குமரியில் பெண் தோழரை காவல் நிலையத்தில் இழிவு படுத்தியதைக்  கண்டித்து ஆர்ப்பாட்டம்

09.12.2021 -அன்று இரவு ஒரு தோழரின் புகார் மனு மீது குமரிமாவட்டம் இரணியல் காவல்நிலையம் சென்ற கன்னியாகுமரி மாவட்ட சிபிஐஎம்எல் கட்சி நிலைக்குழு உறுப்பினரும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக கன்னியாகுமரி மாவட்ட தலைவருமான தோழர் கார்மல் லூர்துபாயை, புறம்போக்கை ஆக்கிரமித்து ஆக்கர்கடை வைத்திருக்கும் போலீஸ் புரோக்கர் "ஆக்கர் அய்யப்பன்" இரணியல் காவல் ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் இதர காவலர்கள் முன்னிலையில் நாகூசும் வார்த்தைகளால் திட்டியுள்ளார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் தலைவரை அவமானப்படுத்தியது மட்டுமின்றி காவல் நிலையத்தில் குற்றவாளி பாதுகாக்கப் படுகிறான் தோழர் கார்மலை பாலியல் ரீதியாக வார்த்தைகள் பேசி அவமானப்படுத்திய ஆக்கர் அய்யப்பன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு குற்றவாளிக்கு ஆதரவாக நடந்துகொண்ட இரணியல் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  13.12.2021 மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன், மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைத்தலைவர் தோழர் முஜீப் மற்றும் சிபிஐ(எம்எல்) சிவப்பு நட்சத்திரம் கட்சியின் மாவட்டச் செயலாளர்  தோழர் மணவை கண்ணன் ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் ஐயப்பன் கண்டன உரை ஆற்றினார்கள் சிபிஐ(எம்எல்) மாவட்ட குழு தோழர்கள் சுசீலா, கணபதி, ஜெகன், அர்ஜூனன், அனிற்றா பிரின்சி, தேவரவி, எஸ்டின், ரவி, அன்பரசு, சுதன், வேலாயுதபெருமாள், சுமன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். புறம்போக்கை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.