தஞ்சையில் இகக(மாலெ) மறியல் போர்

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்து வசதியில்லாமல் சிரமப்படுகின்றனர். அந்தப் பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சிபிஐஎம்எல் கட்சியின் சார்பாக கணபதி அக்ரஹாரத்தில் மறியல் போராட்டம் 18.12.2021 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பாபநாசம் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இரண்டு வழிதடங்களில் பேருந்து விடவேண்டுமென்று போராட்டக்குழு வைத்த கோரிக்கையை ஏற்று ஒரு வழிதடத்தில் அன்றைய நாளில் இருந்தே இயக்குவதாகவும் மற்றொன்றை ஒருமாதகாலத்திற்க்குள் இயக்குவதாகவும் உறுதியளித்தனர்பேச்சுவார்த்தையில் சிபிஐஎம்எல் கட்சியின் மாவட்டச் செயலாளர் கண்ணையன் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் முன்னணியினர் கலந்துகொண்டனர்.