திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டுகளும்,

இடது ஜனநாயக மாற்றின் தேவையும்

                -மு.இராமச்சந்திரன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்லஅது ஒரு மனிதனின் வாழ்க்கைகனவு, எதிர்காலம்நியாயமாக ஒருவர் கூறுவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமைஎன்று "மக்களுடன் முதல்வர்" திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் வலியுறுத்திச் சொன்னார்.

ஆனால் கிராமப்புர, நகர்ப்புர வீடற்ற  மக்கள் வீட்டுமனை கேட்டு கொடுத்த லட்சக்கணக்கான மனுக்கள் தீர்வு காணப்படாமல் ஆண்டுக்கணக்கில் ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்து கிடக்கின்றனமறுபுறம் ரியல் எஸ்டேட் முதலாளிகளிடம்  வீட்டுமனை நிலங்கள் வாங்குவதற்கு ஆளில்லாமல்  குவிந்து கிடக்கின்றனஇவையெல்லாம் இந்த அரசுக்குத்  தெரியாதா என்னமக்களுக்கு குடியிருப்பு உரிமையை உறுதி செய்வதல்ல, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு லாபத்தை உறுதி செய்வதுதான் இந்த அரசின் கொள்கையாக இருக்கும்போது  வீட்டுமனைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது எப்படிஅரசின் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்து காத்திரமான மாற்றங்கள் இல்லாமல் கொண்டுவரப்படும், "மக்களுடன் முதல்வர்போன்ற திட்டங்கள் ஓர் அடையாள நடவடிக்கையாகஅடுத்துவரும் தேர்தலில் ஆளுங்கட்சி வாக்குகளை அறுவடை செய்வதற்கான ஓர்  உத்தியாக இருக்குமே தவிர மக்கள் பிரச்சனைகளை முழுமையாகத் தீர்க்க உதவாது.

தமிழ்நாட்டில், செல்வாக்குமிக்க மனிதர்களுக்காக  கூலிப்படையினர் நடத்தும் கொலைகள், சாதி ஆணவப் படுகொலைகள்பெண்கள், தலித்துகள்சிறார்கள் மீதான வன்கொடுமைகள், காவல் கொலைகள்போலி மோதல்கள்காவல்துறையின் ஆணாதிக்கசாதி, மத சார்பு நிலைதொழிற்சங்க இயக்கங்கள்மக்கள் இயக்கங்கள் மீதான  ஒடுக்குமுறைகள் என கடந்த ஆட்சியைப் போல இந்த ஆட்சியிலும்  தொடர்வது சட்டத்தின் ஆட்சியில், ஜனநாயகத்தில்மக்கள் நலனில் அக்கறை கொண்ட அனைவரையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறதுசீற்றம்கொள்ளச் செய்திருக்கிறது. இதற்கு எதிராக இடதுஜனநாயக அமைப்புகள்  குடிமைச் சமூகமனித உரிமை அமைப்புகள் குரல் கொடுக்கின்றனநீதிக்காகப் போராடுகின்றன.

 ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனஎம்ஜிஆர் ஆட்சியிலிருந்து எடப்பாடி ஆட்சி வரை போலீஸ் ஆட்சிக்குப் பெயர் போன அதிமுககலவரம் செய்யாமல் கட்சியை வளர்ப்பது எப்படி என்று அங்கலாய்க்கும் பாஜகநாடகக் காதல் (லவ் ஜிகாத்தின் தமிழ் வடிவம்பற்றி பேசி சாதிக் கலவரத்தை தூண்டும் பாமக, மாலியம்சிவனியம் (கர் வாப்சியின் தமிழ் வடிவம்), மொழிஇனவாதம் பேசிதமிழ்ச் சமூகத்தையே சாதிமதரீதியில் கூறுபோடும் நாம் தமிழர் உள்ளிட்ட எல்லா பிற்போக்கு கட்சிகளும் போடும் கூப்பாடுகள் கேலிக் கூத்தானவைஆபத்தானவைதங்கள் பங்குக்கு  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தாங்களே  உருவாக்குவதும்மறுபக்கம்  மற்றெல்லா மக்கள் பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முதன்மையான பிரச்சனையாக முன் நகர்த்துவதும், இவ்வாறாக ஒரு போலீஸ் ஆட்சிக்கான,   சர்வாதிகார ஆட்சிக்கான பொதுக்கருத்தை மக்களிடையே  உருவாக்குவதும்தான் இந்த  வலதுசாரிகளின் உத்தியாக இருக்கிறது.

நாம் திமுக ஆட்சியில் நடைபெறும் காவல்துறை அத்துமீறல்களை தடுத்துநிறுத்த போராடும் அதே சமயம்திமுக ஆட்சியின் மீதான வலதுசாரிபிற்போக்கு சக்திகளின் கூப்பாடுகளுக்கு பின்னால் உள்ள உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்.

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது," காவல்துறை நிர்வாகத்தின் சீரழிவைத் தடுத்து நிறுத்தஉச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-ன் கீழ்  ‘மாநில பாதுகாப்பு ஆணையம்அமைக்கப்பட வேண்டும்என்று வலியுறுத்தியிருந்தார்இந்த ஆட்சியில் மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டதாக செய்தியும் வெளியானதுஆனால் இதுவரையில் அந்த ஆணையம் ஒரு முறை கூட கூடியதாகத்  தெரியவில்லை.

மக்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முடியாத எல்லா அரசாங்கங்களும் தங்கள் இருத்தலுக்கு காவல்துறையின் ஒடுக்குமுறையைச் சார்ந்துதான் இருக்கின்றனதிமுக அரசாங்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் அறுதியிட்டு எழாமல் அரசியல் சட்டமும் செயல்படாதுஆணையங்களும் செயல்படாது என்பதை நடைமுறை அனுபவங்கள் நமக்கு  உணர்த்துகின்றன.

திமுக தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 90%ஐ நிறைவேற்றிவிட்டதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா சொல்கிறார்ரேசன் கடையில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும்  வழங்கப்படும் என்ற எளிய கோரிக்கைககளிலிருந்து 3.5 லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதுபழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் போன்ற கோரிக்கைகள்  வரை நிறைவேற்றப்படாத கோரிக்கைகளின்  ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறதுதிமுக அரசுக்கு எதிராக  நடைபெறும் தொழிலாளர்கள்விவசாயிகள், ஆசிரியர்கள்அரசு ஊழியர்கள்செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என பலதரப்பட்ட பிரிவினரின்  போராட்டங்களில் பெரும்பாலானவை அதன் தேர்தல் வாக்குறுதிகளை மய்யமாகக் கொண்டே எழுகின்றனஒரு டிரில்லியன் (ஒரு லட்சம் கோடிடாலர் பொருளாதார வளர்ச்சி என்ற பேரிரைச்சலுக்குள் இந்த எதிர்ப்புக் குரல்களை மூழ்கடிக்கப் பார்க்கிறது திராவிட மாடல் அரசு.

ஒன்றிய அரசும் தன் பங்குக்கு மக்கள் நலத் திட்டங்களை வெட்டிச் சுருக்குவதற்கு மாநிலத்தின் நிதியாதாரங்களைக் கட்டுப்படுத்துவது, மாநிலத்தின்  அதிகாரங்களைப் பறிப்பதுஆளுநரைக் கொண்டு போட்டி அரசாங்கம் நடத்துவது, ஆணாதிக்கசாதிமத, தேச வெறிச் சக்திகளுக்கு ஊக்கமளிப்பது என வாய்ப்புள்ள எல்லா வழிகளிலும் திமுக அரசு மீதும்தமிழ்நாட்டு மக்கள் மீதும் தாக்குதல் தொடுக்கிறது.

திராவிட எதிர்ப்பு வலதுசாரி  தளத்திலிருந்து பாஜகபாமக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி வெளியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூடதிமுக எதிர்ப்பு என்ற பெயரில் திராவிட எதிர்ப்புக் கருத்துகளை முன்வைக்கிறதுபுரட்சிகர கம்யூனிஸ்டுகளாகிய  நாம், திராவிட இயக்கத்தின் முற்போக்கு விழுமியங்களை விமர்சனப்பூர்வமாக உட்கிரகித்துக்கொண்டு, தமிழ்ச் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, இடது ஜனநாயக அமைப்புகளோடு ஒன்றிணைந்துஇடதுசாரித் தளத்திலிருந்து எதிர்க்கட்சி வெளியைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும்.

வலதுசாரி அரசாங்கமோ, திமுக போன்ற நடுச்சாரி அரசாங்கமோஅல்லது இடது முன்னணி  அரசாங்கமோஎதுவாக இருந்தாலும் சரி புரட்சிகர எதிர்க்கட்சி என்பதுதான் நமது அடிப்படை நிலைப்பாடாகும். அதே சமயம்வேறுபட்ட சூழல்கள்வேறுபட்ட அரசாங்கங்கள்வேறுபட்ட பிரச்சனைகளில் நடைமுறைக் களத்தில் செயல்தந்திர நெகிழ்வுத்தன்மையுடன் நாம் செயலாற்ற வேண்டியிருக்கிறதுஅந்த வகையில் ஒன்றிய  பாசிச பாஜக அரசு திமுக அரசை சீர்குலைக்க முயற்சிக்கும்போதும்திமுக அரசு ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதமக்கள் விரோத கொள்கைகளை எதிர்க்கும்போதும் நாம் திமுக அரசுக்கு விமர்சனபூர்வமாக ஆதரவளிப்பதும்திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவுமக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களை அணிதிரட்டி முறியடிப்பதும் புரட்சிகர எதிர்க்கட்சி பாத்திரத்தின் ஒருங்கிணைந்த  அம்சங்கள்தான்.

அதிமுக பலவீனமடைந்தால், பாஜக எதிர்க்கட்சி வெளியைக் கைப்பற்றி விடும்எனவே அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்ற மூடக்கருத்து முற்போக்கு வட்டாரங்களில் இருக்கிறது. இடதுஜனநாயக சக்திகள் ஒரு மாற்று சக்தியாக எழுவதோ, அரசியல் மய்ய நீரோட்டத்திற்கு வருவதோ சாத்தியமில்லைஅவர்கள் விளிம்புநிலை சக்தியாக இருப்பதற்கே விதிக்கப்பட்டவர்கள் என்பதுதான் இதன் பின்னுள்ள கருத்துநாம் இந்தக் கருத்தை திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டும்.

நிலம்சாதி ஒழிப்புசமூக பொருளாதார ஏற்றத்தாழ்வை ஒழிக்கும் சமூக நீதி, மதச்சார்பின்மைதொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டத்தினூடே

கிராமப்புர, நகர்ப்புரத் தொழிலாளர்கள்உழைக்கும் விவசாயிகள்ஜனநாயகப் பிரிவினரை ஓர் அரசியல் சக்தியாக அறுதியிட்டு எழச் செய்ய வேண்டும். இதன் வழியாக எதிர்க்கட்சி வெளியை இடதுஜனநாயக, முற்போக்கு சக்திகள் கைப்பற்ற வேண்டும்.