விசைத்தறித் தொழில் நெருக்கடிதொழிலாளரை அழிக்கிறது!

ஆர்வேல்முருகன்

இந்தியா முழுவதும்  20 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆறு லட்சம் விசைத்தறிகள் உள்ளனகோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2,50,000 விசைத்தறிகள் உள்ளன. இம் மாவட்டங்களில் சுமார்இலட்சம் தொழிலாளர் நேரடியாகவும் சுமார்இலட்சம் தொழிலாளர் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள்ஈரோடுநாமக்கல், சேலம் மாவட்டங்களில் சுமார்  3 இலட்சத்திற்கும் அதிகமான  விசைத்தறிகள் இயங்குகின்றனஇவற்றில் சுமார்இலட்சம் பேர் நேரடியாகவும், 3 இலட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள்வேட்டிகள்சேலைகள், துண்டுகள்காடா துணிகள் மற்றும் ஏற்றுமதிக்கான சட்டைகள், ஆடைகள் தயாரிக்கத் தேவையான துணி ரகங்கள் எனப் பல்வேறு ரகங்கள் விசைத்தறிகளில் தயாரிக்கப்படுகின்றன.

பெரும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களுடைய விசைத்தறிகளையும், பாவுநூலையும் அடைப்பு தறி முதலாளிகள் எனப்படுபவர்களிடம் கொடுத்து துணியை உற்பத்தி செய்து பெறுகின்றனர்அல்லது சொந்தமாக தறிகளை வைத்திருக்கும்  சிறிய பட்டறை முதலாளிகளிடம் நூல் கொடுத்தும் நெசவுசெய்து துணியை வாங்குகின்றனர்இத்தகைய சிறிய பட்டறை முதலாளிகள் தான் நேரடியாக  விசைத்தறி தொழிலாளரை பணிக்கமர்த்தி உற்பத்தியில் ஈடுபடுத்தி தொழிலாளருக்கு கூலி வழங்குகின்றனர்பொதுவாகமுதல் 15 தறிகள் வரை  வைத்துள்ள சிறிய முதலாளிகளேதமிழ்நாட்டின் விசைத்தறி துணி உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

இதுவல்லாமல்நேரடியாக ஜவுளி உற்பத்தியாளர்கள் 50, 100 தறிகள் வரை மெசின்களை வைத்து   நடத்தும் பெரிய விசைத்தறிக்கூடங்களும் உள்ளனஅரசு ஆதரவுடன்  தானியங்கி தறிக் கூடங்கள்  தற்போது பெருகி வருகின்றனவெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பழைய நவீனத் தறிகளை வாங்கி உருவாக்கப்படும் இத்தகைய ஆட்டோலூம் பட்டறைகள் பாரம்பரியமாக செயல்பட்டு வரும் இலட்சக்கணக்கான சாதா தறிகளை வைத்து இயக்கும் பட்டறைகளுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன.

விசைத்தறி தொழிற்துறைக்குள் நிகழும் கட்டமைப்பு  மாற்றங்கள்

ஒன்றியமாநில அரசுகளின் கார்ப்பரேட் பெருமுதலாளித்துவ ஆதரவு தொழில் கொள்கைகள் காரணமாக விசைத்தறி நெசவு தொழில் கடுமையான நெருக்கடியில் சிக்கி உள்ளதுகொரோனா நோய் காலத்திற்குப் பிறகுவிசைத்தறி பட்டறைகள்  தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றனவேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விசைத்தறி தொழிலாளர் வாழ்வு படு மோசமாக மாறியுள்ளது.

ஆட்டோலூம் வருகையால்வேட்டி சேலை துண்டு போன்ற சாதாரண விசைத்தறி ரகங்கள் ஆட்டோலூம் நவீன தறியில் ஓட்டப்படுகிறது. சாதாரண தறிகள் இந்த ரகங்கள் கிடைக்காமல் நலிவடைந்து போகின்றனபட்டறைகள் மூடப்படுகின்றனசாதா தறிகள் பழைய இரும்பு கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு  எடைக்கு போடப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

சொந்தமாகவும்வாடகைக்கு தறிகள் வாங்கியும் சாதாரண தறிகள்  போட்டு கூலிக்கு நெய்யும் விசைத்தறி தொழிலாளர்கள், ரகத்தை மாற்ற நெசவு செய்திட தறிகளை  மேம்படுத்த வேண்டியது அவசர அவசியம் ஆகிவிட்டதுடிராபாக்ஸ்செட்டாப் பாக்ஸ்ஜாக்காடு போன்றவை அமைத்தால்  மட்டுமே  இலட்சக்கணக்கானவர்கள் தொழிலில் நீடிக்க முடியும்; அல்லது வெளியேற வேண்டும்கூலிக்கு நெய்யும் இவர்கள் வைத்திருக்கும் சாதா தறிகளை மேம்படுத்த முதலீட்டு உதவிகள் தேவைப்படுகிறதுஇவர்களுக்கு, வட்டியில்லா அரசு கடன் உதவிகள் அவசர அவசியமாகும்.

ஜிஎஸ்டி  வரி விதிப்புபாதிப்பு

ஜவுளி துணிகளுக்கான நூல் மீது 12%  ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறதுஇதுவல்லாமல் விசைத்தறிகளில் தயாராகும் துணிகளுக்கு ஜிஎஸ்டி சேவை வரி 5% விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரிகள் உற்பத்தியாகும் துணிஆடைகளின் மதிப்பை கூட்டுகிறதுஇதனால்விலை உயர்ந்து, ஒருபுறம் உற்பத்தியை பாதிக்கிறதுமற்றொரு புறம்விலை உயர்த்தினால் விற்பனைக்கு ஏற்படும்  சந்தை நெருக்கடிகளை சமாளிக்க தொழிலாளரது கூலிகள் குறைக்கப்படுகின்றன.

நூல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள்

எனவே தான்விசைத்தறி தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்விசைத்தறி தொழில் சார்ந்த தொழிலாளர்  வேலை வாய்ப்புகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

தொழிலாளர்களின் துயர நிலை அதிகரிக்கிறது :-

'விசைத்தறிக் கூடங்கள் தொழிற்சாலை சட்ட வரம்புக்குள் வராதுஎன அறிவித்து  முதலாளிகள் எவ்வித தொழிற்சாலைதொழிலாளர் சட்டங்களையும் நடைமுறைப் படுத்துவதில்லைஆண்பெண் விசைத்தறித் தொழிலாளர் மிக மோசமான பணி நிலைமைகளில் வேலை செய்கின்றனர். குடிநீர்கழிப்பிட வசதிகள் கூட முறையாக செய்து தரப்படுவதில்லை. 'பாக்கிமுறை என்னும் கொத்தடிமை முறை நிலவி வருகிறது. பட்டறை முதலாளிகள் ஒரு தொகையை முன்பணமாக கொடுத்து தொழிலாளர்களை பணிக்கமர்த்துவர். அந்த அசல் தொகையை திருப்பி செலுத்தும்வரை சம்பந்தப்பட்ட தொழிலாளி அந்த முதலாளியிடம்தான் வேலை செய்தாக வேண்டும்உழைப்பை யாரிடம் வேண்டுமானாலும் விற்கும் சுதந்திரம் தொழிலாளரிடமிருந்து பறிக்கப்படுகிறது. இத்தகைய கொத்தடிமை வேலை நிலைமைகளுக்கு மத்தியில் பணியாற்றும் தொழிலாளர் மிகக்கடும் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளனர்இதனால், ஆண்பெண் விசைத்தறித் தொழிலாளர் சிறுநீரகங்கள் விற்பதும் பெண்கள் கருமுட்டைகளை விற்பதும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

இத்தகைய பின்னணியில்மூன்றாண்டு கொரோனா காலகட்ட வேலை இழப்பினால்விசைத்தறி தொழிலாளருக்குவேலைகூலி இழப்பினால் சில இலட்சம் ரூபாய்  கடன்கள் உருவாகியுள்ளன.

மற்றொருபுறம்நூற்றுக்கணக்கான ரகங்கள்நூற்றுக்கணக்கான கூலி அடிப்படையில் தொழிலாளர்களுக்கு கூலி வழங்கப்படுகிறது.12 மணிநேரத்திற்கு ஒரு தொழிலாளி தறி, 12 தறி ஓட்டினால் கூட வாரம் ரூ3000 முதல் ரூ.4000- வரை மட்டுமே கூலியாக கிடைக்கிறது; தொடர்ச்சியான வேலையும் கிடைப்பதில்லை.

இரண்டு தறிகளை வீட்டில் போட்டு முதலாளிகளிடம் பாவுகோனு வாங்கி கூலிக்கு  ஓட்டும் தொழிலாளர் வருமானத்தை  பொறுத்தவரையில் கணவன் மனைவி கூட்டு உழைப்பினால்  வாரம் ரூ 5000 மட்டுமே கூலியாக பெற முடிகிறது.

பல ஆண்டுகளாக கூலிகள் உயர்வே இல்லை. நூல் ரகங்கள் கொடுக்கும் முதலாளிகள்அவற்றை வாங்கி தறிகளில் ஓட்டி உற்பத்தி செய்யும் முதலாளிகள்தொழிலாளருக்கு ஆண்டுக்கு ஒருமுறை கூட கூலி உயர்வு தருவதில்லைஒவ்வொரு ஆண்டும் தொழிலாளருக்கு  தரப்படும் போனஸ் 10% மட்டுமே!

சில இடங்களில் சதவீதம் போனஸ் என்பது நடைமுறையில்  இல்லைமாதம் ஒன்றுக்கு ரூ.500 அல்லது 600 என கணக்கிட்டு ஆண்டு போனசாக ரூ. 6000- வரை தரப்படுகிறது; இத் தொகை10 நாட்கள் கூலி கூட இல்லைஇப்பகுதிகளில் போனசின் பழைய பெயர் இனாம் ஆகும்.

மிகக் குறைந்த வருமானத்தில் வீட்டு வாடகை, மளிகைப்பொருட்கள்குழந்தைகளின் மருத்துவகல்வி செலவுகள் என அரை வயிறாக குடும்பத்தோடு பட்டினி கிடக்கவும் வேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, அத்தியாவசிய பொருட்களின் கடும் விலைஉயர்வால் சத்துள்ள உணவு சாப்பிடமுடியாத நிலை, இதனால் நோய்த் தாக்குதல்மருத்துவச் செலவு என துயரத்தை அதிகரிக்கின்றன.

சுய உதவிக் குழுக்கள் மூலமாக வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் மேலும்கந்துவட்டிக்கு கடன் பெற்று வட்டி கூடக் கட்ட முடியாமல்  தொழிலாளர்கள் தற்கொலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்கொலைகளில் இருந்து பாதுகாக்க விசைத்தறி தொழிலாளர் குடும்பங்களில் உள்ள அனைத்து மைக்ரோ பைனான்ஸ்சுய உதவி குழு கடன்வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

பெரும்பாலான தொழிலாளர் சொந்த வீடு இல்லாதவர்கள். இவர்கள் வாடகை வீட்டில் ரூ. 3000 முதல் 5000 வரை வாடகை செலுத்த வேண்டியுள்ளதுஇதுவே பெரும் சுமையாக உள்ளதுவீடற்ற தொழிலாளருக்கு விலை இல்லா வீடு- வீட்டுமனைகளை வழங்க வேண்டும்நல வாரியத்தில் இருந்து விசைத்தறி தொழிலாளருக்கு வழங்க வேண்டிய இலட்சக்கணக்கான  உதவித்தொகை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

எனவே ஒன்றியமாநில அரசுகள் உடனே தலையிட்டுவிசைத்தறி தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம், வேலை உத்தரவாதம்வாழ்வாதாரம் பாதுகாக்கும்  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.