பிப்ரவரி 2021ல் ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. 2021, மார்ச் 26ல், இந்த ஆலையை பயன்படுத்திக் கொள்வதற்காக ஒரு ஈ-ஒப்பந்தத்திற்கான ஏலமும் கோரப்பட்டது; தொடக்கத்தில், சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டினாலும் ஏலமெடுக்கும் நடைமுறையில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
கேள்வி: ஈ) நாட்டின், பொதுத்துறைமூலம் தடுப்பூசிஉற்பத்தியை அதிகரிக்க திட்டமேதும் உள்ளதா? அப்படியானால் அதன்விவரம் என்ன? அப்படி இல்லை என்றால் அதற்கு காரணமென்ன?
பதில்: மருத்துவம், குடும்பநல அமைச்சகத்தின் கீழ் சுயமாக இயங்கும் குன்னூரிலுள்ள இந்திய பாஸ்டியூர் நிறுவனத்தின் மூலம் முத்தடுப்பூசி உற்பத்தி தற்போதுள்ள 85 மில்லியன் டோஸ் அளவை 130 மில்லியன் டோஸாக அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோயம்புத்தூரில் உள்ள வைரல் தடுப்பூசி உற்பத்தி செய்யும் ஆலைக்கு 30 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
(தோழர் ராஜாராம்சிங் எழுப்பிய மேற்கண்ட கேள்விகளுக்கு 26-07-2024 அன்று, மக்களவையில் அமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் எழுத்துபூர்வமாக அளித்த பதில்கள்).
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)