சாதியாதிக்க எதிர்ப்பு மாநாடு
25.12.2021 அன்று கீழ் வெண்மணி நாளில் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தில் இகக (மாலெ), அயர்லா, நீதிக்கான மக்கள் இயக்கம் சார்பாக சாதி ஆதிக்க எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அன்று காலை 10.30 மணிய ளவில் கபிஸ்தலம் ஆற்றுப் பாலத்தில் இருந்து சிபிஐஎம்எல் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் கண்ணையன் தலைமையில் ஊர்வலம் துவங்கி, கபிஸ்தலம் கிருஷ்ணா மஹால் வந்த டைந்தது. அதன் பின்னர் மாநாடு துவங்கியது. முதலில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. தோழர் கண்ணையன் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். சிவகங்கை, புதுக் கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங் களில் இருந்து பெண்களும் ஆண்களும் பங்கேற் றனர். மாநாடு இரண்டு அமர்வாக நடத்தப் பட்டது. அமர்வுகளின் இடையே புரட்சிகரப் பாடல்கள் பாடப்பட்டன. நீதிக்கான மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சிம்சன் துவக்க உரையாற்றினார். அடுத்தடுத்து முனைவர் அரசு முருகு பாண்டியன், பேராசிரி யர்கள் உ.பிரபா கரன், கோச்சடை ஆகியோர் உரையாற்றினர். இம்மாநாடு திருவைக்காவூரில் நடந்த தலித் ஒடுக்குமுறை மற்றும் கபிஸ்தல காவல்துறை சார் ஆய்வாளரின் தலித் விரோதப் போக்கின் பின்புலத்தில் நடத்தப்பட்டதை பேராசிரியர்கள் சுட்டிக் காட்டியது மட்டு மல்லாமல் அம்பேத்கரி யர்களும், கம்யூனிஸ்டு களும் இணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே இப்படிப்பட்ட சாதி ஆதிக்க சக்திகளின் தலித் விரோத நடவடிக்கைகளை வேரறருக்க முடியும் என சுட்டிக் காட்டினர். மதிய உணவிற்குப்பின் இரண்டாவது அமர்வில் அயர்லாவின் பொதுச் செயலாளர் தோழர் குணசேகரன், இகக(மாலெ) மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் ஆசைத் தம்பி ஆகியோர் உரை நிகழ்த்தினர். சாதி ஆதிக்கங்களின் வன்மங்களை உடைத்தெறிய அமைப்பாக வேண்டிய அவசியம் உள்ளது. அயர்லா அமைப்பின் மூலம் தொடர்ந்து இப்படிப்பட்ட சாதி ஆதிக்க மேலாதிக்கத்தை தகற்பதற்கு நாம் உறுதி ஏற்க வேண்டும் என பேசினர். இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே நடராஜன், கிராமங்களில் நமது கட்சி செல்வாக்கு பெற்று வருகிறது என்றும் 1968 டிசம்பர் 25 கீழ்வெண்மணியில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்து, அன்றிலிருந்து இன்றுவரை நமது கட்சி சமரசமற்ற போராட்டத்தை சாதி ஆதிக்க வாதிகளுக்கு எதிராக நடத்தி வருகிறது. ஆதிக்க சாதிகளின் ஒடுக்கு முறை நடைபெறாமல் தடுத்து நிறுத்த நாம் அமைப்பு ரீதியாக பலம் பெற வேண்டும் என்றும் சாதி ஆதிக்க எதிர்ப்பு என்பது வர்க்கப் போராட்டத்தில் இருந்து ஆரம்பமாகிறது என்றும் கூறினார். இறுதியாக இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், கீழ்வெண்மணியில் உயிர்நீத்தவர்கள் இன்று இங்கு மீண்டெழுந்து வந்திருக்கிறார்கள். சாதி ஆதிக்க எதிர்ப்புப் போரில் நாம், நமது கட்சி பல்வேறு தோழர்களை இழந்திருக்கிறோம். தோழர்கள் சந்திரகுமார், சந்திரசேகர் மற்றும் மாடக் கோட்டை சுப்பு போன்ற இன்னும் பலர். இவர்களின் இழப்பும், தியாகமும் வீண் போகாது. அது மீண்டும் மீண்டும் எழுந்து வரும். திருவைக்காவூர் பின்புலத்தில் இம்மாநாடு நடந்தேறினாலும், இப்படிப்பட்ட தலித் ஒடுக்கு முறை நாடெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. பீகாரில் வாக்களிக்க முடியாமல் இருந்த தலித் மக்களை துப்பாக்கி துணை கொண்டு பாதுகாத்து வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்குரிமையை பெற்றுத் தந்தது மாலெ கட்சி. இது மட்டுமல்ல தலித் மக்களின் கோவில் நுழைவு உரிமை, நில உரிமை போன்ற பல்வேறு சுயமரியாதை மற்றும் வாழ்வுரிமைக்கான போராட்டங்களிலும் நமது கட்சி தொடர்ந்து போராடி வந்துள்ளது. வெண்மணி தியாகிகளின் நினைவால் சபதமேற்போம். சாதி ஆதிக்கங்களால் இழப்புகள் நடைபெறுவதற்கு முற்றுப் புள்ளி வைப்போம். தியாகிகளின் நினைவால் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க சபதமேற்போம் எனக் கூறினார்.
இப்பகுதியில் இம் மாநாடு சாதி ஆதிக்க வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையை உருவாக்குவதுடன் பிற ஜனநாயக சக்திகள், வணிகர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய திசைவழியை உருவாக்கியுள்ளது. மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் அனை வரும் தேவையான -அவசியமான மாநாட்டை குறிப்பிட்ட நேரத்தில் நடத்தியது பற்றி மகிழ்வுற்றனர். ஊர்வலத்திலும் மாநாட்டிலும் முன்வைக்கப்பட்ட முழக்கங்கள் அனைவ ரையும் கருத்து ரீதியாக ஈர்த்தது. மாநாட்டில் திருவைகாவூர் சம்பவத்தில் புனையப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும். கபிஸ்தல காவல் சார் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். திருக்கோவிலூர் இருளர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விரைந்து நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சுவாதி கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். ராம்குமார் மரணத் தின் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். திருவைக்கா வூரில் டீ கடை, சலூன் கடைகளில் கடைபிடிக்கப் படும் தீண்டாமை தடுக்கப்பட வேண்டும். தஞ்சாவூரில் கிட்டத்தட்ட 193 ஏக்கர் நிலங்களை போலி ஆவணம் மூலம் ஆக்கிரமித்துள்ள நபரிடமிருந்து நிலங்களை மீட்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், திருப்பனந் தாள் ஆணவப் படுகொலைக்கு ஆளாக்கப் பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஆசைத்தம்பி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)