1942 ஆகஸ்ட் 9ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் அழைப்பு வெளியான வுடன், ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத் தின் ஒரு பகுதியான தேவகோட்டை, (இப்போது சிவகங்கை) திருவாடானை, திருவேகம்பத்தூர் ஆகிய இடங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டங்களைக் கையிலெ டுத்தனர். ஆகஸ்ட் 14ல் இருந்து 17வரை இப்பகுதி களில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டங்களில் தேவகோட்டை மீது நீதிமன்றம் கொளுத்தப்பட்டது. அதன் பின் பிரிட்டிஷ் ராணுவம் போராளிகள் துப்பாக்கியால் சுட்டதில் 75 பேர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இந் நினைவைப் போற்றும் விதமாக தேவ கோட்டை நகராட்சி அலுவலகம் முன் தியாகிகள் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. திருவேகம்பத்தூரில் போராளிகள்கூடித்திட்டம் வகுத்து பல போராட் டங்களை நடத்தினர். பிரிட்டிஷ் படைக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கினர். அன்றைய இராம நாதபுரம் மாவட்ட ஆட்சியரை சிறைப்பிடித்தனர். அஞ்சலகம், தாலுகா அலுவலகங்களை தீயிட்டுப் பொசுக்கினர். இவற்றின் நினைவாக திருவேகம்பத் தூரிலும் ஒரு நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. இந்தப் போராட்டங்களின் மற்றொரு பகுதியாக, திருவாடானைச் சிறையில்அடைபட்டிருந்த சுதந்திரப் போராளிகளை, சிறையை உடைத்து அனைவரையும் விடுவித்துள்ளனர். இந்த வரலாற்றுப் பின்னணியில் 75ஆவது சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தை நடத்த அரசு, தேவகோட்டை தியாகிகள் பூங்காவை வண்ண மயமாக்கியது. ஆனால், மூவண்ணத்தை தவிர்த்து பல வண்ணங்களால் அலங்கரிப்பதைக் கண்ட புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் ரஞ்சித்குமார் நகராட்சி ஆணையரைச் சந்தித்து, தியாகிகள் பூங்கா அதற்கே உரிய வகையில் அதனை நினைவு கூரும் விதத்தில் அலங்கரிக்கப் படவில்லை என்று கூறி நமது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அந்த பூங்காவில், சுட்டுக் கொல்லப்பட்ட 75 தியாகிகளின் பெயர்ப் பலகையை அரசு நிறுவ வேண்டுமெனவும் மனுக் கொடுத்தார். அதன்பின், நகராட்சி நிர்வாகம், அடித்து முடித்த வண்ணங் களின் மேல் இந்திய தேசியக் கொடியின் படத்தையும் மேற்பகுதியில் மூவண்ணங் களையும் தீட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து திருவேகம் பத்தூர் தியாகிகள் நினைவிடம் சிதிலமடைந்து காணப்பட்டதை அறிந்து அந்த ஊராட்சியின் தலைவர் மாலாவைச் சந்தித்து இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார். அரசிடம் பலமுறை வலியுறுத்திய பின்னரும் கண்டு கொள்ள வில்லை என்ற தனது வருத்தத்தையும் ஊராட்சித் தலைவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அது போலவே, சுதந்திரப் போராளிகள் சிறை வைக்கப்பட்டிருந்த திருவாடானைச் சிறைச் சாலை பாழ்பட்டுக் கிடப்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். நம் தலையீட்டின் காரணமாக தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் நினைவுக்கல்வெட்டு ஒன்றை 13.08.2022 அன்று நகராட்சிநிறுவி யுள்ளது. அதிலும் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாக துப்பாக்கிச் சூடு நடந்த தேதி ஆகஸ்ட் 17 என்பதற்கு மாறாக ஆகஸ்ட் 14 எனப்பதிவு செய்துள்ளனர். இந்த தவறையும் நகராட்சிக்கு சுட்டிக் காட்டி இருக்கிறோம். இந்தப் பின்னணியில், இகை(மாலெ) மத்தியக் கமிட்டி அழைப்பின்படி, 15.08.2022ல் 75 ஆவது சுதந்திர நாள் உறுதியேற்பு நிகழ்ச்சியும் தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் நடத்தப் பட்டது. கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் நாராயணன் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் தோழர் சிம்சன் இப்பகுதியின் வரலாற்றுப் பின்புலத்தை விவரித்துப் பேசினார். இகை (மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம் பேசும் போது, சிவகங்கை, இராமநாதபுரத்தின் நீண்ட போராட்ட வரலாறு பற்றி தொட்டுக் காட்டினார். இந்த மண்ணில், பல்வேறு கால கட்டங்களில் 1947க்கு முன்பு பகத்சிங் உள்ளிட்ட தலைவர்களும் சுதந்திரத்துக்குப் பின் தியாகிகள் சுப்பு, இமானுவேல் சேகரன் வரை, நாட்டு விடுதலை, சமத்துவம், ஜனநாயகம், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியவற்றுக்கான போராட்டங்கள் நடந்து வருவதை சுட்டிக் காட்டினார். இப்போராட்டங்களை துண்டு துண்டாகப் பிரித்துப்பார்ப்பதைக் காட்டிலும் அதற்கிடையே உள்ள ஒரு நுண்ணிய இணைப்பு இழையைக் கண்டறிந்து அதனடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொடர்ந்து போராட வேண்டுமென அழைப்பு விடுத்தார். மேலும், வீரன் சுந்தரலிங்கம், கட்டபொம்மன், வேலு நாச்சியார், குயிலி, மருது சகோதரர்கள், தீரன்சின்னமலை, திருப்பூர் குமரன், இமானு வேல் சேகரன், தியாகி சுப்பு போன்ற தமிழக மண்ணின் போராளிகளையும் போராட்டங் களையும் சுட்டிக்காட்டிப் பேசினார். இவர்களின் மரபு எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. நாம் இந்த அனைத்து விழுமியங் களையும்உயர்த்திப்பிடித்து முன்னெடுக்க இந்த 75 ஆவது சுதந்திர நாளில் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறினார். நமது சுதந்திரமும் அரசமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட மோடிக் கும்பலிடமிருந்து, பாசிசத்திடமிருந்து சுதந்திரம் பெற்றாக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். தோழர் நாராயணன் தனது உரையில், மோடி தேசியக் கொடியையும் வியாபாரமாக்கி விட்டதை சுட்டிக் காட்டினார். தேசியக் கொடியை காசாக்கியதன் மூலம்
அம்பானிக்கு ரூ.1800 கோடிக்கு வழிசெய்து கொடுத்துள்ளதாக கூறியவர், மோடிக்கு எப்போதும் எதிலும் கார்ப்பரேட்டுகள்தான் முக்கியம் என்பதையும் சுட்டிக் காட்டினார். கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் அரிமா பேசினார். உறுதி மொழியை தோழர் சிம்சன் வாசிக்க அனைவரும் திரும்பக் கூறி உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டம் துவங்குவதற்கு முன்பு நகராட்சியிலிருந்து ஊர்வலமாக முழக்கமிட்டு நினைவிடத்திற்கு வந்தனர். பள்ளிச்சிறுவர்கள் சுதந்திரப் பாடலை யும் இறுதியில் தேசிய கீதத்தையும் பாடினர். நிகழ்ச்சியில், தோழர்கள் சந்தன மேரி, பேராசிரியர் கோச்சடை, எஸ்பிடி, லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் ஆகஸ்ட் புரட்சியின் தலைமையிடமான திருவேகம்பத்தூர் சென்று நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வீர வணக்கம் செலுத்தினர். பின், ஊராட்சித் தலைவரைச் சந்தித்து, சிதிலமடைந்த நினைவுத் தூணை சீர் செய்ய தீர்மானம் நிறைவேற்ற கேட்டுக் கொண்டனர். அவரும் அதனைச் செய்ய இசைவு தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் உற்சாகமடைந்தனர். இந்த வரலாற்று நிகழ்வுகளோடு மோடியை வெளியேற்றும் இன்றைய கடமையுடன் இணைக்கப்பட்ட அரசியல் பரிமாணத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாகவும் இருந்தன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)