முற்போக்குப் பெண்கள் கழகம் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம் சார்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பாக நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு தேசியக்குழு உறுப்பினர் தோழர் பிலோமினா தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் ஜைனப் முன்னிலை வகித்தார்அரவக்குறிச்சி, தாந்தோணி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களிலிருந்து 200 பேருக்கு மேல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மலர்வள்ளி நன்றியுரை ஆற்றினார். கட்சி மறுசீரமைப்பு இயக்கத்தின் துவக்கமாக, கிராமப்புறங்களில் நடத்திய ஆய்வு ஆர்ப்பாட்டத்திற்கும் அணிதிரட்டலுக்கும் அடிப்படையாக அமைந்தது. மக்கள் அதிகாரம் தோழர் இரா.சக்திவேல், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் மா.பால்ராஜ், இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் மு.இராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கரூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய டாக்டர் ரஜினிகாந்தை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தோழர்கள் பிலோமினா, ஜைனப், இராமச்சந்திரன் நேரில் சந்தித்து, அவர்களுக்கு நீதி கிடைத்திட இகக(மாலெ) மற்றும் அஇமுபெக போராடும் என உறுதி அளித்தார்கள்.