விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் தொல். திருமாவளவன் உரை...

மிகவும் பிற்போக்குத்தனமான காவிப் பாசிசத்தை எதிர்த்து விவசாயிகளை அணி திரட்டும் நோக்கோடு டெல்டா மாவட்டத்தில் நடத்தப்படும் இந்த மாநாடு சிறப்பு வாய்ந்தது. மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை முறியடிக்க போராட்டக் களத்தில் விவசாயிகள் எப்படி முன் நின்றார்களோ அதுபோல காவிப் பாசிசத்தை முறியடிக்கவும் விவசாயிகள் முன்னிற்க வேண்டும். பாசிசம் ஒரு சித்தாந்தமாக ஜனநாயகத்திற்கு எதிரானது. பாசிசத்தில் கருத்துரிமை பறிக்கப்படுவது மாத்திரமல்ல, அங்கே சமூக நீதிக்கும் இடம் இருக்காது.

பொய், பயங்கரவாத அச்சுறுத்தல், மக்களைப் பிளவுபடுத்துதல், ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக உண்மை, நல்லிணக்கம், துணிவை உயர்த்திப் பிடித்து மதவாத, கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்கொள்வோம்!

இன்று நாடு ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருக்கும் போது தஞ்சாவூரில் நாம் கூடியிருக்கி றோம். மதவாத பாசிசம் என்பது ஒரு சிந்தனைப் போக்காக ஒரு சித்தாந்தமாக மாத்திரம் இப்போது இல்லை, அது இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் எதார்த்தமாக இன்றைக்கு நிலவுகிறது. மதவாத பாசிசம் ஆட்சி அதிகாரத்தை பிடித்திருப்பதன் மூலம் அது இந்தியாவை சீர்குலைக்கப் பார்க்கிறது. இந்திய வகை பாசிசம், அதனுடைய தன்மைகள், வளர்ச்சி, அதை எப்படி எதிர் கொள் வது? எதிர்த்து எப்படி போராடுவது? என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

இந்திய விடுதலைப் போரின் தியாக மரபை மழுங்கடிக்கும் முயற்சியை முறியடிப்போம்!

இந்திய விடுதலைப் போரின் 75ஆம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று ஒன்றிய அரசு இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. அதற்காக சில அரசாணைகளை வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 13,14,15 தேதிகளில் நாடெங்கிலும் எல்லார் வீட்டிலும் தேசியக் கொடியை பகலும் இரவும் பறக்க விடலாம் என்று கூறியுள்ளது. அதற்காக மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணி வரை தேசியக் கொடியை பறக்கவிடக்கூடாது என்கிற விதியைத் தளர்த்தியுள்ளது. மேலும் கதர் துணிக் கொடிதான் கட்ட வேண்டும் என்பதல்ல, பாலிஸ்டர் துணியில்கூட தேசியக் கொடியை பறக்க விடலாம் என்று கூறியுள்ளது.