பெண்களை குறி வைக்கும் மதவெறி வெறுப்பு பேச்சு, வன்முறைக்கு எதிராக;

விலைவாசி உயர்வு வேலை இல்லா திண்டாட்டத்துக்கு எதிராக போராடுவோம்!

பாசிச மோடியை வெளியேற்றுவோம்!

பெண்கள் பாதுகாப்பு, கவுரவம், உரிமைகளுக்காக அணிதிரள்வோம்!

நாடு தழுவிய இயக்கம்

(ஜூன் 20-27 வரை)

மோடி அரசே,

  1. எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையைக் குறை,
  2. எரிவாயு உருளை வைப்புத்தொகையை ரத்துசெய்;
  3. கிராமப்புர, நகர்ப்புர பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கு;
  4. தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் படம் எடுக்கும் முறையைக் கைவிடு,
  5. 200 நாள் வேலை, ரூ 500 நாள் கூலியை செயல்படுத்து;
  6. அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட திட்டத்தொழிலாளரை நிரந்தரப் படுத்து!
  7. பெண்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்கு, பொருட்களை கொள்முதல் செய்!

மாநில அரசே,

  1. சாதி மறுப்பு திருமண ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் கொண்டு வா;
  2. பெண்கள் பலியாவதை தடுக்க கிராமப்புர, நகர்ப்புரங்களில் 100% கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடு!
  3. பொள்ளாச்சி உள்ளிட்ட பெண்கள், சிறுமிகள் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கு;
  4. ஒன்றியம் தோறும் பெண்கள் குறைதீர்ப்பு மய்யங்கள், பாதுகாப்பான தங்குமிடங்களை ஏற்படுத்து;
  5. தேர்தல் வாக்குறுதிப்படி பெண்களுக்கு உரிமைத்தொகை மாதம் ரூ 1000 வழங்கு;
  6. கெடுபிடி வசூல் செய்யும், பெண்களை இழிவுபடுத்தும் தனியார் நுண்நிறுவனங்கள் மீது கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், தமிழ்நாடு