மணப்பாறையில் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா சமுத்திரம் ஊராட்சியில் வீடு, வீட்டு மனைபட்டா, குடிநீர் வசதி, பொதுக் கழிப்பறை வசதி  ஏற்படுத்திடவும் 100 நாள் வேலையில் முறையான சம்பளம் வழங்க வேண்டியும் மனு கொடுக்கும் போராட்டம் சமுத்திரம் இகக(மாலெ) கிளைச் செயலாளர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சக்திவேல், வழக்கறிஞர் ராஜ்குமார், மணப்பாறை நகரச் செயலாளர் பாலு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டப் பொறுப்பாளர் தோழர் அந்தோணியம்மாள், தோழர் தங்கராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமுத்திரம் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இகக(மாலெ) திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் தேசிகன் கலந்துகொண்டு ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது