இகக(மாலெஆவணங்கள்

சுற்றுச்சூழல்காலநிலை நெருக்கடிபகுதி 6 )

 ( 2023 பிப்ரவரி 16-20 வரை பாட்னாவில் நடைபெற்ற 11வது கட்சிக்காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் )

 24.  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான முன்முயற்சிகளுடன் தொழிற்சங்க இயக்கமும் நகர்ப்புரங்களில் ஒரு செயலூக்கமிக்க பங்காற்றிட வேண்டும். இது (தொழிற்சாலைகளில்சிறந்த மாசுக்கட்டுப்பாட்டுக் கருவிகளை நிறுவுவதற்கான கோரிக்கைகள்ஆற்றலையும் நீரையும் வீணாகாமல் சேமிப்பதற்கான உள்கட்டமைப்பை அமைப்பதற்கான கோரிக்கைககள் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியிருக்கலாம்தொழிற்சாலைகள்சட்டங்களை மீறாமலும்கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் காற்று, நீர்சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளதுகழிவுநீர் வடிகால் அடைப்புஇயற்கை நீர் சுழற்சியில் இடையூறு ஆகியவை முக்கியமாக மனைவணிகத் துறையின் நலன்களுக்காகச் செலுத்தப்படும் கட்டற்றுப் பெருகும் கான்கிரீட்மயமாக்கத்தால் ஏற்படுகிறதுநகர்ப்புர வெள்ளத்தின் தாக்கங்களை குடியிருப்போரின்குறிப்பாக குடிசைவாசிகளின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம்தொழிற்சாலைகளாலும், நகர்ப்புர மேட்டுக்குடியினராலும் ஏற்படுத்தப்பட்டநகர்ப்புரங்களில் காணக்கூடிய சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்படுபவர்கள்  பெரும்பாலும் நகர்ப்புர ஏழைகளும், தொழிலாளர் வர்க்கமும்தான்தூய்மையான நகரத்திற்கான தங்களது உரிமையைக் கோர தொழிலாளர் வர்க்கத்தை அமைப்பாக்கிசுற்றுச்சூழலுக்கு உகந்த கொள்கைகளை உருவாக்க, கொள்கை வகுப்பாளர்களைக் கட்டாயப்படுத்துவது ஒரு முக்கியமான பணியாகும்

சுரண்டலுக்கு எதிரான இன்றைய போராட்டங்களில், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் அழிவை தடுத்து நிறுத்தும் கருத்தை நாம் உள் கொண்டிருக்க வேண்டும்இடப்பெயர்வுசுற்றுச்சூழல் சீரழிவுக்கு எதிரான இயக்கங்களில் நாம் ஈடுபடுவது மட்டுமல்லாமல், அதற்கு எதிராகப் போராடும் அனைத்து சக்திகளுடனும் பரந்த கூட்டணிகளை உருவாக்க வேண்டும்சுற்றுச்சூழல் ரீதியில் அழிவை ஏற்படுத்தக்கூடிய  கொள்கைகளைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு பரந்துபட்டதாக சமூக இயக்கங்களை வளர்த்தெடுக்கும் பார்வையுடன்சுற்றுப்புறச் சீர்கேடுகளுக்கு எதிராக செயல்படும் கூட்டு மேடைகளை உருவாக்குவது என்பது நமது செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

25. கரியமில வாயுக்களுக்கான புதைகுழிகளை உருவாக்குதல் அல்லது உயிரி எரிபொருள் உற்பத்தி என்ற பெயரில் உள்ளூர் காடுகளையும் விவசாய நிலங்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்பணக்கார நாடுகள் குப்பை கொட்டும் இடங்களாக தெற்குலக நாடுகள் மாற்றப்படுவதை அனுமதிக்கக்கூடாதுமேலும் தொழில்மயமான நாடுகளால் உருவாகும் காலநிலை மாற்ற தாக்கங்களைத் தணிக்க தெற்கு உலகத்தின் விலைமதிப்பற்ற இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை அனுமதிக்கக்கூடாது.

காடுகளிலும் சூழலியல் தாக்கங்களுக்கு உள்ளாகும் பகுதிகளிலும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் வகையில், உள்ளூர் குடிகளால் வளர்த்தெடுக்கப்பட்டசுற்றுச் சூழல் ரீதியாக தாக்குப்பிடித்து நிற்கும் உள்ளூர் குடிகளது வாழ்க்கைமுறைகள், செயல்பாடுகளின் அடிப்படை முக்கியத்துவத்தையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

26. இயற்கை வளங்கள் மீதான பொதுமக்கள் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை நாம் மீண்டும் வலியுறுத்த வேண்டும். நாட்டில் உள்ள பல்வேறு அரசாங்கங்களும் -மாநில அரசாங்கங்களும் ஒன்றிய அரசாங்கமும்இயற்கை வளங்களை தனியார்மயமாக்குவதில் ஒரேகுறியாக முரட்டுத்தனமாக ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில்அது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எதிர்க்க வேண்டிய தேவையுள்ளதுகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் முயற்சிவளங்கள் மீதான ஜனநாயகக் கட்டுப்பாடும், முடிவெடுப்பதில் ஜனநாயகமும் என்ற பெரும் பிரச்சனையிலிருந்து துண்டித்து நிற்க முடியாதுஇலாபவெறி, வளங்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்  ஆட்சியின் கீழ் காலநிலை நெருக்கடியைத் தணிக்க முடியாது. பருவநிலை நெருக்கடியைத் தீர்க்க பல முனைகளிலும் முயற்சிக்க வேண்டும்சர்வதேச அளவில்அதிக ஜனநாயகப் பேச்சு வார்த்தைகளுக்கும் புவிப்பரப்பிலுள்ள உழைக்கும் ஏழைகள், பழங்குடியின மக்களுடன் நீடித்த ஒருமைப்பாட்டிற்கும் நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். தேசிய அளவில்இயற்கை வளங்கள் மீதான உள்ளூர் கட்டுப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், ஆற்றல் மேலாண்மைதிறன்வாய்ந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்கும் பரப்புரை இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும்அரசாங்கம் அனைத்து பங்குதாரர்களுடன், குறிப்பாகபாதிக்கப்படக்கூடிய விளிம்புநிலை சமூகங்களை கலந்தாலோசிக்க வேண்டும்உள்ளூர் மட்டத்தில் கிராம சபைகளுக்கு உச்சபட்ச முன்னுரிமைகளை வழங்கவும் வேண்டும்.

27. இத்தகைய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பிரச்சனையை நிவர்த்தி செய்யநெருக்கடியின் வேர்களை ஆராய்வது முக்கியம்மார்க்ஸ் மூலதனத்தில் எழுதினார்: "ஒரு முழு சமூகமோஒரு தேசமோ அல்லது ஒரே சமயத்தில் இருக்கும் அனைத்து சமூகங்களுமோ கூட பூமியின் உரிமையாளர்கள் அல்லஅவர்கள் வெறுமனே அதனைக் கையில் வைத்திருப்பவர்கள்அதன் பயனாளிகள், மேலும் அதனை இன்னும் மேம்பட்ட நிலையில்அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கையளிக்கும் கடப்பாடு கொண்டவர்கள்”.

மார்க்சும் எங்கெல்சும் உற்பத்தி முறைகுறிப்பாக முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றிய ஆய்வுக் கண்ணோட்டத்தில் சூழலியல் பிரச்சினையில் ஈடுபட்டனர்.   மூலப்பொருள், ஆற்றல்மண் வளம் போன்ற இயற்கை உற்பத்தி ஆதாரங்கள் மூலதனத்திற்கென்று இயற்கை அளித்த இலவச கொடைகள் என்றே முதலாளித்துவத்தின் கீழ் கருதப்படுகின்றன என மார்க்ஸ் விளக்கினார்இயற்கை விதிக்கும் எல்லைகள் என்பவை லாபத்திற்காக உடைத்தெறியப்பட வேண்டிய தடைகள் என்றே மூலதனம் கையாளுகிறதுஇது அவர் குறிப்பிட்ட "சரிசெய்ய முடியாத வளர்சிதை மாற்ற பிளவைஉருவாக்குகிறது. எனவேஇலாப வெறிகொண்ட முதலாளித்துவ முறையைக் கடந்த ஒரு உற்பத்தி முறை என்பது, காலநிலை மாற்றத்தையும் சுற்றுச்சூழல் சீரழிவையும் எதிர்த்துப் போராடும் தொலைநோக்கு சிந்தனையின் பிரிக்கமுடியாத பகுதியாக இருக்க வேண்டும்.

28. காலநிலை மாற்ற பிரச்சினைக்கான எந்தவொரு எதிர்வினையும் சமூகப்பொருளாதார சமத்துவமின்மைக்கும் தீர்வுகாண்பதாக இருக்க வேண்டியது அவசியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாககாலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் என்பது கட்டமைப்பு ரீதியான போராட்டமாகும்முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் ஓர் இன்றியமையாத கூறாகும்காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் முயற்சிவளங்கள் மீதான ஜனநாயகக் கட்டுப்பாடும், முடிவெடுப்பதில் ஜனநாயகமும் என்ற பெரும் பிரச்சனையிலிருந்து துண்டித்து நிற்க முடியாதுஇந்தியாவில் வாழும் நம்மைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள், சமூக மாற்றத்திற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்கள், குறிப்பாக சாதிவர்க்கபாலின அடிப்படையில் நிகழும் அநீதிக்கு எதிரான போராட்ட நிகழ்ச்சிநிரலோடு பிரிக்கமுடியாதவாறு இணைந்துள்ளது.

                                                                                -நிறைவுற்றது