அச்சம், பொய்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம்!

உலகளாவிய கோவிட்19 பெருந்தொற்றின் கொடூரப் பரவல் நிகழ்ந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகும், அதன் இடையூறு மிகுந்த பின்விளைவுக ளிலிருந்து இந்த உலகம் மீண்டு வர வேண்டி யுள்ளது. வேறு எங்கேயும் உள்ளதை விடவும் இந்த பெருந்தொற்று உருவாகிய சீனா, அதன் தீவிரப்பரவலின் பின்னதிர்வுகளை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டு உள்ளது. மேலும், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது என்னும் பெயரில் நடந்து வரும் அடக்குமுறை அரசின் தலையீடுகளுக்கு எதிரான, மிகப் பரவலான சமூகப் போராட்டங்களையும் கூட கண்டது.

கட்சியின் மத்தியக்குழு பார்வையாளரும் கர்நாடகா மாநிலச்செயலாளருமான தோழர் கிளிப்டன் உரை

கட்சியின் தமிழ்நாடு மாநில 11 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து தோழர்களுக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக ஆர்எஸ்எஸ்ஸின் பாசிசத் தாக்குதலை ஒட்டுமொத்த நாடும் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த மாநில மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடும் கூட அதில் தப்பிக்கவில்லை. தமிழ்நாடு கட்சியின் முதன்மையான குறிக்கோள், பாசிசத் தாக்குதலை எதிர்ப்பது தான் என்று தமிழ்நாடு கட்சித் தோழர்கள் மிகச் சரியாகவே தீர்மானித்துள்ளார்கள். கடந்த இரண்டு நாட்களாக கட்சி அறிக்கை, விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

கருத்தியல் கடப்பாடு, அரசியல் தெளிவு, அமைப்பு ஒற்றுமை மற்றும் பலம் ஆகிய மூன்று அம்சங்களைக் கடைப் பிடிக்கிற பெரிய கட்சி, வலுவான கட்சி நமக்குத் தேவை

மாநாட்டு தலைமைக் குழு தோழர்களே!பிரதிநிதி தோழர்களே! பார்வையாளர்களே! 

இரண்டு நாட்களாக மாநாட்டில் வைக்கப் பட்ட நகல் அறிக்கையின் மீது விவாதம் நடத்தி இருக்கிறீர்கள் அதன் பின்பு அறிக்கை அவையால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. அதை நடை முறையில் அமலாக்க வேண்டும். இந்தத் தருணத்தில் நான் சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நூற்று முப்பது கோடி மக்களின் மூளை வேலை செய்ய ஆரம்பித்தால், நாங்கள் பாசிச ஆட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னால், இந்த ஆட்சி முடிவுக்கு வரும்

தோழர்களே!

நாம் பதினோராவது கட்சிக் காங்கிரசை நோக்கிய தயாரிப்பில் இருக்கும்போது தமிழ் நாட்டில் 11ஆவது மாநில மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். 11வது கட்சி காங்கிரஸ் வரும் பிப்ரவரியில் பாட்னாவில் நடக்க விருக்கிறது.

துன்புறுத்திய பார்ப்பனீயத்தை தூக்கிச்சுமப்பவர்கள்

சூழ்ச்சிமிக்க, கொடூரமான, மாந்தநேயமற்ற அமைப்பான சாதி பல்வேறு இடங்களில் பல்வேறு வழிகளில் பரிணமிக்கிறது. அண்டாமை, தீண்டாமை, காணாமை என்பவை நாடெங்கும் நடக்கும் எல்லோரும் அறிந்த இழி நடவடிக்கைகள். தாழ்த்தப் பட்ட மக்களை அருகே வராதே, நெருங்காதே, உன் நிழல்கூட எங்கள்மீது பட்டுவிடக்கூடாது என்று ஒதுக்கிவைக்கிறார்கள் ஆதிக்கச்சாதியினர். “எதிரே வராதே, எங்கள் தெருவுக்குள் நுழையாதே" என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து காலுக்குள் போட்டு மிதிக்கின்றனர். "நாங்களும் உங்களைத் தொட முடியாது, நீங்களும் எங்களை அணுகக்கூடாது” என்று தீண்டாமையை வாழ்க்கை முறையாக்கி வைத்திருக்கின்றனர்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இ ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தையும் அதன் உயிர்ப்பையும் கேலிக்கூத்தாக்குகிறது

முற்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தோடு மோடி அரசாங்கம் கொண்டு வந்த 10% ஒதுக்கீட்டை சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வில் பொதிந்துள்ள குறிக்கோளையும் நோக்கத்தையும் தெள்ளத் தெளிவாக மீறியுள்ளது. இந்த தீர்ப்பானது உரிமை பறிக்கப்பட்ட பிரிவினருக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியை மேலும் இறுக்கிட மட்டுமே செய்துள்ளது. இதைதான் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவி னருக்கான தீர்ப்பில், தலைமை நீதிபதி யு.யு.

மோடியும் மோர்பியும்

குஜராத் மாடல், குஜராத் மாதிரி' என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் பாஜக-சங்கிகளின் முகங்கள் எல்லாம் தொங்கிப் போய் காட்சி தருகின்றன மோர்பி நகரின் மச்சூ ஆற்றின் தொங்குபாலம் அறுந்து விழுந்து 142 பேர் ஆற்றில் மாண்டு போனதால். அப்போதும்கூட இது எதிர்க்கட்சியினர் சதி என்று கூறி சங்கிகள் திசை திருப்பி வருகிறார்கள் சமூக வலைத்தளங்களில்.

ஸ்டெர்லைட்டை எதிர்த்த மக்களைக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக மத்திய புலனாய்வு விசாரணை முதலில் போடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பதவியில் இருக்கும் நீதிபதி ஒருவரால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால், அப்போதைய எடப்பாடி அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தில் பல்வேறு தரப்பினர்கள் சாட்சியம் அளித்துள்ளார்கள்.