அம்பேத்கர் சிந்தனையின்படி கல்வி என்பது சமூக நீதியை அடைவதற்கானசமூகத் தட்டுகள் இடம் மாறுவதற்கான ஓர் ஆயுதம்

இகக(மாலெபொதுச்செயலாளர் திபங்கர்பிடிஅய்நாடாளுமன்றத்தெரு சேனலுக்குஅளித்த சிறப்பு நேர்காணல்;

….சென்ற இதழின்தொடர்ச்சி

தமிழாக்கம்சி.மதிவாணன்

 

தேர்தல்முடிவுகள்குறிப்பாக, பீகாரில் இந்தியா அணிக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்ததுஇன்னும்சிறப்பானவெற்றியைஎல்லோரும்எதிர்பார்த்தார்கள். எது தவறாகிப்போனது? (சமூக/அரசியல்) சக்திகள் எப்படி திசை தவறிப்போயின? மற்றுமொரு கேள்வி, வரும் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும்?

சில அம்சங்கள் தவறாகிப் போயின என்றுதான் நினைக்கிறேன்தொகுதி பங்கீடு குறித்து எனக்கு மிகவும் அதிருப்தி இருக்கிறதுவேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்ததிலும் அப்படித்தான்இதனால் சில தொகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. உதாரணமாக பூர்னியாஇந்த தொகுதியை பப்பு யாதவ் கைப்பற்றினார். அங்கேஇந்தியா கூட்டணியின் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர் 30 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளே பெற்றார் என்ற நினைத்துப் பார்க்க முடியாத விளைவு ஏற்பட்டதுஇது இரண்டு அணிகளுக்கு இடையே நடந்த போட்டி. இதில் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர்முழுக் கட்சியும் அவருக்கு ஆதரவாக இருந்தபோதுஎப்படி இவ்வளவு குறைவான வாக்குகளைப் பெற முடியும்அதன் தொடர் விளைவால் அராரியாமதேபுர் உள்ளிட்ட பல தொகுதிகள் பாதிப்புக்கு ஆளாகின.

சிவான் எங்களுக்கு வலுவான தொகுதி. அங்கே நாங்கள் வெற்றி பெற வாய்ப்புகள் மிக அதிகம்சிவான் தொகுதியில் எம்எல் வேட்பாளர் போட்டியிட்டிருந்தால் சிவான் தொகுதியை வென்றிருக்க முடியும் என்று பல வட்டாரங்களிலிருந்தும் எனக்கு தகவல்கள் வந்தன. அப்படி வென்றிருந்தால்சிவான், சாப்ராஅப்புறம் மகராஜ்கன்ஞ்ஏன் கோபால்கஞ்ச் உள்ளிட்ட சுற்றியுள்ள தொகுதிகளிலும் வெற்றி உத்தரவாதம் ஆகியிருக்கும். இவையெல்லாம் தவிர்த்திருக்கக்கூடிய சில தவறுகள்இந்தத் தவறுகளால் சில தொகுதிகள் கையை விட்டுப் போயினஅதைவிட முக்கியமான பிரச்சனைவடக்குப் பீகாரில் நாங்கள் ஏன் சிறப்பான வெற்றிபெற முடியவில்லை என்பது.

சட்டமன்றத் தேர்தல் என்று எடுத்துக்கொண்டால் நாங்கள் சிறப்பாக செயல்பட்டது தெற்கு பீகாரும்சீமாஞ்சல் பிராந்தியத்தின் ஒரு பகுதியும்தான்ஆனால்வடக்குப் பீகாரின் மிதிலாசம்பரன்சரன் பகுதி, மேலும் கோஷி ஆகிய பகுதிகளில் தேசிய ஜனநாயக முன்னணி சற்று சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் என்ன தவறு நடந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். தெற்கு பீகாரில் இருக்கும் சமூக ஒற்றுமை முன்சொன்ன இடங்களில் இல்லை என்பதுதான் வடக்கு பீகாரில்எங்களின் பலவீனமான அம்சமாக  இருந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். அங்கே மிகப் பெரிய அளவுக்கு சமூகப் பிளவு இருக்கிறதுமற்றொரு காரணியாக நிதிஷ் குமார் இருக்கலாம். பாஜகவிற்கு எந்தப் பாதிப்பும் இருக்காதுஎன்று பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர்நிதிஷ் குமாருக்கும் எல்ஜேபி கட்சிக்கும் மிக அதிகமான பாதிப்பு ஏற்படும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தனர்ஆனால், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்தனபாஜகவுக்குத்தான் பீகாரில் மிகப்பெரிய அளவுக்கு இழப்பு ஏற்பட்டதுநிதிஷ் குமாருக்கு நான்கு தொகுதிகள் இழப்பு. எல்ஜேபி க்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை.   தேர்தல் கருத்துக்கணிப்பு செய்தவர்களில் யாரெல்லாம் சரியாகக் கணித்தார்களோ அவர்களே கூட பீகாரில் சரியானபடி கணிக்கவில்லை.

நிதிஷ் குமாரின்  மரபு மிகவும் தாக்குப் பிடிக்கும் ஒன்றாக இருக்கிறதுநிதிஷ் மரபுக்கு பெண்கள் கூடுதல் ஆதரவு அளிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று சிலர் சொல்கின்றனர்மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் அவ்வாறுதான் இருக்கிறார்கள்இப்பிரச்சனைகளைக் களைய நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறதுவரும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்று வரும்போது, மாற்றம் கண்டுவரும் நிலையில் பீகார் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ராம் விலாஸ் பஸ்வான் இறந்துபோனார். சுசில் மோடியும் மறைந்தார்லாலு யாதவும் செயல்துடிப்புடன் இல்லை. அவர்களின் காலத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார் மட்டுமே துடிப்புடன் இருக்கிறார். எனவேநாம் பீகார் அரசியலின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்இது ஒரு தலைமுறை மாற்றம்இந்த தலைமுறை மாற்றம் அனைத்து கட்சிகளின் நிர்வாக அமைப்புகளிலும் நடந்துகொண்டிருக்கிறது. எனவேஇந்தியா அணியின் மேலுள்ள நல்ல எண்ணம் நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதலாக செயல்படத் துவங்கும் என்று பலரும் சொல்கிறார்கள்நானும் அப்படித்தான் கருதுகிறேன்.

மின்னணுவாக்குஎந்திரங்களில்பதிவானவாக்குகள்குறித்துதாமதமானஅறிவிப்புகள், பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும் எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கும் முரண்பாடு என்று நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இதனை எதிர்க்கட்சிகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப் போகிறீர்கள்?

தேர்தலுக்கு முன்பு நாங்கள் ஒரு பொதுவான கோரிக்கைக்கு வந்து சேர்ந்தோம்விபாட் துண்டுகளை 100 சதம் எண்ண வேண்டும் என்று கோரினோம். (விபாட் என்பது வாக்காளர் அளித்த வாக்கு அவர் விருப்பப்படியே பதிவாகி இருக்கிறதா என்பதைக் காட்டும் துண்டுச் சீட்டாகும்அதனைச் சரிபார்க்கவில்லை என்றால் விபாட் என்ற பெயரே தப்பான பெயராகிவிடுகிறதல்லவாவாக்காளர் சரிபார்க்கவில்லை என்றால், உண்மையான பதிவு பற்றிய துண்டுச் சீட்டு கிடைக்கவில்லை என்றால் அதன் பயன்தான் என்ன?

கெடுவாய்ப்பாக உச்சநீதிமன்றம் எங்கள் கருத்துக்கு உடன்படவில்லைதேர்தல் ஆணையமும் உடன்படவில்லை. எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால்வாக்குச் சீட்டு முறைக்கு நாடு திரும்பியாக வேண்டுமென்பது எமது கட்சியின் அரசியல் நிலைப்பாடாக இருக்கிறது.

இக்கருத்தை பல்வேறு அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றனர்வாக்குச்சீட்டு கோரிக்கைக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்பந்தம் இல்லைதோல்வியடைந்தவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது பழிபோடுகிறார்கள் என்று பாஜகவைச் சேர்ந்தவர்கள் சொல்வது வழக்கம். ’ஒவ்வொருமுறை நீங்கள் தோற்கும்போதும் இவ்வாறு பழிபோடுகிறீர்கள்என்று அவர்கள் சொல்வார்கள்அதுவல்ல விஷயம்வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்வெளிப்படைத்தன்மை இல்லையேல் நம்பிக்கை எப்படி வரும்?

பிரச்சனையைமுன்னெடுத்துச்செல்வதற்கானவழி என்ன? தேர்தல் ஆணையத்தை அணுகியாகிவிட்டது. உச்சநீதிமன்றத்துக்கும்போயாகிவிட்டது. அடுத்து இப்பிரச்சனையை எப்படி முன்னெடுப்பது?

மக்களின் எழுச்சிதான் சாத்தியமான வழியாக இருக்கிறதுமக்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லும்போது, அரசு நிர்வாகக் கட்டமைப்புதான் அதற்குத் தகுந்த முறையில் வினையாற்ற வேண்டும். பல தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களின் வாக்குகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் பொருத்தம் இருப்பதாக நம்பவில்லைஎனவேஇதுபோன்றே தொடர்ந்து பல இடங்களிலும் நடக்கும்போதுதேர்தலில் தில்லுமுல்லு நடக்கிறது என்று வலுவாகக் கருதும்போதுஒரு ஜனநாயக நாட்டில் வெகுமக்களின் எதிர்ப்பு ஏற்படும் என்று நீங்கள் கருத வாய்ப்பிருக்கிறது. அது தப்பான சிந்தனை என்று நான் கருதவில்லைஇதுபோன்ற ஒன்று கேள்விப்படாத ஒன்றும் இல்லைஎனவே மக்கள்தங்களின் கருத்துகளுக்கு (நிர்வாக கட்டமைப்புசெவிசாய்க்கப்படுவதைச் சாதிப்பார்கள்அப்படிச் செய்வது மட்டுமே அரசியல் நிர்வாகக் கட்டமைப்பு  பதில் வினை ஆற்றச் செய்வதற்கான ஒரே வழியாக இருக்கும்.

துவக்கத்திலிருந்தேநீட் தேர்வுக்கு எதிராக நிற்கும் மாநிலங்களில்ஒன்றாகதமிழ்நாடுஇருக்கிறது.

சமீபத்தில்நீட் பற்றிய சர்ச்சை எழுந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? இது தொடர்பாக உங்கள் கட்சியின் கோரிக்கை என்னகல்விமுறையைகாவிமயமாக்கஒருமுகப்பட்டமுயற்சிநடக்கிறதுஎன்றுநீங்கள்நம்புகிறீர்களா?

முழுமையாக நம்புகிறேன். வாஜ்பேயி காலத்திலிருந்தேஇன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்பிருந்தே, காவிமயமாக்கல் நடந்து வருகிறதுமக்களின் மூளையைக் கட்டுப்படுத்துவது என்பதுதான் பாஜகவின்ஆர்எஸ்எஸ்சின் மையமான வேலைத்திட்டமாகும்நாட்டின் கல்விசார் விஷயங்கள் மீது, கல்விச் சூழல் மீதுஇலக்கிய உலகின் மீது தாக்கம் விளைவிப்பது, ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது அவர்களின் மையமான திட்டமாகும். இது அவர்களின் இரண்டாவது இயற்கையான தன்மையாகும்அது அவர்களின் மரபணுக்கூறிலேயே பொதிந்துள்ள செய்தியாகும்.

மேலும்காவிமயமாக்கப்படுவது என்பதற்கு கூடுதலாகமுழுமையான தனியார்மயமாக்கமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான் அதனை கல்வியை 'மேட்டுக்குடி மயமாக்கல்’ என்று குறிப்பிடுவேன்அம்பேத்கர் சிந்தனையின்படிகல்வி என்பது சமூக நீதியை அடைவதற்கானசமூகத் தட்டுகள் இடம் மாறுவதற்கான  ஓர் ஆயுதம்இது மக்களின் வாழ்க்கையில் கண்ணுக்குத்தெரியும் முன்னேற்றத்தைக் கொண்டுவரும். முற்போக்கான நிலச்சீர்திருத்தம்செல்வத்தைப்பங்கீடு செய்வது நடக்க வேண்டும்தற்போது இவையெல்லாம் மக்களுக்கு மறுக்கப்படுகிறது. அதற்கு மாறாகஅனைத்தையும் மையப்படுத்துவது நடக்கிறது.

துவக்கத்திலிருந்தே நீட் தேர்வுக்கு எதிராக நிற்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறதுவேறு சில தென் மாநிலங்களும்ஓரளவுக்கு மேற்கு வங்கமும் கூட நீட்தேர்வை எதிர்க்கின்றன. அவர்கள் நீட் என்ற கருத்தாக்கத்தையே எதிர்க்கிறார்கள்இப்போது வெளிவந்த ஊழல்களுக்கு முன்பிருந்தே அவர்கள் நீட் தேர்வை எதிர்த்து வருகிறார்கள்.

உதாரணமாக ஒரே தேசம், ஒரே தேர்வு என்பதைச் சொல்லலாம்ஒரே தேசம்; ஒரே தேர்தல் என்றாலும் சரிஒரே தேசம்ஒரே மொழி என்றாலும் சரிஒரே தேசம்ஒரே கட்சி  அல்லது ஒரே தேசம்ஒரே தலைவர்அல்லது ஒரே தேசம்ஒரே தேர்வு என்றாலும் சரிஇவை அனைத்துமே கெட்ட கருத்துகள். இவை மிகவும் மோசமான விளைவுகளையே உண்டாக்கும்.

கல்வியைத் தனியார்மயமாக்குவது, கல்விக்குத் தடையாகவே போய்முடியும்தனியார்மயம், வணிகமயம்காவிமயம் என்ற மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. தற்போது மாணவர்கள் என்ன கோருகிறார்களோ அதுதான் எங்கள் கோரிக்கையும்! மாணவர்கள் நடந்து முடிந்த நீட் தேர்வை மறுபடியும் நடத்தும்படி கோருகிறார்கள். நாங்களும் (ஊழலால் பாதிக்கப்பட்டநீட் தேர்வை மறுபடியும் நடத்த வேண்டுமெனக் கோருகிறோம்அவர்கள், தேசிய தேர்வு முகமையை கலைக்கும்படி கோருகிறார்கள்இறுதியாக நீட் தேர்வுமுறையையே குப்பைக் கூடைக்கு அனுப்ப வேண்டும் என்கிறார்கள்.

-தொடரும்