முட்டுக்கொடுக்கும் மூன்றாம் தூண்கள்

ஜனநாயகத்தின் மூன்று முக்கியத் தூண்கள் சட்டமியற்றும் துறை, நிர்வாகத்துறை, நீதித் துறை. நான்காவது தூண் ஒன்றும் இருக்கிறது. அது பத்திரிகை மற்றும் ஊடகம். இந்த நான்கும் ஒன்றை இன்னொன்று கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக தனித்து இயங்க வேண்டும். இல்லையென்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. நான்கு தூண்களில் மூன்றாவது தூணான நீதித்துறையை மட்டும்தான் எளிய மக்களில் இருந்து எல்லாரும் தங்கள் பிரச்சனை களின் தீர்வுக்கான கடைசிப் புகலிடமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

தலையங்கம்

எட்டு வழிச்சாலைக் கொண்டு வரவிடமாட்டோம் என்று சொல்லி வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசின் அமைச்சர் எ.வ.வேலு, எல்லார் வீட்டிலும் கார் இருக்கிறது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் கார் வைத்துள்ளார்கள், வாகனத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சாலைகள் விரிவுபடுத்தத்தான் வேண்டும், அதைச் செய்யும் போது நிலம் இல்லாதவர்கள் கூட பச்சைத் துண்டை தோளில் போட்டுக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்று கூறுகிறார். அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஒரு கார் அல்ல மூன்று கார்கள் கூட வைத்திருக்கலாம்.

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு:

கனியாமூர் மாணவி மர்ம மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் அந்த மாணவியின் மரணத்துக்கு இணையான பேரதிர்ச்சியை தருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ள்ளவர்களின் பிணை மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் நீதிமன்ற நடைமுறை மரபுகளையே சிதைப்பதாக உள்ளது. கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அய்வரும் பொய்யான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்! இந்த மரணத்தில் கொலையோ, பாலியல் வன்முறையோ நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் தியாகிகளுக்கு வீரவணக்கம்! மோடியை வெளியேற்ற உறுதியேற்போம்!

1942 ஆகஸ்ட் 9ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் அழைப்பு வெளியான வுடன், ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத் தின் ஒரு பகுதியான தேவகோட்டை, (இப்போது சிவகங்கை) திருவாடானை, திருவேகம்பத்தூர் ஆகிய இடங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டங்களைக் கையிலெ டுத்தனர். ஆகஸ்ட் 14ல் இருந்து 17வரை இப்பகுதி களில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டங்களில் தேவகோட்டை மீது நீதிமன்றம் கொளுத்தப்பட்டது. அதன் பின் பிரிட்டிஷ் ராணுவம் போராளிகள் துப்பாக்கியால் சுட்டதில் 75 பேர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

இந்திய விடுதலைப் போரில் கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர்களும் தமிழ்நாடும்

இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையடைந்த 75 ஆம் ஆண்டில், அதை அனனவரும் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்த ஆட்சியாளர்கள் யார் என்றால், விடுதலைக்காகப் போராடியவர்களை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தவர்களின் வாரிசுகள். ஆங்கிலேயர் களிடம் தங்களுக்குச் சேவை செய்யக் கடன்பட்டுள்ளேன், என்னை சிறையில் இருந்து விடுவித்திடுங்கள் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கரின் வாரிசுகள். நாட்டு விடுதலைப் போரின் போது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக, இந்திய நாட்டை மதரீதியாகத் துண்டாடத் துடித்த கோல்வார்க்கரின் வாரிசுகள் சனாதன இந்துமத வெறி கோட்சே வாரிசுகள்.

கனியாமூர் சொல்லும் செய்தி: கல்விக்கும் விடுதலை வேண்டும்

ஜூலை 13, தமிழ்நாட்டிற்கு மற்றுமொரு துயரமான நாள். சின்ன சேலத்துக்கு அருகிலுள்ள கனியாமூரிலுள்ள சக்தி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இது தற்கொலையென்று பள்ளி நிர்வாகம் சாதிக்கிறது. பொது சமூகம் இது ஒரு பச்சைப் படுகொலை என்று நம்புகிறது. பள்ளி நிர்வாகம் சொல்வது உண்மையா? பொது சமூகம் நம்புவது உண்மையா? எது உண்மை என்பதை அரசின் காவல் துறையும் நீதிமன்றமும் நிரூபித்தாக வேண்டும். தனியார் மேட்டுக்குடி கல்வி நிறுவனங்கள் குற்ற நிறுவனங்களாக மாறிவருகின்றன. சென்ற ஆண்டு மே மாதம் முதல் பல தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடந்துள்ள கொடூர குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

சாரு மஜும்தாரும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிக்க மரபும்

கொல்கத்தாவின் லால்பஜார் போலீஸ் லாக் அப்பில் தோழர் சாரு மஜூம்தார் இறந்து 50 ஆண்டுகளாகி விட்டன. நக்சல்பாரியைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவிய புரட்சி அலைக்கு அவரது மரணம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அந்த சமயத்தில் இந்திய அரசு எதிர்பார்த்து பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்க வேண்டும். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி ஆட்சிக்கு எதிரான ஒவ்வொரு எதிர்ப்புக் குரலையும் ஒடுக்கும்போதும், 'நகர்ப்புற நக்சல்' என்று சொல்ல வேண்டியதாகி விட்டது.