இகக புதுச்சேரி மாநில மாநாட்டில் இகக(மாலெ)

இகக புதுச்சேரி மாநில மாநாட்டில் இகக(மாலெ)
23 மாநில நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில 23வது மாநாடு கடந்த ஆகஸ்ட் மாதம் 17,18 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இக்க(மாலெ) மாநிலக் கமிட்டி சார்பில் மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் கோ. பழனி தலைமையில் மாநில கமிட்டி ல் உறுப்பினர்கள் எஸ். புருஷோத்தமன், ஆர்.விஜயா, புதுச்சேரி நகரச் செயலாளர் எஸ் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். இகக(மாலெ) சார்பாக தோழர் கோ.பழனி மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.

புதுச்சேரி எல் அண்டு டி தொழிலாளர் மறியல் போராட்டம்

ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே

கல்விக்கொள்கையில் காவிக்கு மறுப்பு, தனியார்மயத்துக்கு அழைப்பு!

கல்விக்கொள்கையில் காவிக்கு மறுப்பு, தனியார்மயத்துக்கு அழைப்பு!

முற்போக்கு திராவிடத்தின் புதிய கல்விக்கொள்கை!!
     மதிவாணன்

தமிழ்நாட்டில் எல்கேஜி முதல் உயர்கல்வி வரை கல்வி இலவசம் என்று திராவிட முற்போக்கு ஆட்சி நடத்தும் திமுக அறிவித்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அரசு கல்லூரியிலும் கூட சில ஆயிரங்கள் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது. அரசின் நிதி உதவி பெறும் (தனியார்) கல்லூரிகளில் பல ஆயிரங்கள் கட்ட வேண்டியிருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் கொள்ளையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு

கனியாமூர் மாணவி மர்ம மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் அந்த மாணவியின் மரணத்துக்கு இணையான பேரதிர்ச்சியை தருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ள்ளவர்களின் பிணை மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் நீதிமன்ற நடைமுறை மரபுகளையே சிதைப்பதாக உள்ளது. கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அய்வரும் பொய்யான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்! இந்த மரணத்தில் கொலையோ, பாலியல் வன்முறையோ நடக்கவில்லை என்று கூறியுள்ளார். 'இது பாடம் படிப்பதில் ஏற்பட்ட மன உளைச்சலால் நடந்த தற்கொலைதான்' என வழக்கு விசாரணை முடியுமுன்பே தீர்ப்பு எழுதியுள்ளார்.

ஆகஸ்ட் தியாகிகளுக்கு வீரவணக்கம்! மோடியை வெளியேற்ற உறுதியேற்போம்!

1942 ஆகஸ்ட் 9ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் அழைப்பு வெளியான வுடன், ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத் தின் ஒரு பகுதியான தேவகோட்டை, (இப்போது சிவகங்கை) திருவாடானை, திருவேகம்பத்தூர் ஆகிய இடங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டங்களைக் கையிலெ டுத்தனர். ஆகஸ்ட் 14ல் இருந்து 17வரை இப்பகுதி களில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டங்களில் தேவகோட்டை மீது நீதிமன்றம் கொளுத்தப்பட்டது. அதன் பின் பிரிட்டிஷ் ராணுவம் போராளிகள் துப்பாக்கியால் சுட்டதில் 75 பேர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

ஏஐசிசிடியு மாநிலக் குழுக் கூட்டம் அழைப்பு

2022 ஆகஸ்டு 14, 15 இரு நாட்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஏஐசிசிடியு மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தோழர்கள் சங்கரபாண்டியன், இரணியப்பன், அந்தோணிமுத்து, பாலசுப்பி ரமணியன், சுசீலா, சுகுந்தன் ஆகியோர் கொண்ட குழு தலைமை ஏற்று நடத்தியது. சமீபத்தில் காலமான ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மகேந்திரன், ஏஐசிசிடியு விசைத்தறி தொழிலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் தோழர் மாணிக்கம் மற்றும் மத்திய சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கத் தலைவர் தோழர் ராம்கிஷன் (ஆகஸ்ட் 17 முதலாம் ஆண்டு நினைவு தினம்) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.