ஏஐசிசிடியு மாநில பொதுக்குழு - பயிற்சிப் பட்டறை

தமிழக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை சட்டத்தை தமிழக தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் மூலம் முறியடித்த பின்னணியில் மே 7,8-2023 இரு நாட்கள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஏஐசிசிடியு மாநில பொதுக்குழு கூட்டமும் பயிற்சி பட்டறையும் நடைபெற்றது. நிகழ்ச்சியை தோழர்கள் இரணியப்பன், கோவை பாலசுப் பிரமணியன், கரூர் பால்ராஜ், சேலம் வேல் முருகன் ஆகியோர் கொண்ட குழு தலைமை தாங்கி நடத்தியது. நிகழ்ச்சியில் ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் வீ.சங்கர், இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஏஐசிசிடியு

கன்னியாகுமரி மாவட்டத்தின் ரப்பர் தோட்டங்களின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு முந்தையது. ஜான், ஜோசப் மர்பி என்ற ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 1902 ஆம் ஆண்டு அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு பகுதியாக இருந்த கேரளாவின் கோட்டய மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்ளை அறிமுகப்படுத்தி பயிரிட்டனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிர்கள் பயிரிடப்பட்டன. இத்தோட்டத்தில் சுமார் லட்சம் பேர் தொழிலாளர்களாகப்  பணியில் சேர்ந்தனர். இவர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் வேலை வாய்ப்பு பெற்றனர்.

2024 தேர்தலில் மோடி அரசைத் தோற்கடிப்போம்!

நவதாராளவாத கொள்கை அமுலாக்கத்தின் விளைவுகள் என்ன, தொழிலாளர் சட்டங்களை ஒழித்ததன் மூலம் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறது மோடி அரசாங்கம். தொழிலாளர் சங்கம் அழைக்கப்படாத தொழிலாளர் அமைச்சர்களின் திருப்பதி மாநாட்டில் நடந்தது அதுதான். தொழிலாளர் சீர்திருத்தங்கள் அமுலாக்கப்பட்ட மாநிலங்களில் தொழில்துறை வளர்ந்து இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறது. ஊதியம் அதிகரித்து இருக்கிறது என்றெல்லாம் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு, தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து தொகுப்புச் சட்டம் உருவாக்கியது சரிதான் என நிறுவப் பார்க்கிறது.

தொழிற் சங்கங்கள் தொழிலாளர் நலனை உயர்த்தி பிடித்து ஒன்றாக இணைந்து எதிர்த்துப் போராட வேண்டியது அவசர அவசியமாக உள்ளது.

"ஒன்றுபட்டு எதிர்கொள்வோம்" என்ற இந்தக் கருத்தரங்கத் தலைப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாகும். ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களுக்கு ஆதாரமான ஊதியத்தில் கை வைக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய தொழிலாளர் மாநாடு என்ற அமைப்பைக் கூட்டவே இல்லை. சமீபத்தில் திருப்பதியில் இந்திய தொழிலாளர் மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு எந்த தொழிற்சங்கமும் அழைக்கப் படவில்லை. பதிலாக அவர்கள் எல்லா தொழிலுக்கும் பொதுவான தேசிய தரைமட்டக் கூலி என அறிவித்திருக்கிறார்கள். குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகவும் குறைவான ரூபாய் 176 என்ற சொற்பத்தொகையை கொடுத்தால் போதும் என்கிறார்கள்.

தோல் மற்றும் தோல் பொருள் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் லட்சம் கோடிகள் அரசுக்கு அந்நிய செலவாணி ஈட்டி தந்த புளோரின்ட் ஷூஸ் பிரைவேட் லிமிடெட், புளோ ரின்ட் அப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் இந்தியா அப்பர்ஸ் லிமிடெட் ஆகிய கம்பெனிகள் திவாலாகி விட்டதாக அதன் முதலாளிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, அதில் பணியாற்றிய ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள்.

ஏஐசிசிடியு மாநிலக் குழுக் கூட்டம் அழைப்பு

2022 ஆகஸ்டு 14, 15 இரு நாட்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஏஐசிசிடியு மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தோழர்கள் சங்கரபாண்டியன், இரணியப்பன், அந்தோணிமுத்து, பாலசுப்பி ரமணியன், சுசீலா, சுகுந்தன் ஆகியோர் கொண்ட குழு தலைமை ஏற்று நடத்தியது. சமீபத்தில் காலமான ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மகேந்திரன், ஏஐசிசிடியு விசைத்தறி தொழிலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் தோழர் மாணிக்கம் மற்றும் மத்திய சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கத் தலைவர் தோழர் ராம்கிஷன் (ஆகஸ்ட் 17 முதலாம் ஆண்டு நினைவு தினம்) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.