நவம்பர் தேர்தல் முடிவுகள்: சுட்டிக்காட்டும் குறிப்புகளும் சவால்களும்

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறுபட்ட இரண்டு எதிரெதிர்  காட்சிகளை வெளிப்படுத்துகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான கடும் வெறுப்பு இயக்கத்தின் மீது சவாரி செய்து ஜார்க்கண்டை வெற்றி கொள்ளலாம் என்ற பாஜகவின் தீவிரமான முயற்சி மாபெரும் தோல்வியைத் தழுவியது. ஆனால் மகாராஷ்டிராவில் அந்தக் கட்சி மக்களவை தேர்தல்களில் பெற்ற தோல்வியை வெற்றியாக மாற்றுவதை ஒருவாறு சாதித்து விட்டது. மேலும் அது பெற்ற வெற்றியின் அளவு எந்த ஒரு எளிய விளக்கங்களையும் மீறுகிறது.

அனைவருக்கும் வாக்குரிமை சட்டகத்தைப் பாதுகாப்போம்

இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட 74வது ஆண்டு விழா 25 ஜனவரி 2024 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாள் தேசிய வாக்காளர் நாளாக தற்போது கொண்டாடப்படுகிறது. இந்தியா போன்ற ஒரு பரந்த, பன்முகம் கொண்ட ஒரு நாட்டில், தேர்தல் நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்ட ஒரு அரசிய லமைப்புச் சட்ட நிறுவனம் என்ற முறையில், அதன் முக்கியத்துவத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. தேர்தல் முறையின் மீதான மதிப்பு என்பது தேர்தல் ஆணையத்தின் மீதான மதிப்பைச் சார்ந்தது. ஆனால், இந்த விசயத்தில் தேர்தல் ஆணையம் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்திக்கின்றது.

பெண்கள் மீது பிஜேபி தொடுக்கும் போர்

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிக்கும் 20 வயது மாணவியை மூன்று பேர் சேர்ந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கூட்டுப் பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்கிற செய்தி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான், 2023ம் ஆண்டின் கடைசி நாளில்தான் வெளியே தெரிந்தது. இறுதியாக அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் பிஜேபி ஐடி செல்லைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பிஜேபி வாரணாசி ஐடி செல்லின் அமைப்பாளர். மற்றொருவர் துணை அமைப்பாளர்.

அயோத்தி: ராமரின் பெயரிலான கோவில் ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை முன்கொண்டு செல்வதற்கான மோடியின் நினைவுச் சின்னமாக மாறியது

முப்பதாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி கிடைத்தது. வரலாற்று சிறப்பு வாய்ந்த பாபர் மசூதி சங்கிப் படையினரால் பட்டப்பகலில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் வன்முறை மிக்க இந்தச் செயலும் அதன் விளைவாக நூற்றுக் கணக்கான உயிர்கள் பலியான பின்பும் பல இந்தியர் களும் இதனை மசூதிக்கு எதிராக கோயில் பிரச்சினை என்ற கோணத்திலேயே தொடர்ந்து காண்கின்றனர். அண்மைக்காலம் வரை மசூதி இடிப்பை ஒரு குற்ற நடவடிக்கையாகவே உச்ச நீதிமன்றம் கூறியது. சட்டத்தின் ஆட்சியை அருவருக்கத்தக்க வகையில் மீறிய செயலாகும் எனவும் கூறியது.

ஜனவரி 22 க்கு எதிராக ஜனவரி 26: இந்திய குடியரசின் எதிர்காலத்திற்கான போராட்டம்

ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோயில் தொடக்கவிழா அல்லது குடமுழுக்கை முன்னிட்டு, இந்தியா முழுவதும் உள்ள பாஜக அரசாங்கங்களும் முதன்மை ஊடகங்களும் குறிப்பாக, இந்தி நாளேடு களும் தொலைகாட்சி அலைவரிசைகளும் விளம் பரங்களின் மின்னல் வேகத்தாக்குதலை மெய் யாகவே கட்டவிழ்த்து விட்டுள்ளன. நாடுதழுவிய ஒரு பேராரவாரத்தை உருவாக்கும் நோக்கில் சங்கிப் படையணியும் கூட, பரந்த மக்களை சென்றடைவ தற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது நினைவு நாளில் நாடாளுமன்றத்தில் புகைப்புட்டிகள்

டிசம்பர் 13, 2001 அன்று இந்திய நாடாளு மன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்கு தலின் இருபத்திரண்டாவது நினைவு நாளில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் அதிர்ச்சி தரும் புகை பீதிக்கு சாட்சியமாகியது. சாகர் சர்மா என அடையாளம் காணப்பட்ட லக்னோ இளைஞர் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து திடீரென குதித்து, மேஜைகள் மீது தாவிச்சென்று மஞ்சள் புகையை வெளியேற்றும் புட்டியைத் திறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை பிடித்து காவலர்களிடம் ஒப்படைக்கும் முன்பு, ஜீரோ நேரம் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் இதனைத் செய்தார். சாகருடன் மைசூரின் மனோரஞ்சன் என்ற கூட்டாளியும் இருந்தார்.

தோழர் வினோத் மிஸ்ரா, சற்றும் சளைக்காத மக்கள் ஜனநாயகப் போராளி!

இவ்வாண்டு தோழர் வினோத் மிஸ்ரா மறைந்த 25வது ஆண்டு நினைவுநாளை அனுசரிக்கிறோம். நக்சல்பாரிக்குப் பிந்தைய கட்டத் தில், சிபிஐஎம்எல் கட்சியை மறுசீரமைத்திட, விரிவாக்கிட, பலப் படுத்திட அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை நாம் நினைவுகூருகிறபோது, என்றென்றும் உத்வேகமூட்டும் அவரது புரட்சிகர மரபுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறபோது, இந்திய அரசமைப்புச் சட்ட ஜனநாயகத்தின் மீதான பாசிசத் தாக்குதலை முறியடிக்க வேண்டிய மைய சவாலின் பின்னணியில், அவரது உள்ளார்ந்த, மையமான கருத்துக்களையும் பங்களிப்புகளையும் குறித்த ஒரு மறுபார்வை என்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

மோடி ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்படும் தங்கு தடையற்ற அவசரநிலையை எதிர்ப்போம்

திரிபுராவில் குறுகிய வெற்றியில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்ட மோடி அரசாங்கம், இந்தப் பாசிச ஆட்சியின் அடையாளமாக மாறியுள்ள தெரு அதிகாரம், பரப்புரை, அரசு அதிகாரம் ஆகியவற்றின் கொடிய சேர்க்கையை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முழுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இகக(மாலெ)யின் 11வது காங்கிரஸ்: சவால் மிக்க பாதையில் ஒரு உத்வேகமூட்டும் பயணம்!

கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியத்தில், கட்சிக் காங்கிரஸ், குறிப்பிட்ட அந்த சூழலில்  மேற்கொள்ளவிருக்கும் வழியை வகுத்தளிக்கும் மிக உயர்ந்த அமைப்பாகும். இந்தியாவில் தற்போதுள்ள சூழலானது, சுதந்திரத்துக்குப் பிந்தைய நாட்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்தவற்றிலேயே மிகவும் சவால் மிக்க சூழலாகும். இத்தகைய பின்புலத்தில், இகக(மாலெ)வின் 11வது காங்கிரஸ், கட்சியின் உள்ளார்ந்த வலுவையும் விரிவடைந்து வரும் அமைப்பையும் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராகவும் சங்கப் படைக்கு எதிராகவும் மக்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்துவதற்கான வளர்ந்து வரும் முன்முயற்சி, தலையீட்டை இயங்காற்றல் மிக்க வகையில் நிகழ்த்திக் காட்டியதெனலாம்.