வங்கி தனியார்மயம் ஒரு பேரழிவு மிக்க எண்ணம்உடனே நிறுத்து!

 

கார்ப்பரேட் சார்பு வேளாண் சட்டங்களிலிருந்து பின் வாங்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட போதும்கூட மோடி அரசாங்கம் இன்னொரு கேந்திர துறையான வங்கியில் தேசியமயமாக்கலை பின்நோக்கிச் செலுத்த மூர்க்கத்தனமாக அழுத்தம் கொடுத்து முயற்சிக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க வங்கி தேசியமயமாக்கல் நடந்து ஐந்து தசாப்தங்களுக்கு பிறகு அரசாங்கம் இப்போது பொதுத்துறை  வங்கிகளில் அரசாங்க பங்கை குறைந்தபட்ச அளவான 50 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக குறைக்க அவசரகதியில் முயற்சிப்பதோடு சில பொதுத்துறை வங்கிகளை ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்கவும் நடவடிக்கை எடுக்கிறது. பொதுமக்கள் பார்வையில் தனியார் வங்கிகள் என்றால் ஆபத்து என்ற எண்ணம் இருக்கும் போது பொதுத்துறை வங்கிகள் நிலையானவை நம்பத் தகுந்தவை என்று பெயர் பெற்றிருப்பதை அரசாங்கம் அறிந்தே வைத்திருக்கிறது. அதனால்தான், "வைப்பீடு செய்பவர்களே முதன்மையானவர்கள்" என்ற வாய்ச்சவடால் முழக்கத்தை அரசாங்கம் தனியார்மயமாக்கலுக்கு போவதற்கு முன்பு முன்வைக்கிறது. ஒருவேளை வங்கி வீழ்ச்சி அடைந்தால் 90 நாட்களுக்குள் வைப்புநிதி வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் (கடைசியாக 1993 இல் தான் ரூபாய் ஒரு லட்சம் என்று உயர்த்தப்பட்டது) திரும்ப தரப்படும் என்ற உறுதிமொழியை அளிக்கிறது.

இந்திய வங்கிகளில் மொத்த வைப்பு நிதியின் அளவு வங்கி தேசியமயமாக்கப்பட்ட கடந்த 50 ஆண்டுகளில் சீராக வளர்ந்து வந்துள்ளது. பின்னர் சமீப காலங்களில் படு வேகமாக அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2011 இல் 50 ட்ரில்லியனாக இருந்த வைப்புநிதி செப்டம்பர் 2016 இல் 100 ட்ரில்லியன் ஆக உயர்ந்து 2021 மார்ச் முடிவில் 150 ட்ரில்லியன் ரூபாய்களை தாண்டி இருப்பதன் மூலம் கடந்த பத்தாண்டு காலத்தில் வைப்புநிதி மூன்று மடங்கு வளர்ந்துவிட்டது. தனியார் வங்கிகளை ஊக்குவிப்பது அதிகரித்து வந்த போதிலும் இப்போதும்கூட இந்திய பொதுத்துறை வங்கிகளின் மொத்த வைப்பு நிதி  2/3 பங்காக உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை  கருப்புப் பண விசயத்தில் அற்பசொற்ப தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், அது நிச்சயமாக அதிகமான மக்களை வங்கியை நோக்கி தள்ளியிருக்கிறது. சமீபகாலங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாடு வளர்ந்து வந்துள்ளதும் கூட வங்கிகளின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது. வங்கி தனியார்மயம் என்பது பொதுமக்கள் சேமிப்பிலிருந்து உருவாக்கப்பட்ட மாபெரும் நிதி ஆதாரங்கள் மீது தனியார் கம்பெனிகள் தங்களது நேரடி கட்டுப்பாட்டை நிறுவ ஏற்பாடுகளை செய்து தருவதுதான்

வங்கித்தொழில் நெருக்கடிக்கான தீர்வாக தனியார்மயமாக்கத்தை முன் தள்ளுவது என முன் மொழியப்பட்டது. இந்த நெருக்கடிக்கு மிகப் பெரிய பங்களிப்புச் செய்யும் காரணியாக செயல் படா சொத்து என்று மென்மையான வார்த்தை களில் அழைக்கப்படும் ழிறிகி (ஸீஷீஸீ ஜீமீக்ஷீயீஷீக்ஷீனீவீஸீரீ ணீssமீt) இருந்து வருகிறது. வங்கி கடன்கள் எப்போதுமே திரும்பி வராத தொகை என்னும் குறிப்பிட்ட ஆபத்தை எதிர் கொள் கின்றன. ஆனால் அந்த உள்ளார்ந்த ஆபத்து, கடன் அளிக்கும் நெறிமுறைகள் கறாராக பின்பற்றப் படும் வரை, அரசு சார்பு முதலாளித்துவம் மற்றும் வர்த்தக அரசியல் கூட்டின் நிர்பந்தங்க ளுக்கு புத்திசாலித்தனமான வங்கியியல் நடவடிக்கைகள் விலையாக கொடுக்கப்படாத வரை, இப்போதுள்ள ழிறிகி நெருக்கடி போன்ற அந்த அளவு மட்டத்தை ஒருபோதும் எட்டியதில்லை. வங்கி விதி முறைகளை தாராள மயப்படுத்தியது குளறுபடிகளை மோசமாக்கியது என்றால், வேண்டு மென்றே கடனை  திருப்பி செலுத்தாதவர்களுக்கு தண்டனையிலிருந்து பாதுகாப்பு அளிப்பது என்பது அதை இன்னும் மிக மோசமான நிலைக்கு தள்ளிவிட்டது.

பிரச்சனையின் அளவை கீழே கொடுக்கப் பட்டுள்ள புள்ளிவிவரங்களில் இருந்து தெளிவாக தெரிந்து கொள்ளலாம். கடந்த 10 ஆண்டுகளில் ரூ 11,68,095 கோடி கிட்டத்தட்ட 11.7 ட்ரில்லியன் மதிப்புள்ள கெட்ட கடன்கள் (தீணீபீ றீஷீணீஸீs) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் 2014&15 மோடி ஆட்சி காலகட்டத்திலிருந்து மட்டும் ரூ. 10.72 ட்ரில்லியன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சொல்லவேண்டுமானால் தள்ளுபடி செய்யப்பட்ட கடனையும் கூட மீண்டும் இன்றளவும் வசூல் செய்ய முடியும். ஆனால், அதுபோன்ற வசூல் 15%ஐக் கூட தாண்டவில்லை. அதே நேரத்தில் அவ்வப்போது சில தள்ளுபடிகள் நடந்தாலும்  வாராக்கடன் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போயிற்று. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.12 மில்லியன் மதிப்புள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் வாராக்கடன் தொடர்ந்து ரூ.6 டிரில்லி யனை சுற்றியே தொடர்கிறது.

வங்கிகள் தேசியமயத்தைத் தொடர்ந்து முன்னுரிமை கடன்களுக்குவிவசாய கடன், சிறு குறு தொழில்கள், வீடு, கல்வி, சமூக உட்கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எப்படி இருந்த போதும், மிகப்பெரும் என்பிஏ எனப்படும் வாராக்கடன் வேறு இடத்தில், முதன்மையாக கார்ப்பரேட் துறையில் உருவாகியிருந்தது. தனியார்மயமாக்கப்பட்டால் முன்னுரிமை கடன் பாதிக்கப்படும். வங்கித்துறை தொடர்ந்து பங்குச்சந்தை மூலமும் மற்றும் இதர குறுகிய காலத்தில் லாபம் ஈட்டித் தரும் முதலீடுகள் நோக்கியும் தள்ளப்படும்.வங்கி சீர்திருத்தங்கள் அதோடு இணையான ஓய்வூதிய சீர்திருத்தங் களோடு சேர்ந்தே வருகிறது என்பதை கவனிக்க வேண்டும். அதன்படி ஓய்வூதியத் துறையில் வெளிநாட்டு முதலீடு என்பது 49% என்பதிலிருந்து 74% என்பதாக உயர்த்தப்படுகிறது ஓய்வூதிய நிதியும் கூட விரைவான லாபம் பெறுவதற்காக பங்குச்சந்தைக்கு திருப்பப்படுகிறது.இது இந்தியாவின் நிதித்துறையில் ஸ்திரமற்ற தன்மையை கொண்டு வருவதற்கான கச்சிதமான நடவடிக்கையாகும். இதுவரை உலக அளவில் நிதி நெருக்கடி நிகழ்ந்த போதெல்லாம் இந்தியா அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. இந்திய நிதித்துறையின் நிலைத்ததன்மையும் தாக்குப் பிடிக்கும் திறனும் இப்போது அதிகரித்த அளவிலான நெருக்கடிக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகிறது.

சாமானிய மக்கள் தங்களது சொந்த வைப்புத் தொகையின் பாதுகாப்பு பற்றி மட்டும் கவலை கொண்டிருக்கவில்லை, வங்கி முறையின் ஒட்டுமொத்த திசைவழி மற்றும் செயல்பாட்டு திறன் பற்றியும் அதே அளவு கவலை கொண்டிருக்கிறார்கள். வங்கியை சாமானிய மக்களிடம் எடுத்து செல்வேன் என்னும் மோடியின் வாய்ச்சவடால் ஒருபுறம் இருக்க, தங்களது சொந்தப் பணத்தை வங்கியில் வைப்ப தற்குக் கூட பயன்பாட்டு வரி கட்ட வேண்டி இருப்பதன் மூலம் வங்கிச் சேவை தொடர்ந்து (சாமானிய மக்களுக்கு) அதிகரித்த செலவினத்தை உண்டு பண்ணுவதாகவே அமைந்துவிட்டது. பெரும் தொழில் குழுமங்கள் வேண்டுமென்றே வாங்கிய கடனை திருப்பி செலுத்த மறுக்கும் போதும் அவர்கள் எப்படி தப்பித்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்டு வருகிறோம். அதேவேளை, விவசாயிகள், நுண் நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள், இதர சிறு கடனாளிகள், மாணவர்கள், வேலை தேடுபவர்கள், வர்த்தகர் கள் என சிறிய அளவில் கடன் பெற்றவர்கள்  உரிய நேரத்தில் தங்களது சிறிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் படுகிறார்கள் சிறிய கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு. வட்டி வீதங்கள் சரிந்து வருவதால் தங்களுடைய சேமிப்புக்கு நிலையான வட்டி கிடைக்கும் என வங்கியை சார்ந்திருந்த ஓய்வூதி யர்களுக்கும் மத்தியதர  உபயோகிப்பாளர்களுக் கும் இது கடுமையான காலகட்டமாக உள்ளது.

அரிதாக வங்கிகள் திவாலாகும் போது மட்டும் வைப்புநிதி வைத்திருப்பவர்களின் நலன் பாதிக்கப்படுவது என்பதில்லை. ஆனால், அதே அளவு வங்கிகள் சாமானிய மக்களுக்கு பாதுகாப்பற்றதாகவும் அதிக செலவு பிடிப்ப தாகவும் இருக்கும்போது பாதிப்பை ஏற்படுத்து கிறது. அதுபோல் கடுமையான உழைப்பின் காரணமாக வரும் பொது சேமிப்பிலிருந்து திரட்டப்பட்ட நிதி ஆதாரங்களை தனியார் லாபங்களைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தும்போதும் வங்கியில் வைப்பு நிதி வைத்திருப்பவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது. ஆகவே சாமானிய மக்கள் எல்லோரும் பேரழிவு மிக்க வங்கி தனியார்மய யோசனையை தடுத்து நிறுத்த வங்கி ஊழியர்களோடு இணைந்து கொள்ள வேண்டும். எப்படி விவசாயிகள் தங்களது சொந்த ஒன்றுபட்ட போராட்டத் தினாலும் மக்கள் ஆதரவினாலும் வெற்றி பெற்றார்களோ அதுபோல் இந்திய வங்கிகளையும் நிதித்துறையையும் பாதுகாக்க, தனியார் மயமாக் கலுக்கு எதிராக வங்கி ஊழியர் நடத்துகின்ற போராட்டக் களமும் பரந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற தகுதி உடையதாகும்.

எம்எல் அப்டேட் - தலையங்கம்

 7-13 டிசம் 2021

தமிழாக்கம் - தேசிகன்