தோழர் என்.கே.நடராஜன் அவர்களுக்கு புகழஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மறைந்த மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் அவர்களுக்கு புகழஞ்சலிக் கூட்டம் கோவையில் 22.12.2022 அன்று மாலை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத் தோழர்கள் கொண்டு வந்திருந்த தோழர் என்.கே. நினைவுச் சுடரை, இகை(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கரிடமும் என்.கே.யின் குடும்பத்தினரிடமும் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து தோழர் என்.கே.நடராஜன் அவர்களின் திருவுருவப் படத்தை தோழர் திபங்கர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கருத்தியல் கடப்பாடு, அரசியல் தெளிவு, அமைப்பு ஒற்றுமை மற்றும் பலம் ஆகிய மூன்று அம்சங்களைக் கடைப் பிடிக்கிற பெரிய கட்சி, வலுவான கட்சி நமக்குத் தேவை

மாநாட்டு தலைமைக் குழு தோழர்களே!பிரதிநிதி தோழர்களே! பார்வையாளர்களே! 

இரண்டு நாட்களாக மாநாட்டில் வைக்கப் பட்ட நகல் அறிக்கையின் மீது விவாதம் நடத்தி இருக்கிறீர்கள் அதன் பின்பு அறிக்கை அவையால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. அதை நடை முறையில் அமலாக்க வேண்டும். இந்தத் தருணத்தில் நான் சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.