பில்கிஸ் பானுவோடு நாம்'

பில்கிஸ் பானுவுக்கு நீதி கேட்டு போராட்டம்

  பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும் என்றும் அவருக்கு அநீதி இழைத்த, ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டதைக் கண்டித்தும் அவர்களை மீண்டும் சிறையில் அடைக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றன.

இக்க(மாலெ), அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக 27.8.2022 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இக்க (மாலெ) தோழர் ஸ்வேதா ராஜ், தோழர் கவிதா கிருஷ்ணன், தோழர் சுபாஷினி அலி, மைமுனா முல்லா, சப்னா ஆஷ்மி, சப்னம் ஹஸ்மி, கௌகர் ராஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். TAND IN SUPPORT AND WITH SILKIS BAMS GLE FOR JUST

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்

பல்வேறு

அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள்,

வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இகக

(மாலெ) சார்பாக தோழர் மைத்ரேயி கிருஷ்ணன்,

அகில இந்திய மாணவர் கழகம் சார்பாக

ஜூனைத் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், தெரு முனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஜதாவ்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மேற்கு வங்க மாநிலச் செயலாளர் தோழர் இந்திராணி தத்தா உரையாற்றினார். அவர் பில்கிஸ் பானுவின் தைரியத்தைப் பாராட்டினார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் ஆகஸ்டு 26 அன்று புத்தா பார்க்கில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் இகை(மாலெ) பீகார் சட்டமன்றக்குழு துணைத்தலைவர் தோழர் சத்யதேவ் ராம், இக்க(மா) செயலக உறுப்பினர் தோழர் அருண் மிஸ்ரா, பியுசிஎல் தலைவர் சர்பராஸ், ஜேஎஸ்எம் தலைவர் சமந்தாராய், இக்க(மாலெ) பாலிகஞ்ச் சட்டமன்ற உறுப்பினர் தோழர் சந்தீப் சவுரப், அஇமுபெக தலைவர் அனிதாசின்ஹா, ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் ராம்பரிதேவி, அய்சா தலைவர் ஆதித்யா ரஞ்சன், கவிஞர் குர்ஷித் அக்பர், இன்ஸாப் மஞ்ச் தலைவர் அசம்கான் உள்ளிட்ட பலர் உரையாற் றினார்கள். இந்த நிகழ்ச் சியை அகில இந்திய மக்கள் மேடையின் தலைவர் கமலேஷ் சர்மா ஒருங்கிணைத்தார். வன்புணர்வு, கொலைக் குற்றவாளிகளை சிறையில் இருந்து விடுதலை ) செய்தது மட்டுமின்றி, அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றுக் கொண்டாடியதை பேசியவர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.

சென்னை சைதாப்பேட்டையில், அனைத்து , பெண்கள் கூட்டமைப்பு சார்பில் 28.08.2022 அன்று 'பில்கிஸ் பானுவோடு நாம்' ஆர்ப்பாட்டம் - நடைபெற்றது. 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவையும், பிரசவம் ஆகி 2 நாட்களே ஆன அவரது சகோதரியையும் அவரது தாயாரையும் வன்புணர்வு செய்தனர். பானுவின் 3 வயது குழந்தையை பாறையில் அடித்து கொன்றனர். 17 பேரில் உயிர் பிழைத்த பில்கிஸ் பானுவின் தொடர் > போராட்டத்தின் காரணமாக சங்கிகள் 11 பேருக்கு - ஆயுள் தண்டனை கிடைத்தது. அந்த கொடுங்
குற்றவாளிகளை 75வது சுதந்திர நாள் அன்று குஜராத் அரசு மன்னித்து விடுதலை செய்துவிட்டது. அதைக் கண்டித்தும் அந்த கொலைகாரர்கள் 11 பேரையும் மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும், பில்கிஸ் பானுவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தோழர்களும் கலந்துகொண்டனர். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் தோழர்கிருஷ்ணவேணி ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்.