இகக(மாலெ) ஜார்க்கண்ட் மாநில 6 வது மாநாடு

2021 அக்டோபர் 2-4 தேதிகளில் இகக(மாலெ) ஜார்க்கண்ட் மாநில 6வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் உரையாற்றினார். துவக்க மாநாட்டில் 311 பிரதிநிதி தோழர்களுடன் தலைமை விருந்தினராக அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ராஜாராம் சிங், மத்திய பார்வையாளர் தோழர் அமர், அதுபோல் மார்க்சிய ஒருங்கிணைப்புக் குழு (எம்சிசி)வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அருப் சாட்டர்ஜி, இகக, இகக(மா) தலைவர்கள் மற்றும் பழங்குடியினர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தயா மணி பர்லா மற்றும் பிரேம் சந்திர முர்மு ஆகியோரும் கலந்து கொண்டனர். எழுத்தாளர் தோழர் கோலேஸ்வர் கோப் செங்கொடியை ஏற்றி வைத்தார். ஜார்க்கண்ட் சன்ஸ்கிருதி மஞ்ச்  கலைக்குழு தோழர்கள் பாடல்கள் பாடினர்.

மாநாடு தோழர் மனோஜ் அவர்களை மாநில செயலாளராக தேர்ந்தெ டுத்தது. 5 மத்திய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் 19 புதுமுகங் களுடன் 53 பேர் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில கமிட்டியில் 50% பேர் மாணவர்-இளைஞர், திட்டத் தொழிலாளர்கள், வன உரிமை போன்ற பல்வேறு அமைப்புகளில் செயல்படும் இளம் செயல் வீரர்களாவர்.

இகக(மாலெ) உத்தரப்பிரதேச மாநில 13வது மாநாடு

2021 அக்டோபர் 4, 5 தேதிகளில் உத்தரப்பிரதேச மாநில 13வது மாநாடு சிட்டாபூரிலுள்ள ஹர்கானில் நடைபெற்றது. துவக்க நிகழ்வு லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைக்கு எதிரான ஒன்றுபட்ட உண்ணாவிரத போராட்ட அமர்வாக அமைந்தது. அந்த அமர்வில் படுகொலைக்குப் பிறகு முதன் முதலில் லக்கிம்பூர் கேரிக்கு  சென்ற இகக(மாலெ) குழுவின் அறிக்கையை தோழர் ஓம்பிரகாஷ் சிங் முன்வைத்தார். தோழர் கிருஷ்ணா அதிகாரி தலைமையிலான குழு துக்கத்தில் இருந்த விவசாயிகளை, காயமடைந்தவர்களை, ஆத்திரத்தில் இருந்தவர்களை சந்தித்து ஒருமைப்பாடு தெரிவித்து உதவிகளும் செய்தது. மாநாட்டை பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் துவக்கி வைத்து உரையாற்றினார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் திரேந்திர ஜா உத்திரப் பிரதேச மாநிலக் கமிட்டியின் அப்ரோஸ் ஆலம், குசம் வர்மா, ஜெய்பிரகாஷ் நாராயணன் ஆகியோரும் உரையாற்றினர்.

மாநாடு 73 பேர் கொண்ட மாநில கமிட்டியை தேர்வு செய்ததோடு தோழர் சுதாகரை மீண்டும் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுத்தது. மாநாடுவிவசாயிகள், தொழிலாளர்கள், ஊழியர்கள், துயரத்தை அனுபவித்து வரும் மக்களுக்காக போராடவும், மதவாத, ஊழல், கொடூர யோகி அரசை வீழ்த்தவும் உறுதி ஏற்றுக் கொண்டது.